அனைத்து பாக்கியமும் கிடைக்க 7 நாட்கள் ராகு காலத்தில் இதை மட்டும் செய்து பாருங்கள்.

navagraham

பொதுவாக திருமணம் ஆகாத பெண்கள் துர்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தினுடைய தோலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இதன் மூலம் திருமண பாக்கியம் விரைவாக கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டியும், காரிய வெற்றிக்காகவும் இவ்வாறு வழிபாடு செய்வார்கள். இது எல்லாரும் அறிந்த ஒன்று தான். ஆனால் வாரத்தின் 7 நாட்களுமே ராகு கால வேளையில் நவ கிரகங்களுக்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உகந்த மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடக் கூடிய சக்தி வாய்ந்த வழிபாடு உள்ளது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு மலர் கொண்டு அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு செய்வதால் அனைத்து பாக்கியமும் கிடைக்க பெறும் என்பது நிச்சயம். இதை பற்றிய விரிவான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

navagrahams

‘எல்லா மலர்களும் இறைவனுக்கு மாலையாவதில்லை’ என்ற பழமொழி உண்டு. மலர்களுக்கு கூட இந்த விதிமுறைகள் இருக்கும் போது சாதாரண மனிதனுக்கு இருப்பதில் என்ன ஆச்சரியம் இருந்துவிட போகிறது. எல்லாருக்கும் இறைவனின் அருள் முழுமையாக கிடைத்து விடுவது இல்லை. சிலர் ஒன்றுமே செய்யமாலே நன்றாக தான் இருப்பார்கள். சிலர் விழுந்து விழுந்து பூஜை, புனஸ்காரங்கள் எல்லாம் செய்வார்கள். அவர்களுக்கு நிறைய பிரச்சனைகளும் இருக்கும். நான் தினமும் கோவிலுக்கு செல்கின்றேனே எனக்கு மட்டும் ஏன் விடிவு காலமே இல்லை என்று புலம்புவார்கள். பூஜைகள் செய்வதில் மட்டும் அருள் கிடைத்து விடுவதில்லை. மனதில் உண்மையான பக்தியும், தூய எண்ணங்களும் இருக்க வேண்டும். இவை இரண்டும் கொண்டு வழிபாடுகளும் செய்தால் நிச்சயம் இறைவனின் பார்வை உங்கள் மீது விழும். உங்களது பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறவும் செய்யும்.

1. ஞாயிறுக்கிழமை அன்று ராகு கால வேளையில் நவகிரகங்களில் சூரியனுக்கு வில்வம் மற்றும் பாரிஜாத மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

vellai-alari

2. திங்கட்கிழமை அன்று ராகு கால வேளையில் நவகிரகங்களில் சந்திரனுக்கு வெள்ளை அலரி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

- Advertisement -

3. செவ்வாய்க்கிழமை அன்று ராகு கால வேளையில் நவகிரகங்களில் அங்காரகன் எனப்படுகின்ற செவ்வாய் கிரகத்திற்கு செம்பருத்தி மற்றும் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

senthamarai

4. புதன்கிழமை அன்று ராகு கால வேளையில் நவகிரகங்களில் புத பகவானுக்கு துளசி இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

5. வியாழக்கிழமை அன்று ராகு கால வேளையில் நவகிரகங்களில் குரு பகவானுக்கு சாமந்தி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

Navagraham

6. வெள்ளிக்கிழமை அன்று ராகு கால வேளையில் நவகிரகங்களில் சுக்கிர பகவானுக்கு வெள்ளை அரளி(அலரி அல்ல) மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

7. சனிக்கிழமை அன்று ராகு கால வேளையில் நவகிரகங்களில் சனி பகவானுக்கு சங்குபுஷ்ப மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

blue sangu poo

வாரம் முழுவதும் இந்த ஏழு கிரகங்களுக்கும் ஏழு விதமான மலர்கள் கொண்டு ஏழு நாட்களும் தொடர்ந்து பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெறும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடி வரும். குழந்தை இல்லாத பெண்களுக்கு கூடிய விரைவில் புத்திரபாக்கியம் கிடைக்கும். குடும்ப அமைதிக்காக வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். எந்த விதமான பிரச்சனைகளும் இன்றி நிம்மதி கிட்டும்.

இதையும் படிக்கலாமே
சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்களது வாழ்க்கையையே புரட்டி போடலாம். அப்படி சில எளிய ஆன்மீக வழிகள் இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu kala pooja benefits in Tamil. Rahu kala pooja in Tamil. Rahu kalam pooja procedure. Rahu kala pooja Tamil. Navagraha pooja flowers.