சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்களது வாழ்க்கையையே புரட்டி போடலாம். அப்படி சில எளிய ஆன்மீக வழிகள் இதோ!

nandhi unavu

ஒருவரது வாழ்க்கையையே புரட்டி போதும் அளவிற்கு ஆன்மீக உபாசகங்கள் பல உண்டு. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று சிலர் எண்ணி கொண்டிருந்தாலும் அவர்களுக்கு தகுந்த காலம் வரும் போது இப்படி தான் வாழ வேண்டும் என்று இறைவன் சாட்டையால் அடித்தது போல் உணர்த்துவார். அந்த காலம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கட்டாயம் வரும். வரும் போது நாம் இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே வீண் தான் என்று தோன்றும். இனி வாழ இருக்கும் நாட்கள் இறைவனுக்குரியவை என்பதை உணர்வார்கள்.

praying

அந்த காலங்களில் ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும் இறைவனின் நேரடி தொடர்பில் இருந்தார்கள் என்று பல சான்றுகள் இருந்தாலும், பல மத கோட்பாடுகள் எடுத்துரைத்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். இன்றைய யுகத்தில் நம்மால் அப்படி செய்வது சாத்தியம் ஆகுமா? என்று கேட்டால் பதில் இல்லை. இறைவனை அடைய ஒரு மனிதனுக்கு மனத்தூய்மை கட்டாயம் வேண்டும். உங்களிடம் மனதூய்மையும் இருந்தால் எண்ணங்களும், செயல்களும் தானாகவே நல்லனவாக இருக்கும். எனில் துன்பங்களும் நீங்கி இன்பம் பெருகுவது சுலபமாக ஆகிவிடும் அல்லவா? இப்பதிவில் சில அன்றாட வாழ்வின் எளிய ஆன்மீக குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் மனமும், உடலும் அமைதி கொள்ளும்.

1. சாப்பிடும் போது எப்போதும் முழு வயிறும் நிரம்பும் படி சாப்பிட கூடாது. கால் வயிறு காலியாக இருக்கும்படி விட்டுவிட வேண்டும். இடை இடையே தண்ணீர் குடிக்க கூடாது. கட்டாயம் பழம் சாப்பிட வேண்டும்.

water drink

2. சாப்பிடும் போது எவர்சில்வர், அலுமினிய தட்டை தவிர்த்து, மந்தாரை, வாழை இலைகள் அல்லது வெள்ளி தட்டில் சாப்பிடுவது நல்லது.

- Advertisement -

3. ஆண், பெண் இருபாலரும் இரவினை தவிர்த்து புகையிலை இல்லாத தாம்பூலம் போடுவது நலம் தரும்.

4. நவீன மெத்தைகளை தவிர்த்து வெறும் தரை, கோரை பாய், மரப்பலகைகளில் உறங்குவது நல்லது.

verum-tharai-sleep

5. ராத்திரி சூக்தம் என்கிற ஸ்லோகத்தை உச்சரித்து உறங்க செல்வது நிம்மதியான உறக்கத்தை தரும்.

6. இன்று எதிலும் கலப்படம், எல்லாவற்றிலும் ரசாயனம் இதிலிருந்து நம்மை காத்து கொள்ள தினமும் வில்வம், அருகம்புல், வேப்பிலை, துளசி, கரிசலாங்கண்ணி இவைகளில் கிடைத்த வரை சிறுக சிறுக உடலுக்குள் எடுத்து கொள்வது நலம்.

7. உங்களால் முடிந்த சிறு சிறு பொருட்களை தினமும் சிறுவர், சிறுமியர்களுக்கோ, இயலாதவர்களுக்கோ தானம் செய்வதை வழக்கமாக்கி கொண்டால் உங்களது மனம் சொல்ல முடியாத அளவிற்கு அமைதியை தேடி தரும். வாழும் போதும் சரி, வாழ்ந்து மடிந்து மண்ணுக்குள் சென்ற பின்னாலும் சரி, நீங்கள் செய்த நல்லவைகள் தான் துணையாய் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Water

8. எப்போதும் உங்களுடன் தண்ணீர் இருக்குமாறு பழக்க படுத்தி கொள்ளுங்கள். வெளி இடங்களில் தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பது பல விட நோய்களில் இருந்து நம்மை காக்க உதவும். மிகுந்த அவசரத்திற்கு பிறருக்கு தாகம் தீர்க்கவும் இது உதவி செய்யும்.

9. வாரம் ஒருமுறை சிவாலயம் சென்று நீங்கள் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி நந்தி தேவரின் காதில் சென்று மன்னிப்பு கேளுங்கள். இதனால் உங்களது உள்ளம் நாளடைவில் தூய்மை பெற்றுவிடும் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை.

10. இல்லத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெற்று மன அமைதியை சீர்குலைத்தால் எதிர்மறை தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைந்து உள்ளதாக அர்த்தம். வீட்டின் தளத்தில் சேர்ந்திருக்கும் தூசுகள் கூட இந்த விளைவை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. உடனே அவற்றை நீக்கி சுத்தம் செய்து சாம்பிராணி போட்டு விடுங்கள்.

ottadai

11. வில்வ மரம் மற்றும் வேப்ப மரத்தை தம்பதியர்களாக அடிப்ரதக்ஷணம் செய்தால் ஒற்றுமை ஓங்கும்.

12. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் தேங்காயில் கற்பூரம் வைத்து உங்கள் குழந்தைகளுக்கு திருஷ்டி கழித்து உடைத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

13. விளக்கு ஏற்றி தர்பை பாய் அல்லது பலகையில் அமர்ந்து தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் அதன் ஒளியை பார்த்தபடி தியானம் செய்ய வேண்டும்.

stars

14. விண்ணில் தெரியும் நட்சத்திரம் பார்த்தபடி இதே போல் நட்சத்திர தியானம் செய்வது ஆன்மீக ரீதியாக அளப்பரிய பலன்களை தரும் என்பது பலரும் அறியாத ரகசியமாகும். இதனால் நட்சத்திர அதிபதிகள் நன்மைகளை வாரி வழங்குவார்கள்.

15. வெள்ளரிக்காய், கேரட், பாகற்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி இவைகளை சாரு எடுத்து உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது மட்டும் இல்லாமல் ஆன்மீக பலன்களையும் நல்கும் என்கிறது சித்த நூல்கள்.

16. அவசர யுகத்தில் வழிபாடுகள் செய்ய முடியாவிட்டாலும் முடிந்த போது ஆலயங்களில் கிரிவலம் வருவது முக்தியை பெற்று தரும்.

girivalam

17. நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவையற்ற வேலைகளை செய்யாமல் குடும்பத்துடன் இறை வழிபாடுகள், இறை நாமங்களை உச்சரித்து வருவது பலன் தரும்.

18. வேதங்கள், பாசுரங்கள், அருட்பாக்கள் பாடியவர்கள் இறைவனின் அருளை பெற்றுள்ளார்கள். நம்மில் எத்தனை பேர் இவற்றை படிக்கிறோம்? அவர்கள் அருள் பெற்ற தலங்களுக்கு சென்று கால் பதித்து வந்தாலே போதும். மோட்சம் கிட்டும்.

இதையும் படிக்கலாமே
கேட்டதையெல்லாம் கொடுப்பதோடு, பல கோடி புண்ணியத்தையும் தேடித்தரும் சுந்தர காண்டத்தை ராமநவமியன்று நீங்களும் உச்சரிக்க வேண்டுமா? 5 நிமிடம் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aanmiga kurippugal in Tamil. Aanmeega ragasiyam. Aanmeega seithigal in Tamil. Aanmeega thagaval in Tamil. Aanmeega tips in Tamil.