நிலம், வீடு, வாஸ்து, கடன் போன்ற பிரச்சனைகளை நீக்க, சொந்த வீடு கட்ட ஏற்ற வேண்டிய விளக்கு என்ன? சொல்ல வேண்டிய 4 வரி மந்திரம் என்ன?

- Advertisement -

கடன் பிரச்சினைகள், நிலம் தொடர்பான பிரச்சினைகள், வீடு, வாஸ்து பிரச்சனைகள் அத்தனையும் தீர்வதற்கு இந்த ஒரு விளக்கை ஏற்றினால் போதும். இந்த விளக்கை ஏற்றும் இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பொதுவாக குடும்ப ஒற்றுமைக்கும், நிம்மதிக்கும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைப்பது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில் இந்த விளக்கு அதைவிட சிறந்த பலன்களை கொடுக்க இருக்கிறது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற கனவை நனவாக்க கூடிய இந்த அற்புத விளக்கை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

7-muga-vilakku

காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி தினமும் வழிபட்டு வருபவர்களுக்கு எவ்விதமான துன்பமும் நெருங்காது என்கிறது சாஸ்திரம். அதுபோல ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றுபவர்களுக்கு தடையில்லாத செல்வமும், சுபகாரிய தடைகளும் நீங்கும் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில் இந்த விளக்கு பூமி தோஷம், வாஸ்து தோஷம், கடன் பிரச்சினைகள் அத்தனையும் தீர்க்க பிரத்தியேகமாக ஏற்றப்படுகிறது. குத்து விளக்கில் ஐந்து முகம், ஏழு முகம் என்று வெவ்வேறு முகங்களில் விளக்குகள் கிடைக்கப் பெறுகின்றன. அதில் ஏழு முக விளக்கை பற்றி தான் இந்த பதிவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏழு முக விளக்கை வீட்டில் ஏற்றினால் சொந்த வீடு கனவு சீக்கிரமே நிறைவேறும் என்பது ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த ஏழு முக விளக்கை எப்படி ஏற்ற வேண்டும்? எந்த நாளில் ஏற்ற வேண்டும்? அதற்கான பூஜை முறைகள் என்ன? என்கிற தகவல்களை இனி பார்ப்போம்.

- Advertisement -

ஏழு முக குத்து விளக்கை ஒன்று அல்லது இரண்டு விளக்குகளில் ஏற்றலாம். ஒரு விளக்கு வைத்து ஏற்றினால் கூட போதும். குத்து விளக்கை சுத்தம் செய்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். நல்லெண்ணெய் அல்லது நெய் இதைத் தவிர வேறு எந்த எண்ணெயும் பயன்படுத்தக் கூடாது. 7 முக குத்து விளக்கு ஏற்றும் நேரம் ராகு காலம், எமகண்டம் இந்த இரண்டும் இருக்கக் கூடாது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் ஏற்றுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். உங்களால் முடிந்தால் நீங்கள் தினமும் கூட ஏற்றலாம். 7 முக குத்து விளக்கு ஏற்றும் பொழுது நைவேத்தியம் படைக்க உலர் திராட்சைகள், முந்திரி, பாதாம் அல்லது பழங்கள், பால், கல்கண்டு போன்றவற்றை நிவேதனம் படைக்கலாம். சுத்த அன்னம் மற்றும் வேக வைத்த பருப்பு படைத்தும் வழிபடலாம்.

7-muga-vilakku1

நல்ல நேரம் பார்த்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் பூஜை அறையில் ஒரு சிறிய அளவில் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அந்த கோலத்தின் மீது சிறிய மனை அல்லது பூஜை தட்டு ஒன்றை வைத்து அதில் விளக்கை வையுங்கள். விளக்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள். மனை அல்லது தட்டில் மணமிக்க மலர்களை வையுங்கள். நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றுங்கள். தீபம் ஏற்றிய பின் கீழ்வரும் இந்த மந்திரங்களை வாசியுங்கள். ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த விளக்கு பூஜை அனைவரும் செய்து மேற்கூறிய பலன்களை பெறலாமே!

- Advertisement -

சௌந்தர்யலஹரி பாடல் 23:
த்வயா ஹ்றுத்வா வாமம் வபு-ரபரித்றுப்தேன மனஸா
ஶரீரார்தம் ஶம்போ-ரபரமபி ஶங்கே ஹ்றுதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகலமருணாபம் த்ரினயனம்
குசாப்யாமானம்ரம் குடில-ஶஶிசூடால-மகுடம்!!

kamatchi-amman

சௌந்தர்யலஹரி பாடல் 91:
பதன்யாஸ-க்ரீடா பரிசய-மிவாரப்து-மனஸஃ
ஸ்கலன்தஸ்தே கேலம் பவனகலஹம்ஸா ன ஜஹதி
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர-ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே!!

- Advertisement -