பிள்ளையாரை 7 சனிக்கிழமை இப்படி வழிபட்டால் என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும்.

pillaiyar-prayer

முழு முதற்க்கடவுளான பிள்ளையாரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விக்னங்களை தீர்ப்பவர் ஆயிற்றே!! உங்களது பிரச்சனைகளை மனதார சொல்லி அவரிடம் முறையிட்டாலே உடனே தீர்த்து வைத்து விடுவார். நினைத்த காரியம் தடையின்றி நிறைவேற 7 வாரம் சனிக்கிழமைகளில் தொடர்ந்து எந்த தடங்களையும் எதிர்கொண்டு இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட்டால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். வேண்டிய வேண்டுதல் அப்படியே பலிக்கும். மிகவும் எளிய பரிகாரம் தான். ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரமும் கூட. இந்த பரிகாரத்தை செய்யும் போது இடையில் ஏதாவது சில தடைகள், தடங்கல்கள் வரலாம். செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அதையும் மீறி நீங்கள் முழு முயற்சியுடன் செய்தால் நிச்சயம் பலன் உண்டு. இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? என்று இனி இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

Vinayagar

சனிக்கிழமை இந்த பரிகாரம் செய்வதற்கு, முதல் நாளான வெள்ளியன்று செய்யக்கூடிய அனைத்து பூஜைக்குரிய வேலைகளையும் எப்போதும் போல் செய்து முடித்து பூஜை அறையில் ஒரு கை கொள்ளும் அளவிற்கு விநாயக பெருமானுக்கு உகந்த அருகம்புல்லை எடுத்து கொண்டு வந்து சுத்தம் செய்து வைக்க வேண்டும். மேலும் 2 பெரிய எழுமிச்சை கனிகளையும் வாங்கி வைத்து கொள்ளுங்கள். மறுநாள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து ஸ்நானம் செய்து காலையில் விரதம் இருந்து இந்த பூஜையை செய்ய வேண்டும். ஒரு வேலை விரதம் இருந்தாலே போதுமானது. நாள் முழுவதும் அசைவம் தவிர்த்து சுத்தமாக இருப்பது முக்கியமானது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய முடியாதோர் 8 மணிக்குள்ளாக செய்துவிடுவது நல்லது. அதற்கு மேல் செய்வது பலன் தராது.

ஒரு சிறிய அளவிலான பானையில் தழும்பாத அளவிற்கு நிரம்ப சுத்தமான தண்ணீர் ஊற்றி பூஜையில் வைக்க வேண்டும். எந்த பானையாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் விளக்கேற்றி, தூப தீபம் காண்பித்து உங்களது குல தெய்வத்தை மனதார நினைத்து உங்களுக்கு என்ன குறையோ அதை வேண்டிக் கொள்ளுங்கள். பல மனக்குறைகள் இருக்கலாம். அதில் உங்களுக்கு பிரதானமாக இருக்கும் பிரச்சனையை முன் வைக்கவும். திருமண தடை, கடன் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, கணவன்-மனைவி பிரச்சனை, வேலையில் பிரச்சனை, ஆரோக்கியத்தில் தொல்லை, பிள்ளைகளால் பிரச்சனை என்று எந்த குறையாக இருந்தாலும் பிள்ளையாரிடம் மனமுருகி இந்த மந்திரத்தை கூறி வேண்டிக் கொள்ளவும்.

Vinayagar

மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

- Advertisement -

பின்னர் நிறைகுடத்தில் அருகம்புல்லை எடுத்து நீரில் மூழ்கும் படி வைக்கவும். இந்த குடத்தையும், எழுமிச்சை கனிகளையும் வீட்டு வாசலில் பிரதிஷ்டை செய்திருக்கும் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். எழுமிச்சை பழங்களை பிள்ளையார் மடியில் வைத்து குடத்தில் உள்ள அருகம்புல் நீரை அபிஷேகம் செய்ய வேண்டும். விநாயகர் விக்ரஹம் இல்லாதவர்கள் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த அபிஷேகத்தை செய்யலாம். வன்னி மரத்தடி விநாயகர், அரச மரத்தடி விநாயகருக்கு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானது. அபிஷேகம் முடிந்ததும் இரண்டு எழுமிச்சை கனிகளில் ஒன்றை மட்டும் எடுத்து கொண்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வர வேண்டும். அபிஷேகம் செய்யும் போது இந்த ஸ்லோகத்தை உச்சரிக்கவும்.

arugampul-lemon

ஸ்லோகம்:
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.

இந்த பரிகாரத்தை யாருக்கு பிரச்சனை இருக்கோ அவர்கள் செய்வது தான் நல்லது. உடல் உபாதைகள் காரணமாக ஒரு வாரம் செய்ய முடியாத பட்சத்தில் குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் செய்யலாம். ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்து பயனடையலாம். பிள்ளையாரின் அருள் பெற இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து 7 வாரம் சனிக் கிழமைகளில் செய்து வர எண்ணியது எண்ணியதுபடி தடையின்றி நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே
நாளை பங்குனி உத்திரம்! வீட்டில் இருந்தபடியே இதை செய்தால் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pillaiyar valipadu. Pillaiyar thuthi Tamil. Pillaiyar valipadu in Tamil. Pillaiyar manthiram Tamil.