பூக்களை விரும்பாதவங்க யாராவது இருப்பார்களா என்ன? அதிலும் செடி வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் வளர்க்கும் செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூப்பதை பார்க்கும் போது அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது. இதை செடி வளர்க்கும் ஆசை உள்ளவர்களுக்கு இந்த உணர்வு நன்றாக புரியும். அப்படி நீங்கள் உங்கள் வீட்டில் வளர்க்கும் நித்திய மல்லி செடி சரஞ் சரமாக பூத்து பூக்களை தர வேண்டும் என்றால் வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் இந்த உரத்தை கொடுத்தால் போதும், பூக்கள் நன்றாக பூக்கும் அது என்னவென்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நித்திய மல்லி பூவானது எப்போதுமே பூக்களை கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு சில காலத்தில் பூக்கள் குறைவாக போக்குமே தவிர, பூ இல்லாமல் இருக்காது. ஆகையால் தான் இந்த செடிக்கு நித்திய மல்லி என்று பெயர். ஒரு சின்ன கிளை வைத்து படர விட்டால் போதும், இந்த கொடி நன்றாக படர்ந்து வளரும். ஆனால் அதை கவனமாக பராமரிக்கவும் வேண்டும். செடிகள் வரும் போது அதை குவியலாக ஒரே புறமாக இல்லாமல் செடிகளை இரண்டு மூன்றாக பிரித்து கட்டி விடுங்கள். அப்போது சூரிய ஒளி நன்றாக வேரிலும், சுற்றி இருக்கும் கிளைகளிலும் பட்டு அதிக கிளைகளும், மொட்டுக்களும் வைக்கும்.
அதே போல் ஒரு கிளையில் மொட்டுக்கள் வைத்து பூத்த பிறகு அந்த நுனிக் கிளையை கிள்ளி எடுத்து விட வேண்டும் அப்போது தான் அதைச் சுற்றிலும் அதிகமான கிளைகள் வரும். அது மட்டும் இல்லாமல் இதில் காய்ந்த சருகு இலைகள் அதிகம் சேரும். அதையெல்லாம் அந்தந்த சமயத்திலே அப்புறப்படுத்த வேண்டும். இந்த இலைகளை தூக்கி தூரப் போட வேண்டாம், செடி வைத்திருக்கும் தொட்டியிலே போட்டு விட்டால் போதும் இது செடிகளுக்கு நல்ல உரம்.
இப்போது இந்த செடிக்கு கொடுக்க வேண்டிய அந்த உரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் அதற்கு தேவையானது கடலை புண்ணாக்கு. இந்த கடலை புண்ணாக்கை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து இரவு தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். இதனுடன் சேர்த்து ஒரு ஸ்பூன் வேப்பம் எண்ணெய்யும் கலந்து கொள்ளுங்கள். ஏனென்றால் கடலை புண்ணாக்கு உரத்திற்கு எறும்புகள், பூச்சிகள் வரும் வேப்பம் எண்ணையை அதில் சேர்க்கும்போது பூச்சிகள் வராது, செடியையும் அது தாக்காது.
இரவு முழுவதும் கடலை புண்ணாக்கும், வேப்ப எண்ணையும் ஊறிய தண்ணீர் காலையில் நன்றாக நுரைத்து பொங்கி இருக்கும் .நீங்கள் எடுத்திருக்கும் தண்ணீரின் அளவிற்கு நான்கு பங்கு அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து உங்கள் செடிகளில் வேர்களில் ஊற்றாமல் வேர்களை சுற்றி உள்ள மண் பகுதிகளில் ஊற்றி அதன் மேல் கொஞ்சம் மண் போட்டு மூடி வைத்து விடுங்கள். இதை செய்யும் காலம் மழைக் காலமாக இருக்கக் கூடாது நல்ல வெயில் காலத்தில் செய்யுங்கள். பூக்கள் கொஞ்சம் குறைவாக பூக்கின்ற சமயத்தில் இந்த உரத்தை செடிகளுக்கு கொடுத்தால் அடுத்து பூக்கும் போது அதிக பூக்கள் கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: நீங்கள் வளர்க்கும் செடிகளில் ஒன்று கூட வாடாமல் அனைத்தும் பூத்துக் குலுங்கி, காய்க்க வேண்டுமா? அப்படியென்றால் செடிகளுக்கு மாதம் ஒரு முறை இந்த மாத்திரையை கொடுங்கள்.
இந்த முறை மிக மிக எளிமையான முறை தான், இதை வருடத்திற்கு இரண்டு முறை இந்தச் செடிக்கு கொடுத்து பாருங்கள். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் செடிகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.