நீங்கள் வளர்க்கும் செடிகளில் ஒன்று கூட வாடாமல் அனைத்தும் பூத்துக் குலுங்கி, காய்க்க வேண்டுமா? அப்படியென்றால் செடிகளுக்கு மாதம் ஒரு முறை இந்த மாத்திரையை கொடுங்கள்.

- Advertisement -

செடி வளர்ப்புக்கு எத்தனையோ வகை உரங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் மாத்திரை செடிக்கு உரமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த மாத்திரையை மாதத்துக்கு ஒரு முறை செடிகளுக்கு கொடுக்கும் போது செடிகள் நன்றாக வளர்வதுடன், பூச்சிகள் இல்லாமல் பூக்களும் நன்றாக பெரிய பெரிய தாக பூத்து குலுங்கும். அது என்ன மாத்திரை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செடிகள் எல்லாம் வாங்கும் போது இருப்பதைப் போலவே நம் வீட்டிற்கு வந்து பிறகு இருப்பது இல்லை. 10 செடிகள் வாங்கி வந்தால் அதில் ஒரு இரண்டு செடிகள் ஆவது பட்டுப் போய் விடும். இப்படி ஆகாமல் நீங்கள் வாங்கிய அத்தனை செடிகளும் உங்கள் வீட்டில் பூத்துக் காய்த்து குலுங்க இந்த மாத்திரை ஒரு பெரிய அளவில் உங்களுக்கு உதவி செய்யும். இந்த செடி வளர்ப்புக்கு எடுத்துக் கொள்ளும் இந்த மாத்திரை அஸ் பிரின். இதில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் செடிகள் நன்றாக வளர உதவி செய்யும் இந்த மாத்திரையை செடிகளுக்கு எப்படி உரமாக மாற்றுவது என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

இந்த மாத்திரை உரத்தை தயார் செய்வதற்கு நமக்கு அரிசி களைந்த தண்ணீரையும், சாதம் வடித்த தண்ணீரையும் ஒன்றாக சேர்த்து மூன்று நாட்கள் வரை நன்றாக புளிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் தான் அந்த மாத்திரை உரத்தை நாம் கலந்து செடிகளுக்கு கொடுக்கப் போகிறோம்.

ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் நான்கு மாத்திரை எடுத்து பவுடராக நுணுக்கி போட்டு, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டால் மாத்திரை நன்றாக தண்ணீரில் கரைந்து விடும். மாத்திரை நன்றாக கரைந்த பிறகு இந்த தண்ணீரை நாம் ஏற்கனவே எடுத்து வைத்த அரிசி கலைந்து தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரின் அளவு ஒரு லிட்டர் என்றால் இதற்கு 10 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும் இது தான் அளவு.

- Advertisement -

இதை உரத்தை செடிகளுக்கு இரண்டு வழிகளில் கொடுக்க வேண்டும், ஒன்று ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி செடிகளின் இலைகள், காம்பு போன்றவற்றில் லேசாக தெளித்து விட வேண்டும். இதனால் செடிகளில் இருக்கும் பூச்சிகள் மடிவதோடு, இலை நல்ல பசுமையாகவும் இருக்கும்.

அடுத்து இதை கொஞ்சம் வேர்களுக்கும் உரமாக ஊற்ற வேண்டும். அதிகமாக உற்றாமல் வேர் பகுதியில் லேசாக தெளித்து விடும் போது வேர் நன்றாக பிடித்து சத்துக்கள் அதிகம் சேர்ந்து செடி அதிக மொட்டுக்களையும், கிளைகளையும் வைக்க இந்த முறை உதவும்.

இதையும் படிக்கலாமே: தலைக்கு பயன்படுத்தும் இந்த ஒரு பொருளை வைத்து வெறும் குச்சாக மாறிப் போன ரோஜா செடியை கூட கொத்து கொத்தாக பூக்க வைக்கலாம்.

இதை அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாதம் ஒரு முறை இது போல செய்தால் போதும். நீங்கள் வாங்கி வளர்க்கும் செடிகளில் ஒன்று செடி கூட வீணாகாமல் அத்தனையும் நன்றாக வளர்ந்து பூத்து காய்த்து இருக்கும்.

- Advertisement -