தேவையற்ற முடிகளை உடலில் இருந்து நீக்கி அழகு படுத்திக் கொள்வது இந்த காலத்து இளைஞர்களின் வழக்கமாக இருக்கிறது. தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு வழிமுறைதான் வேக்சிங். எந்த நேரத்தில் வாக்சிங் செய்து கொள்வது சிறந்தது, எந்த நேரத்தில் வேக்சிங் செய்தால் முடி வளர்ச்சி குறையும். எப்போதெல்லாம் வேக்சிங் செய்யவேக்கூடாது என்பதை பற்றிய சில அழகு குறிப்பு பற்றித்தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நீங்கள் தொடர்ந்து வாக்சிங் செய்வார்களாக இருந்தால் பின் சொல்லக்கூடிய குறிப்பை படித்து பயன்பெறலாம். அல்லது இப்போதுதான் புதியதாக வாக்சிங் செய்ய போறீங்க அப்படி என்றாலும் பின் சொல்ல கூடிய குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
நம்முடைய சருமத்தின் பாதுகாப்பிற்காக தான் உடலில் ரோம வளர்ச்சி இருக்கின்றது. அளவான ரோமங்கள் நம்முடைய உடம்பில் இருப்பதன் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. அழகு என்ற ஒரு காரணத்திற்காக மட்டும்தான் அந்த முடிகளை நாம் நீக்குகின்றோம். அளவுக்கு அதிகமாக உடம்பில் ரோமங்கள் வளரும்போதுதான் ஆரோக்கிய ரீதியாகவும், சில பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கிறது. அழகு ரீதியாகவும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதிகமான ரோம வளர்ச்சி ஹார்மோன்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினையினாலும் வரும். அப்படி உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
வேக்சிங் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை:
கோடை காலத்தை விட, குளிர்காலத்தில் நம்முடைய உடம்பில் முடி வளர்ச்சி கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதிகப்படியான முடி வளர்ச்சி இருக்கும்போது அதை நாம் வேக்சிங் செய்யும் போது முடி வேர்க்கால்களோடு நீக்கப்படும். வேர்க்கால்களோடு முடிகள் நீக்கப்பட்டால் அந்த இடத்தில் முடியின் வளர்ச்சி தடைப்படும். அந்த இடத்திலிருந்து மீண்டும் முடிகள் வளர நீண்ட நாட்கள் எடுக்கும். வேரோடு முடிகள் நீக்கப்பட்ட இடத்திலிருந்து, மீண்டும் முடி வளர்ந்தாலும் ரொம்பவும் அடர்த்தியாக வளராது. ஆகவே குளிர்காலங்களில் உங்களுடைய உடம்பில் இருக்கும் ரோமங்களை வேக்சிங் செய்து கொள்வது ரொம்ப ரொம்ப சிறந்தது என்று நிபுணர்களால் சொல்லப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் வேர்க்கால்களோடு முடியை அகற்றுவதன் மூலம் வெயில் காலம் வரும்போது நம்முடைய சருமத்தில் இருந்து வளரக்கூடிய முடி ரொம்பவும் மெல்லிசாக வளரும். பிறகு அதை நீக்குவதில் நமக்கு சிரமம் இருக்காது. முடி வளர்ச்சியும் ஓரளவுக்கு குறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
குளிர்காலத்தில் நம்முடைய சருமம் ரொம்பவும் வறட்சியாக இருக்கும். வறட்சியான சருமத்தில் வேக்சிங் செய்யும் போது அதில் இருக்கும் இறந்த செல்களும் சேர்ந்து நீங்கிவிடும். ஆனால் குளிர்காலத்தில் வேக்சிங் செய்யும் போது உங்களுடைய சருமத்தில் ரேஷஸ் அதிகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சருமத்தில் சிவப்பான புள்ளிகள், கருப்பான புள்ளிகள் அதிகம் தோன்றும். ஆகவே வாக்சிங் செய்த பிறகு அதன் மேலே மாய்ஸ்ரைசர் அப்ளை செய்து கொள்ள வேண்டும். கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து தான் குளிர்காலத்தில் வேக்சிங் செய்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
உடற்பயிற்சி செய்தவுடன் பார்லருக்கு சென்று வாக்சிங் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியர்வை உடம்போடு வேக்சிங் செய்து கொள்ளக் கூடாது. ஆல்கஹால் எடுத்துக் கொண்ட பிறகும் ஒரு சில மணி நேரத்திற்கு உடனடியாக வேக்சிங் செய்யக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் வாக்சிங் செய்த பிறகு குளிர்ந்த தண்ணீரில் சருமத்தை கழுவலாம். ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தடிப்புகள் வருவதை தடுக்க முடியும். மேலே சொன்ன இந்த சின்ன சின்ன குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.