ரேஷன் பாமாயிலை அதிகமாக யாரும் பயன்படுத்துவது கிடையாது. காரணம் அதில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இதனால் பித்தம், அதிகமாகி தலைச் சுற்றல் மயக்கம் போன்றவை வரும். இது போன்ற காரணங்களால் இந்த எண்ணையை கண்டாலே பலருக்கு அலர்ஜியாகி விடுகிறது. இந்த வீட்டு குறிப்பு பதிவில் இந்த எண்ணெய் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் எப்படி உபயோகிக்க வேண்டும் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு புறம் இந்த எண்ணெயை வேண்டாம் என்று பலர் ஒதுக்கினாலும் கூட, வேறு வழி இல்லாமல் இதை தான் சமைக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இன்றளவும் பல குடும்பங்கள் உள்ளது. அவர்கள் இதை அப்படியே தான் பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது இந்த ரேஷன் பாமாயில் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் அதை எப்படி முறிய வைப்பது என்பதுடன், அதன் கவரை கூட எப்படி பயன்படுத்தலாம் என்பதை எல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ரேஷன் பாமாயிலை முறிய வைக்கும் முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு அகலமான கடாய் வைத்து சூடானதும் அதில் ரேஷன் பாமாயில் கட் செய்து ஊற்றி விடுங்கள். எண்ணெய் ஒரு புறம் நன்றாக காயட்டும். அடுத்ததாக ஒரு தட்டில் 50 கிராம் புளி, கொஞ்சம் கல் உப்பு இரண்டு வர மிளகாய் மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள் (வர மிளகாய்க்கு பதில் இஞ்சி கூட பயன்படுத்தலாம்). கல் உப்பையும், புளியையும் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம்.
புளியுடன் உப்பு சேரும் போது உப்பிலிருந்து தண்ணீர் விட்டு புளியும் உப்பு நன்றாக கலந்து வரும். அதன் பிறகு வர மிளகாவை புளியின் உள்ளே வைத்து ஒரு பால் போல உருட்டிக் கொள்ளுங்கள். இப்போது எண்ணெய் நன்றாக காய்ந்து கொண்டு இருக்கும். இந்த நேரத்தில் புளி உருண்டையை அதில் போட்டு விடுங்கள். எண்ணெய் நன்றாக கொதித்து புளி கறுத்து ஓடு போல ஆகி மேலே மிதந்து வரும். அது வரையில் எண்ணெய் அடுப்பில் மிதமான தீயில் இருக்க வேண்டும்.
அதன் பிறகு இந்த எண்ணையை வடிகட்டி எடுத்து ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த எண்ணெய் நாம் கடையில் வாங்கும் மற்ற எண்ணெய்களை போலவே தரமானதாக இருக்கும். புளியுடன் சேர்த்து உப்பு, காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கொதிக்கும் போது அதல் இருக்கும் பித்தம், கொழுப்பு அனைத்தையும் எடுத்து விடும். இப்படி செய்யும் போது எண்ணெய்யும் கொஞ்சம் கூட நிறம் மாறாமல் கடையில் வாங்கும் எண்ணெய் போல நன்றாக இருக்கும். எண்ணைய் பயன்படுத்தும் போது அடியிலும் கசடு எதுவும் தாங்காது.
இதை ஊற்றிய பிறகு இந்த கவரை கூட வீணாக்காமல் அதில் ஒட்டி இருக்கும் எண்ணெயை நம் வீட்டில் பயன்படுத்தும் கத்தி, அருவாமனை, தேங்காய் சீவல் போன்றவற்றின் மீது கவரில் இருக்கும் எண்ணெய் நன்றாக தேய்த்து விடுங்கள். இதனால் இந்த இரும்பு பொருட்கள் எல்லாம் துருப்பிடிக்காமல் இருக்கும். மற்ற எண்ணெயும் தேய்க்கலாம் ஆனால் இந்த ரேஷன் பாமாயில் திக்காக இருக்கும் அதனால் இதை வைத்து தேய்க்கும் போது அதிக நாள் துருப் பிடிக்காமல் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: ஓயாத பல்லி நடமாட்டத்தால் சமையலறை மேடையில், சமைத்த உணவுப் பொருட்களை வைக்கவே உங்களுக்கு பயமா இருக்குதா? பல்லியை ஒழித்துக் கட்ட எளிமையான தீர்வு இதோ உங்களுக்காக.
நீங்களும் இனி ரேஷன் பாமாயில் வாங்கினால் அதை இந்த முறையில் முறித்து பயன்படுத்துங்கள். இதனால் எந்த ஒரு கெடுதலும் ஏற்படாது. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.