ஓயாத பல்லி நடமாட்டத்தால் சமையலறை மேடையில், சமைத்த உணவுப் பொருட்களை வைக்கவே உங்களுக்கு பயமா இருக்குதா? பல்லியை ஒழித்துக் கட்ட எளிமையான தீர்வு இதோ உங்களுக்காக.

palli
- Advertisement -

வீட்டில் பல்லி இருப்பது நல்லது என்று சொல்லுவாங்க. ஆனால், சமையலறையில் ஓயாமல் பல்லி நடமாடிக் கொண்டே இருந்தால் அதை நிச்சயமாக இல்லத்தரசிகளால் பொறுத்துக் கொள்ள முடியாது. குழந்தைக்கு பால் காய்ச்சினாலும், தண்ணீர் காய்ச்சி, சமையல் மேடையில் வைத்தாலும் அந்த பாத்திரத்தின் மேலே பல்லி விழுந்து விடுமோ என்ற பயம். சமைத்த சாதம் குழம்பு இவைகளை அவ்வளவு பத்திரப்படுத்தி மூடி வைக்க வேண்டும்.

கரண்டியோடு மேலே தட்டு போட்டு மூடி வைத்தால் அந்த கேப்பில் பல்லி விழுந்து விடுமோ என்ற பயம் நிறைய பேருக்கு இருக்கும். அவ்வளவு பல்லி நடமாட்டம். குட்டி பல்லியில் இருந்து, பெரிய பல்லி வரை தொல்லை தாங்கவே தாங்காது. இந்த பல்லி பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க எளிமையான வீட்டுக் குறிப்பையும், எரும்புத் தொல்லையிலிருந்து விடுபட ஒரு எளிமையான வீட்டு குறிப்பு இரண்டையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பல்லி தொல்லை நீங்க:
ஒரு சின்ன கிண்ணம் எடுத்துக்கோங்க. அதில் டெட்டால் ஒரு மூடி, எலுமிச்சை பழச்சாறு ஒரு மூடி, லைசால் ஒரு மூடி, வாசனை நிறைந்த கம்ஃபோர்ட் அல்லது வேறு பிராண்டில் இருக்கும் எந்த வாசனை திரவியமாக இருந்தாலும் அதில் ஒரு மூடி ஊற்றி, இதை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த லிக்விட் வாசம் உள்ள இடத்தில் நிச்சயமாக பல்லி வரவே வராது.

உங்கள் வீட்டில் இருக்கும் பழைய காட்டன் துணிகளை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் பஞ்சு இருந்தால் அதைக் கூட இந்த குறிப்புக்கு பயன்படுத்தலாம். காட்டன் துணி அல்லது பஞ்சை இந்த லிக்விடில் நன்றாக நனைத்து அதை அப்படியே பல்லி நடமாடும் இடத்தில் வைத்து விடுங்கள். சமையல் மேடை, கேஸ் ஸ்டவ்வுக்கு அடியில், இந்த காட்டன் துண்டுகளை வைத்து விட்டால் இதிலிருந்து வெளிவரக் கூடிய வாசத்திற்கு நிச்சயமாக பல்லி வராது.

- Advertisement -

சமையல் மேடையில் நீங்கள் சமைத்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு அதற்கு நடுவே இந்த லிக்விடில் முக்கி எடுத்த துணியை வைத்து விட்டால், அந்த சமைத்த சாப்பாட்டு பொருள்களின் அருகில் பல்லி வராமல் இருக்கும். ஒரு சிறிய கிண்ணத்தில் லிக்விடை எல்லாம் சேர்த்து கலந்து ஒரு கலவையை தயார் செய்து வைத்திருக்கிறோம் அல்லவா, அதில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி கலக்க வேண்டும்.

அதாவது லைசால் வாசம் டெட்டால் வாசம் எல்லாம் நீங்க கூடாது. கால் கப் அளவு தண்ணீரை ஊற்றி கலந்து அந்த தண்ணீரில் ஒரு துணியை நனைத்து, அந்த துணியை கொண்டு சமையல் அறை அலமரியில் எல்லாம் துடைத்துவிட்டு அதன் பின்பு மளிகை பொருட்களை அடுக்கி வைத்தால் அந்த இடத்தில் கூட பல்லி போய் தங்காமல் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

எறும்பு தொல்லை நீங்க:
ஒரே ஒரு எரும்பு சாக்லீஸை எடுத்து கோடு கிழித்தால் முடிந்தது. எறும்பு தொல்லை நீங்கியது. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் குழந்தைகள் இருக்கக்கூடிய இடத்தில் அல்லது குழந்தைகள் சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் அடுக்கி வைத்திருக்கும் டப்பாவை சுற்றியெல்லாம் எறும்பு சாக்பீஸ் கிழிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. குழந்தைகள் அந்த சாக்பீஸை தொட்டுவிட்டு அப்படியே அதே கையால் ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடும்.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்களை கஷ்டப்பட்டு தேய்த்து சுத்தம் செய்யாமல் 10 நிமிடத்தில் அத்தனை பொருட்களையும் பளபளன்னு ஜொலிக்க செய்வது எப்படி?

ஆகவே எறும்பு சாக் பீசுக்கு பதில் முகத்துக்கு போடும் பவுடரை பயன்படுத்தி பாருங்கள். முகத்திற்கு போடும் பவுடரை வட்டமாக கொட்டி அப்படியே தடவி விட்டு விடுங்கள். அதன் நடுவே ஸ்னாக்ஸ் டப்பாவை வைத்தால் நிச்சயமாக ஸ்நாக்ஸ் டப்பாங்கு உள்ளே எறும்பு வராது. உங்களுடைய வீட்டில் அடிக்கடி எறும்பு வரக்கூடிய பகுதியில் கூட கொஞ்சமாக பவுடரை கொட்டி பாருங்கள். இருந்த எறும்பும் காணாமல் போகும். புதியதாக அந்த இடத்தில் எறும்பும் வராமல் இருக்கும். இது ஒரு எளிமையான குறிப்பு தான் ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு ஒர்க் அவுட் ஆச்சுன்னா குறிப்பை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -