நாமே பார்த்திருப்போம் ஒரு தொழிலை பத்து பேர் செய்யும் போது பத்து பேரும் அதில் முன்னுக்கு வருவதில்லை. ஒரு சிலர் மட்டுமே வருவார்கள் மற்றவர்கள் வராததற்கு காரணம் அவர்கள் உழைக்காமல் இருப்பார்களா என்ன? அதற்கான நேரம், சூழ்நிலை, இருக்கும் திசை இவையெல்லாம் கூட ஒரு காரணம் தான். வீட்டிலும் அதே போல தான் என்ன தான் சம்பாதித்து கொண்டு வந்தாலும் ஒரு ரூபாய் கூட நம்மால் எடுத்து வைக்க முடியாது. வீண் விரயங்களும், மருத்துவ செலவுகளும் தேவையில்லாத வட்டி கடன்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் இவை எல்லாம் சரி செய்ய இந்த எளிய பரிகாரம் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பரிகாரமானது எலுமிச்சை பழத்தை தண்ணீரில் போட்டு வைப்பது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் என்று நீங்கள் நினைக்க கூடும். ஆனால் இத்துடன் ஒரு சில பொருட்களை சேர்த்து வைக்கும் போது, நமக்கும் நம் வீட்டிற்கும் நல்ல ஆற்றலை அதிகப்படுத்துவதுடன், நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை எப்போதும் தந்து கொண்டே இருக்கும்.
வியாபாரம் செய்யும் இடங்களாகட்டும், தொழில் நிறுவனங்களாகட்டும், அங்கெல்லாம் நீங்கள் இந்த பொருளை கட்டாயம் பார்த்திருப்பீர்கள் ஒரு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை பழத்தை போட்டு வைத்திருப்பார்கள். எலுமிச்சை பழம் எப்போதும் அது இருக்கும் இடத்தில் நேர்மறை ஆற்றலை கொடுத்துக் கொண்டே இருக்கும். எதிர்மறை ஆற்றலை அது எடுத்துக் கொள்ளும். இப்படி பயன்படுத்தும் இந்த எலுமிச்சை பழத்துடன் பச்சை கற்பூரத்தையும் சேர்க்க வேண்டும். பச்சை கற்பூரமானது மகாலட்சுமி தாயாரின் அம்சம் நிறைந்த பொருள். அந்த பொருள் இருக்கும் இடத்தில் நல்ல பணவரவை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
இவற்றுடன் சேர்க்க வேண்டியது கொத்தமல்லி. கொத்தமல்லியா? என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது. இந்த கொத்தமல்லிக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி, அந்த இடத்தில் நேர்மறை ஆற்றலை கொண்டு வர கூடிய சக்தி உண்டு. அதுவும் இந்த பொருட்களுடன் சேரும் போது அதன் பலனானது பன்மடங்கு அதிகமாகவே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதே முறையில் உங்கள் வீட்டில் செய்யும் போது வீட்டில் வரவேற்பறையில் ஒரு கண்ணாடி பவுலில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழம், பச்சைக் கற்பூரம் கொத்துமல்லி தழைகளை போட்டு வைத்து விடுங்கள். இதை வைக்கும் இடம் வீடாகட்டும், கடையாகட்டும் மற்றவரின் பார்வை இதன் மேல் படும்படியாகத் தான் வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடலளவு கடனையும் காணாமல் போக செய்ய ஒரே ஒரு கல் உப்பு போதும். கடன் அடைய மிக மிக சுலபமான பரிகாரம்.
இதைத் தொடங்கும் போது எப்போது வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் பொருட்களில் நிறம் மாறினாலோ அல்லது அழுகி போனால் அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட்டு, புதிதாக வேறு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை போக்கி, நேர்மறை ஆற்றலை பெருகி அதன் மூலம் நல்ல முறையில் உங்கள் தொழிலில் வருமானத்தை பெருக்கி கொள்ளுங்கள்.