- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஆரோக்கியம் நிறைந்த பருப்பு கீரை கடையல் அடிக்கடி இப்படி எளிதாக செய்து சாப்பிடலாம்

ஆரோக்கியம் நிறைந்த பருப்பு கீரை கடையல் அடிக்கடி இப்படி எளிதாக செய்து சாப்பிடலாம்

- Advertisement -

பருப்பு கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. குறிப்பாக இதில் இருக்கக்கூடிய ஒமேகா 3, கால்சியம், விட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் போன்றவை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அதிகம் தேவைப்படக்கூடிய சத்துக்களாக இருக்கிறது. வாரம் ஒரு முறையாவது பருப்பு கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது. பருப்பு கீரை கடைசல் ரொம்ப சுலபமாக பசுமை நிறம் மாறாமல் கடைவது எப்படி? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

பருப்பு கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
பருப்பு கீரை – ஒரு கட்டு, துவரம் பருப்பு – நூறு கிராம், சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் – 20, பெரிய தக்காளி – 3, பச்சை மிளகாய் – 4, பூண்டு – அரை கைப்பிடி, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 2.

- Advertisement -

பருப்பு கீரை கடையல் செய்முறை விளக்கம்:
இந்தக் கீரை கடையலுக்கு துவரம் பருப்பு, சிறு பருப்பு போன்றவற்றை சேர்த்து கடையலாம். 100 கிராம் துவரம் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைத்து குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகள், காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் சேர்த்து கடைந்தால் நன்றாக இருக்கும்.

15லிருந்து 20 சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேருங்கள். சின்ன வெங்காயம் இல்லை என்றால் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கைப்பிடி அளவிற்கு பூண்டு பற்களை தோலுரித்து சேருங்கள். மிளகு, சீரகம், மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து கலந்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் எண்ணெய் மேலே ஊற்றி குக்கரை மூடி மூன்றிலிருந்து நான்கு விசில் நன்கு விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மத்து போட்டு கடைந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள ஒரு கட்டு பருப்பு கீரையை சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். கீரை மசியல் இதிலேயே நன்கு கெட்டியாக வெந்து வர வேண்டும். கீரை வேகுவதற்கு பத்து நிமிடம் எடுக்கும். திறந்த நிலையில் இப்படி கீரையை வேக வைத்தால் தான் நிறம் மாறாது, சத்தும் குறையாது.

இதையும் படிக்கலாமே:
பிரியாணியே தோத்து போற அளவுக்கு இந்த டிஷ், செம டேஸ்டா இருக்கும். இதை முறை செஞ்சிட்டீங்கன்னா, அடிக்கடி இதையே செய்ய சொல்லி கேட்பார்கள்.

கெட்டியாக கீரை வெந்து வந்த பின்பு இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து கடுகு, உளுந்து, வர மிளகாய் போட்டு தாளித்து, இதனுடன் சிறிதளவு வெங்காய வடகம் சேர்த்து வறுக்கலாம். அப்படி இல்லாதவர்கள் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு போட்டு நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்த பின்பு கீரையில் சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவுதான், சூப்பரான இந்த பருப்பு கீரை மசியல் ரொம்ப ஈசியாக பசுமை மாறாமல் பச்சை பசேலென பாரம்பரியத்துடன் தயார்! நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

சற்று முன்