- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பிரியாணியே தோத்து போற அளவுக்கு இந்த டிஷ், செம டேஸ்டா இருக்கும். இதை முறை செஞ்சிட்டீங்கன்னா,...

பிரியாணியே தோத்து போற அளவுக்கு இந்த டிஷ், செம டேஸ்டா இருக்கும். இதை முறை செஞ்சிட்டீங்கன்னா, அடிக்கடி இதையே செய்ய சொல்லி கேட்பார்கள்.

- Advertisement -

விசேஷ நாட்கள் என்றாலே இப்பொழுதெல்லாம் பிரியாணி தான் ஸ்பெஷல். முன்பெல்லாம் பிரியாணி என்றால் என்றாவது ஒரு நாள் செய்யும் உணவாக தான் இருந்தது. இப்பொழுது எதற்கெடுத்தாலும் பிரியாணி தான். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் செய்யப்படும் நெய் பிரியாணி அந்த பிரியாணியின் சுவையே தோற்கடித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதிஅரிசி – 1 கப், வெங்காயம் – 3, தக்காளி -2, பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், தயிர் -1/4 கப், தேங்காய் பால் – 1 கப், பட்டை ,லவங்கம், ஏலக்காய், புதினா -1 கைப்பிடி, கொத்தமல்லி – 1 கைப்பிடி, கருவேப்பிலை -1 கொத்து, உப்பு -1 டீஸ்பூன், முந்திரி -10, நெய் – 5 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

இந்த பிரியாணியை தாளிக்கும் முன்பு பாஸ்மதி அரிசியை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வைத்து நான்கு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்தவுடன் மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக பொரிய விடுங்கள். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து பாதி அளவு வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் பச்சை மிளகாயை கீறி சேர்த்து அதுவும் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து லேசாக பிரட்டி விடுங்கள். தக்காளி அதிகம் வதங்க வேண்டாம்.

- Advertisement -

இப்போது தயிர், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு, ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் இது தான் கணக்கு. இதில் ஒரு கப் தேங்காய் பாலும் அரை கப் தண்ணீரும் சேர்த்து ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊற வைத்த அரிசியை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் சேர்த்து விடுங்கள்.

அரிசி சேர்த்து பின் உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து நன்றாக கொதிக்க விடுங்கள். இவை ஒரு கொதி வந்த பிறகு குக்கர் மூடியை போட்டு அடுப்பை லோ ஃபிலிமில் ஒரு விசில் வரை விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஸ்டவை அனைத்து விடுங்கள். இப்போது ஒரு சின்ன தாளிப்பு கரண்டி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானவுடன் முந்திரி சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குக்கர் மூடியை திறந்து வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து இதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக ஒரு முறை கலந்து விடுங்கள். அதிகமாக கரண்டி வைத்து கலந்தால் சாதம் உடைந்து விடும்.

அவ்வளவு தான் சுவையான நெய் பிரியாணி தயாராகி விட்டது. இதற்கு சைவம் சாப்பிடுபவர்கள் காளான், மஸ்ரூம் கிரேவி போன்றவற்றை வைத்து சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுவதற்கு இது சிக்கன் கிரேவி வைத்தால் சரியான காம்பினேஷன் ஆக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஒரு கைப்பிடி புதினா இருந்தா கொஞ்சம் வித்தியாசமா இப்படி ஒரு முறை சட்னி செஞ்சு பாருங்க. இதுக்கு அப்புறம் எப்ப புதினா வாங்கினாலும் இப்படி தான் சட்னி அரைப்பீங்க.

இது போல செய்தால் இனி பிரியாணி வேண்டுமென்று கேட்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த சாதம் ருசியாக இருக்கும் நீங்களும் ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்