- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamil10 நிமிஷத்தில் ஃபேசியல் செய்தது போல எஃபெக்ட் கிடைக்க வீட்டில் இருக்கும் இந்த ஒரே ஒரு...

10 நிமிஷத்தில் ஃபேசியல் செய்தது போல எஃபெக்ட் கிடைக்க வீட்டில் இருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்! அது என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

- Advertisement -

நம்ம முகம் எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும் என்று சொல்ல முடியாது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவற்றை அகற்றுவதற்கு மாதம் ஒருமுறை ஆவது பார்லருக்கு போய் ஃபேசியல் செய்து கொள்வது சிலருடைய வழக்கமாக இருந்து வருகிறது. டக்குன்னு எங்கேயாவது வெளியே கிளம்பனும் அப்படின்னா இதுக்கெல்லாம் நேரமே இருக்காது. 10 நிமிடத்தில் இந்த ஒரே ஒரு பொருளை வைத்து இப்படி செய்து கொண்டால், ஃபேசியல் செய்யும் பொழுது எவ்வளவு எஃபெக்ட் நம்ம முகத்தில் இருக்குமோ, அதே அளவிற்கு பளிச்சின்னு இருக்கும். அப்படி நாம எந்த பொருளை பயன்படுத்த போகிறோம்? எப்படி அதை பயன்படுத்த வேண்டும்? என்பது போன்ற அழகு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முகத்தை எப்பொழுதும் பிளீச் செய்தது போல பளிச்சுன்னு இருக்க உருளைக்கிழங்கு ஜூஸ் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு முகத்திற்கு நல்ல ஒரு ப்ளீச்சிங் எஃபெக்ட் கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒரு பத்து நிமிடம் உருளைக்கிழங்கு சாறு பூசி உலர விட்டுப் பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை துடைத்து எடுத்தால் முகம் பிளீச் செய்தது போல நல்ல ஒரு எஃபக்டிவ் ஆன ஜொலிப்புடன் இருக்கும்

- Advertisement -

ஃபேசியல் செய்தது போன்ற பளபளப்பு கிடைப்பதற்கு முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளை கருவில் ஏராளமான சத்துக்கள் உண்டு. இதை முகத்தில் இந்த முறையில் பயன்படுத்தும் பொழுது ஃபேசியல் செய்யாமலேயே ஃபேசியல் செய்தது போன்ற ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

முதலில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவிற்கு ஒன்றோ அல்லது இரண்டு முட்டைகளையும் உடைத்து அதில் இருக்கும் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய முகத்தை சாதாரண தண்ணீரால் முதலில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு முட்டையின் வெள்ளை கருவை உங்களுடைய கைகளால் எடுத்து நெற்றியில் இருந்து ஆரம்பித்து, எல்லா பகுதிகளிலும் நன்கு தடவி கொள்ளுங்கள். கண்கள் மற்றும் உதடுகளில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மற்ற இடங்களில் நன்கு தேய்த்த பின்பு ஒரு டிஷ்யூ பேப்பரை சிறு சிறு துண்டுகளாக கிழித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய முகத்தில் எல்லா இடங்களிலும் ஒவ்வொன்றாக ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். டிஷ்யூ பேப்பரை முகம் முழுவதும் ஒட்டிய பின்பு, மீதம் இருக்கும் முட்டையின் வெள்ளை கருவை டிஷ்யூ பேப்பரின் மீதும் சிறிதளவு நன்கு தடவ வேண்டும். இதனால் முக துவாரங்களுக்குள் வெள்ளை கருவின் சாறு ஊறி இருக்கும். உள்ளிருந்து கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், இறந்த செல்கள் போன்றவற்றை அகற்றி விடும்.

இதையும் படிக்கலாமே:
பாதங்களில் உள்ள வெடிப்பு மறைந்து பட்டு போன்ற மென்மையான பாத அழகை பெற இதோ எளிமையான வழி. இத மட்டும் செஞ்சு பாருங்க இனி உங்க பாதத்தில் வெடிப்பு வரவே வராது.

ஒரு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் காற்றில் நன்கு உலர விடுங்கள். உலர்ந்து காய வேண்டும். காய்ந்ததும் அப்படியே உரித்து எடுக்கும் அளவிற்கு அது ஒட்டிக்கொண்டு விடும். பீல் ஆஃப் மாஸ்க் போல செயல்படும் இதை, இப்பொழுது மெதுவாக உரித்து எடுங்கள். பின் ஏதாவது ஒரு ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை அலம்பி கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க,, முகம் முன்பு இருந்ததை விட பத்து மடங்கு பொலிவுடன் இருக்கும். நீங்கள் பார்லருக்கு சென்று பத்து பைசா கூட செலவு பண்ண தேவையில்லை. இந்த ஒரே பொருளில் உங்க முகம் ஃபேஷியல் செய்தது போல ஜொலிக்கும்.

சற்று முன்