பாதங்களில் உள்ள வெடிப்பு மறைந்து பட்டு போன்ற மென்மையான பாத அழகை பெற இதோ எளிமையான வழி. இத மட்டும் செஞ்சு பாருங்க இனி உங்க பாதத்தில் வெடிப்பு வரவே வராது.

- Advertisement -

நம் உடல் ஆரோக்கியத்தில் எந்த அளவிற்கு அக்கறை கொள்கிறோமோ, அதே அளவு அக்கறையை பாத அழகிலும் காட்ட வேண்டும். பாதத்தில் வெடிப்பு வருவதற்கு முக்கியமான காரணமே கிருமிகள், பூஞ்சை தொற்று தான். நம் முழு உடம்பையும் தாங்கும் இந்த கால்களையும், பாதத்தையும் நாம் கவனமாக பராமரித்தால் தான் நல்லது. இந்த பாத வெடிப்பை ஆரம்பத்திலேயே சரி செய்யா விட்டால், இது பெரிய அளவில் புண்ணாகி வலி எடுக்கும் அளவிற்கு மாறி விடும். அப்படியான பாதங்களை கூட ஒரே வாரத்தில் சரி செய்து அழகான பாதை பெற இந்த முறையை பின்பற்றலாம் வாங்க அது என்னவென்று இந்த அழகு குறிப்பு பதிவு செய்யலாம்.

பாதங்களில் உள்ள வெடிப்பு கால் இடுக்குகளில் பூஞ்சை தொற்று சேற்றுப்புண் போன்ற அனைத்தையும் கூட, இந்த முறையில் சுலபமாக சரி செய்து விடலாம். இதை செய்வதற்கு முன் நாம் பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

- Advertisement -

பாதங்களில் உள்ள வெடிப்பை குணப்படுத்தும் எளிமையான வீட்டு வைத்தியம்:
இதற்கு ஒரு கைப்பிடி அளவிற்கு வேப்பிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் கொஞ்சம் கல் உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் இவை மூன்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து பாத்திரத்தில் முக்கால் பாகம் வரை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது உங்கள் பாதம் மூழ்கும் படியான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றிய பிறகு உங்களுக்கு சூடு பொறுக்கும் அளவிற்கு சாதாரண தண்ணீரை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது வெதுவெதுப்பான அந்த தண்ணீரில் உங்கள் பாதங்களை வைத்து பத்து நிமிடம் வரை அப்படியே வைத்திருங்கள். இந்த நேரத்தில் உங்கள் பாதங்களை ஸ்கிரப் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு தேங்காய் நார் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. தேங்காய் நார் இல்லாத பட்சத்தில் உப்பு காகிதம் வைத்தும் தேய்க்கலாம். இந்த முறையில் பாதங்களின் மேல் பதிந்திருக்கும் அழுக்குகள் இறந்த செல்கள் போன்றவை வெளியேறி விடும்.

- Advertisement -

அதன் பிறகு உங்கள் பாதத்தை சுத்தமான துணி வைத்து துடைத்து விடுங்கள். இப்போது ஒரு வெள்ளை மெழுகுவத்தி எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு ஸ்பூன் அளவிற்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த தண்ணீரில் நீங்கள் எடுத்து வைத்த மெழுகு, கடுகு எண்ணெய் சேர்ந்த கலவை கிண்ணத்தை வைத்து விடுங்கள். அந்த சூட்டிலே மெழுகு கரைந்து கடுகு எண்ணெயுடன் நன்றாக கலந்து விடும்.

இப்போது உங்கள் பாதத்தை ஈரம் இல்லாமல் சுத்தமாக துடைத்த பிறகு இந்த மெழுகு, கடுகு எண்ணெய் கலவையை உங்கள் பாதங்களில் நன்றாக தடவிய பிறகு ஒரு காலுறையை அணிந்து கொள்ளுங்கள். இது இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். அடுத்த நாள் காலையில் இந்த காலுறையை கழற்றிய பிறகு மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் உங்கள் பாதங்களை வைத்து பிறகு துணி வைத்து துடைத்து விடுங்கள். அதன் பிறகு வெடிப்பு உள்ள இடங்களில் சுத்தமான தேங்காய் எண்ணெயை லேசாக தேய்த்து விடுங்கள்.

- Advertisement -

இந்த முறையை ஒரே ஒரு வாரம் மட்டும் தொடர்ந்து செய்தால் போதும், கால்களில் உள்ள வெடிப்பு பூஞ்சை தொற்று, சேற்றுப் புண் அனைத்துமே நீங்குவதுடன் பாதம் பட்டு போல பளபளப்பாக இருக்கும். இது பாதங்களில் வெடித்து ரத்தம் வரும் அளவிற்கு புண்ணாகி இருந்தால் கூட இந்த முறையில் சரியாகி விடும்.

இதையும் படிக்கலாமே: அட! முடி வளர இவ்வளவு சிம்பிளான வழி இருக்குன்னு இத்தனை நாள் தெரியாம போச்சே. அப்படின்னு யோசிக்கிற மாதிரி ரொம்ப சிம்பிளான ஒரு டிப்ஸ் இருக்கு. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

இதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்தால் இனி உங்கள் பாதத்தில் வெடிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லாத அளவிற்கு பாதம் அத்தனை அழகாக மாறி விடும்.

- Advertisement -