நம்ம முகத்துடைய நிறத்தை தீர்மானிக்கக்கூடிய கொலாஜன் என்னும் மூலக்கூற்றை அதிகரிக்க கூடிய தன்மை ஒரு சில பொருட்களுக்கு உண்டு. இந்த பொருட்களை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்யும் பொழுது கிடைக்கக்கூடிய புத்துணர்வு அபரிமிதமானது. நம் வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய இந்த 2 பொருட்களை வைத்து எப்படி முகத்தில் இருக்கக்கூடிய கருமையை அகற்றி, வெள்ளை வெளேரென பளிச்சுன்னு வெள்ளையாக மாற்றுவது? என்பது போன்ற அழகு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
எல்லோருக்கும் நல்ல சிகப்பான சரும அமைப்பு கிடைப்பது இல்லை. சிலருக்கு இயற்கையான நிறம் சுற்றுச்சூழல் காரணமாக மங்கி மற்றும் வெயிலின் தாக்கத்தின் காரணமாகவும் கருப்பாக மாறிவிடுகிறது. ஆனால் சிலருக்கு இயற்கையிலேயே முகம் கருப்பாகத் தான் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் கூட தங்களின் முகத்திற்கு நிறத்தை அதிகரிக்க செய்யக்கூடிய மாற்றத்தை இந்த பொருட்களின் மூலம் கொண்டு வர முடியும்.
கொலாஜன் என்னும் மூலக்கூறு தான் சரும நிறத்தை தீர்மானிக்கிறது. இதை தூண்டி விடுவதன் மூலம் நம்முடைய இழந்து போன பொலிவை மீட்டு எடுத்து விடலாம். அதற்குரிய சத்துக்கள் அனைத்தும் பப்பாளி பழத்தில் நிறைந்து காணப்படுகிறது. பப்பாளியை கொண்டு முகத்திற்கு அடிக்கடி மசாஜ் செய்து பாருங்கள், உங்களுடைய முக அழகு மேம்படுவதை நீங்கள் உணர முடியும். பப்பாளி பழம் இயற்கையாகவே ப்ளீச்சிங் ஏஜெண்டாக செயல்படக்கூடிய தன்மை கொண்டது.
இது நம்முடைய சருமத்திற்கு நல்ல ஒரு நிறத்தை கொடுத்து, பொலிவை அதிகரிக்க செய்கிறது. இந்த பப்பாளி பழத்தை கூல் போல கரைத்து, பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுது ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சம அளவு ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பப்பாளி பேஸ்ட் மற்றும் தேன் ஆகிய இந்த இரண்டும் கலந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்
உங்களுடைய விரல்களால் லேசாக மசாஜ் செய்யும் பொழுது சருமத்திற்குள் ஊடுருவி சென்று இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை ஊக்குவிக்கிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, நம்முடைய சரும அழகை இளமையுடன் வைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறது. பத்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு, அப்படியே 10 நிமிடம் உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்பி கொள்ளுங்கள். மெதுவாக முகத்தை காட்டன் துணியால் ஒற்றி எடுங்கள். இவ்வாறு தொடர்ந்து வாரம் ஒருமுறை செய்து வந்தாலே உங்களுடைய சருமம் தங்கம் போல தகதகன்னு ஜொலிக்க ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:
வெள்ளை முடி இருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் ஒரு வரம். வெள்ளை முடியை கண்ணிமைக்கும் நேரத்தில், கருப்பாக மாற்ற இதைவிட சுலபமான ஐடியா இருக்குமா என்ன?
வெயிலினால் ஏற்படக்கூடிய கருமை மிக எளிதாக நீங்கி, நம்முடைய இயற்கையான அழகை நமக்கு மீட்டு கொடுத்துவிடக் கூடிய அற்புதமான ஆற்றல் இந்த பேக்கிற்கு உண்டு. மேலும் இயற்கையாகவே கருப்பாக இருப்பவர்கள் கூட, தொடர்ந்து இந்த மசாஜ் செய்வதன் மூலம் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும் .மெல்ல மெல்ல உங்களுடைய நிறம் மெருகேற துவங்கும். ஒரேடியாக வெள்ளையாக மாறாவிட்டாலும், உங்களுடைய இயற்கையான பழைய நிறம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். ரொம்ப எபக்ட்டிவ் ஆக செயல்படக்கூடிய இந்த பப்பாளி மசாஜ் நீங்களும் செஞ்சு பாருங்க அசந்து போவீங்க!