வெள்ளை முடி இருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் ஒரு வரம். வெள்ளை முடியை கண்ணிமைக்கும் நேரத்தில், கருப்பாக மாற்ற இதைவிட சுலபமான ஐடியா இருக்குமா என்ன?

white-hair
- Advertisement -

வெள்ளை முடியோடு வெளியில் சென்றால் அது நமக்கு அவ்வளவு தன்னம்பிக்கையை கொடுக்காது. தலை நிமிர்ந்து நடப்பதற்கு வெள்ளை முடியை பாரமாக நினைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வெள்ளை முடி ஒன்றும் அவ்வளவு கெட்டது கிடையாது. இருப்பினும் சிறிய வயதில் வெள்ளை முடி வந்தால், அந்த கஷ்டம் அவர்களுக்கு தானே தெரியும். உங்களுடைய நரைமுடியை மறைப்பதற்கு மிக மிக எளிமையான இரண்டு தீர்வைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இன்ஸ்டன்டாக உடனடியாக முன்னேற்றியில் எட்டிப் பார்க்கும் அந்த வெள்ளை முடியை கருப்பாக மாற்ற ஒரு குறிப்பு. அந்த வெள்ளை முடிகளை எல்லாம் நிரந்தரமாக கருப்பாக மாற்ற இன்னொரு குறிப்பு. ஆக மொத்தம் இரண்டு அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

குறிப்பு 1:
எனக்கு தலை முழுவதும் அவ்வளவு நிறைய வெள்ளை முடி கிடையாது. ஆனால் முன்னேற்றியில் ஆங்காங்கே வெள்ளை முடி தெரிகிறது. அவசரமாக வெளியே கிளம்ப வேண்டும். இந்த வெள்ளை முடியை மறைக்க வேண்டும். என்ன செய்வது. தலை சீவ ஆரம்பித்து விட்டீர்கள்.

- Advertisement -

இப்போது இந்த ஐடியா உங்களுக்கு கை கொடுக்கும். கண்ணுக்கு போடக்கூடிய மஸ்காரா கொஞ்சம் பிராண்ட்டாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். கண்ணில் அந்த மஸ்காரா போட்டால் அழுதால் கூட சில மஸ்காரா கலையாது என்று சொல்லுவார்கள். வாட்டர் ப்ரூஃப் மஸ்காராவை போட்ட பின்பு, காய்ந்த பிறகு அதை கையில் தொட்டாலும் ஒட்டாது அல்லவா. அப்படி ஒரு பிராண்டில் மஸ்காரா வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

தலை சீவும் போது முன்னேற்றியில் தெரியும் வெள்ளை முடிக்கு மேலே இந்த மஸ்காராவை எடுத்து அதே பிரஷில் லேசாக அப்ளை செய்து விட்டு விடுங்கள். இரண்டு நிமிடத்தில் அது காய்ந்து விடும். பிறகு வழக்கம் போல தலை சீவிக் கொள்ளலாம். வெள்ளை முடி வெளியே தெரியாது. இது காய்ந்த பிறகு மற்ற இடங்களுக்கும் பரவாது. டிரஸ் மேலேயும் இந்த நிறம் நிச்சயமாக ஒட்டாது. கேரட்டியா நம்பிக்கையா இதை தலையில் போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

இது இன்ஸ்டன்ட் ஆக, இருக்கும் நரைமுடியை மறைக்க தேவையான ஒரு குறிப்பு. தலைக்கு குளித்த பிறகு இது போய்விடும். இதனால் பக்க விளைவுகள் உங்களுக்கு எதுவுமே இருக்காது. பயமில்லாமல் இப்படி செய்யலாம். இது ஒரு வழி இருக்கு. உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

குறிப்பு 2:
நிரந்தரமாக நரை முடியை வெள்ளையாக மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் ஒரு சில நாட்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும். ஒரு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அவுரி இலை பொடி 1 டேபிள் ஸ்பூன், மருதாணி இலை பொடி 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 1 டேபிள் ஸ்பூன், விளக்கெண்ணெய் 1/2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் தேவையான அளவு, ஊற்றி இதை பேஸ்ட் பக்குவத்திற்கு நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை உங்களுடைய தலைமுடியில் வெள்ளை முடிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் கூட தலையில் இது அப்படியே இருக்கலாம். நன்றாக காய்ந்த பிறகு மயில்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இந்த பேக்கை தலைமுடிக்கு தொடர்ந்து அப்ளை செய்து வர வர, உங்களுடைய நரைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை நாட்கள் இதை பயன்படுத்த வேண்டும் என்று நிச்சயம் கேட்பீர்கள். அது அவரவருடைய தலைமுடியை பொறுத்தது. சில பேருக்கு இது மூன்று வாரத்தில் நன்றாக வேலை செய்யும். சில பேருக்கு மூன்று மாதம் கழித்து தான் வேலை செய்யும். அவர் அவருடைய முடியின் தன்மை என்று இருக்கிறது அல்லவா. ஆகவே நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஒரு வித்தியாசம் என்பது நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று வாரத்தில் உங்களுக்கு தெரிய தொடங்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்கலாமே: எதை போட்டாலும் முடி வளரவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு, ஏத்த ஹேர் பேக்! இந்த பேக்கை 1 முறை போட்டால் 1 வருடத்திற்கு முடி கொட்டவே கொட்டாது.

தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான விளக்கெண்ணெயை நாம் இதில் சேர்த்து இருப்பதால் உங்களுடைய தலைமுடி உதிராமலும் இருக்கும். அதே சமயம் அவுரி இலை பொடி, மருதாணி பொடி பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய தலைமுடி டிரையாகாமலும் பாதுகாக்கும். ஆகவே அருமையான இந்த இரண்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. நரைமுடியை நினைத்து மேலும் மேலும் யாரும் கவலை படாதீங்க என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -