சில உணவு வகைகளை பொறுத்த வரையில் அந்தந்த ஊரின் பெருமை சொல்லும். அந்த வகையில் இந்த மோர் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரபலமான ஒரு உணவு. இங்கும் பல முறைகளில் இந்த மோர் குழம்பை செய்து சாப்பிடத்தான் செய்கிறோம். இருந்தாலும் அவர்கள் செய்யும் அதே போன்ற சுவையும் எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவு இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
தயிர் – 300 கிராம், வெள்ளை பூசணிகாய் – 250 கிராம், சின்ன வெங்காயம் – 8, பச்சை மிளகாய் – 3, இஞ்சி -1 துண்டு, காய்ந்த மிளகாய் – 4, சீரகம் – 1டீஸ்பூன், கடுகு -1 டீஸ்பூன், வெந்தயம் – 1/4 டீஸ்பூன், துவரம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவியது -1/4 கப், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை -1 கொத்து.
செய்முறை
இந்த மோர் குழம்பு செய்வதற்கு முதலில் 300 கிராம் அதிகம் புளிக்காத தயிர் எடுத்து அதை நன்றாக கடைந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை முடிந்த அளவு மிக்ஸியில் சேர்க்காமல் கடைய பாருங்கள் அப்பொழுது தான் சுவை நன்றாக இருக்கும். அதே போல் துவரம் பருப்பை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பூசணிக்காவை மீடியம் சைஸில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மோர் குழம்பை தாளித்து விடலாம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து அரிந்து வைத்த பூசணிக்காய் சேர்த்து பூசணிக்காய் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு வேக விடுங்கள்.
பூசணிக்காய் வெந்து கொண்டிருக்கும் போதே மோர் குழம்பிற்கான மசாலா அரைத்திடுவோம். அதற்கு தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஊற வைத்த துவரம் பருப்பு இவை எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பையன் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பூசணிக்காய் நன்றாக வெந்திருக்கும். அதில் அரைத்து இந்த பேஸ்ட்டை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடுங்கள்.
அதற்குள்ளாக இன்னொரு புறம் அடுப்பை பற்ற வைத்து ஒரு சின்ன கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்த உடன் ஒரு கொத்து கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்த பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து அத்துடன் பெருங்காயமும் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றியவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். கடைசியாக கடைந்து வைத்த தயிர் அதிக திக்காக இருந்தால் மட்டும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை இந்த குழம்பில் ஊற்றி கலந்து விட்டால் சுவையான மோர் குழம்பு தயார்.
இதையும் படிக்கலாமே: தேவாமிர்தம் போல இட்லி தொண்டையில இறங்க வேண்டுமா? அப்ப டக்குனு யோசிக்காம 2 நிமிடத்தில் இந்த சட்னி தான் செய்யணும்.
இந்த மோர் குழம்பில் தாளிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டிய து குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் போது தயிரை ஊற்றக் கூடாது. அதே நேரத்தில் தயிர் அதிகமாக புளித்து இருந்தாலும் குழம்பு ருசியாக இருக்காது. இதை அனைத்திலும் விட முக்கிய மோர் குழம்பை கண்டிப்பாக தேங்காய் எண்ணெயில் தான் தாளிக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக செய்தால் பர்ஃபெக்ட்டான கேரளா ஸ்டைலில் மோர் குழம்பு சுலபமாக தயார் செய்து விடலாம்.