தேவாமிர்தம் போல இட்லி தொண்டையில இறங்க வேண்டுமா? அப்ப டக்குனு யோசிக்காம 2 நிமிடத்தில் இந்த சட்னி தான் செய்யணும்.

chutney1
- Advertisement -

இட்லி மேலே இந்த சட்னியை வார்த்து அப்படியே பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும். உண்மையிலேயே சுவை நல்லா இருக்குங்க. ஒரு சட்னி இல்லை, இரண்டு அற்புதமான சுலபமான சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக. சுடச்சுட இட்லி சுட்டு இந்த சட்னியை அரைத்து விட்டால் 10 இட்லி கூட நிச்சயம் பத்தாது. நாவிற்கு சுவை தரும் இந்த குறிப்புகளை யாருமே மிஸ் பண்ணாதீங்க. சுலபமாக செய்யக்கூடிய எளிமையான சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக.

அரைக்கும் முறை

என்னதான் செய்தாலும் எங்களுடைய வீட்டில் இந்த வெள்ளை நிறத்தில் இருக்கும் தேங்காய் சட்னி சுவைக்காது என்பவர்கள், ஒரு முறை இப்படி தேங்காய் சட்னி அரைத்து பாருங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை மிளகாய் – 3, தோல் உரித்த பூண்டு பல் – 1, தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச், தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை – 4 டேபிள் ஸ்பூன், பாதாம் பருப்பு – 5 லிருந்து 6, தேவையான அளவு – உப்பு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் சட்னியை அரைக்க வேண்டும். சட்னி, இட்லி மாவு பதத்துக்கு லேசாக திரி திரியாக கொரகொரப்பாக அரைத்து இதை அப்படியே ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைசாக அரைத்து விட்டாலும் இந்த சட்னி சுவை தராது. ரொம்பவும் கொரகொரப்பாக அரைத்து விட்டாலும் சட்னியின் ருசி மாறிவிடும்.

இதற்கு நச்சுன்னு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். 1 ஸ்பூன் – நல்லெண்ணையில், கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கருவாப்பிலை – 2 கொத்து, வர மிளகாய்களை – 3 போட்டு பொன்னிறமாக வறுத்து இந்த தாலிப்பை சட்னியில் கொட்டி, ரொம்பவும் கட்டியாக இல்லாமல், ரொம்பவும் தனியாக இல்லாமல் சட்னியை கரைத்து சுட சுட இட்லிக்கு மேல் ஊற்றி சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

வர மிளகாய் தண்ணீர் சட்னி: ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் தேங்காய் துருவல் – 1/2 கப் அளவு, வர மிளகாய் – 8 லிருந்து 10, சின்ன துண்டு – புளி, நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 ஸ்பூன், பூண்டு – 1 பல், பொட்டுக்கடலை – 1/4 கப், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் அரைத்து விடுங்கள்.

அதன் பின்பு தண்ணீர் ஊற்றி சட்னி போல நைசாக இதை அரைத்துக் கொள்ளுங்கள். இதில் நாம் நிறைய தண்ணீர் ஊற்ற போகின்றோம். ஆகவே தண்ணீர் ஊற்றுவதை பற்றி கவலைப்பட வேண்டாம். அரைத்த சட்னி இப்போது அப்படியே இருக்கட்டும். இந்த சட்னிக்கு உப்பு காரம் தூக்கலாக இருக்கனும். அப்போதுதான் சுவைத்தரும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து எண்ணெய் 2 ஸ்பூன், ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், வர மிளகாய் – 2, கருவேப்பிலை – 2 கொத்து, போட்டு தாளித்து இதில் மிகப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், போட்டு இரண்டு சிட்டிகை உப்பு, பெருங்காயத்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

சின்ன வெங்காயம் சிவந்து வந்தவுடன் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை அந்த வெங்காயத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். கொதி வந்த தண்ணீரில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை ஊற்றி அடுப்பை அணைத்து விடுங்கள். சட்னியை அப்படியே கலந்து ஒரு நிமிடம் அந்த சூட்டிலேயே வைக்க வேண்டும். தேவைப்பட்டால் இதன் மேலே வாசத்திற்கு கொத்தமல்லி தழைகளை கூட தூவிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பத்தே நிமிஷத்துல சுவையான ரோட்டு கடை இட்லி தண்ணி குருமா ரெடி பண்ணிடலாம். ஒரு முறை இந்த குருமா செஞ்சுட்டீங்கன்னா, இனி இட்லிக்கு சாம்பார், சட்னிக்கு பதில் இதையே தான் செய்வீங்க.

அடுத்து இந்த சட்னியை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். சுட சுட இட்லியை தட்டில் போட்டு அதன் மேலே தாராளமாக இந்த சட்னியை ஊற்றி, இட்லியை ஊறவைத்து பிசைந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் போங்க. இந்த இரண்டு சட்னி ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருக்கா. இட்லி பிரியர்களா ஒரு முறை உங்க வீட்ல கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -