- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅடிக்கடி கெட்ட கனவுகள் வந்து உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறதா? இவற்றை செய்தாலே போதும்...

அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறதா? இவற்றை செய்தாலே போதும் கெட்ட கனவுகள் வராமல் நிற்பதோடு வீட்டில் நேர்மறை ஆற்றலும் பெருகும்.

- Advertisement -

மனிதர்கள் அனைவருக்கும் கனவு என்பது வரத்தான் செய்யும். அந்த கனவில் நல்ல கனவு, கெட்ட கனவு என்று இருக்கிறது. நல்ல கனவு வந்தால் சந்தோஷப்படும் மனிதர்கள், கெட்ட கனவு வரும் போது அதனால் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று பயப்படுவர். அப்படி எந்தவித கெட்ட கனவும் வராமல் இருப்பதற்கு நாம் வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்தாலே போதும். அவை என்னவென்று இந்த பதிவில் நாம் காண்போம்.

வீடுகளில் ஏதேனும் எதிர்மறை ஆற்றலோ அல்லது கெட்ட சக்தியோ இருந்தால், அதனால் நமக்கு கெட்ட கனவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த கெட்ட சக்திகளை வெளியேற்றுவதற்காக முதலில் நாம் வீடு துடைக்கும் போது ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். உப்பு எப்பொழுதும் எதிர்மறை ஆற்றலை உள் வாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தது. ஆதலால் தான் நமக்கு இருக்கும் கண் திருஷ்டியை அகற்றுவதற்கு கூட நாம் உப்பை பயன்படுத்துவோம். அவ்வாறே தான் நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அகற்றுவதற்கு கல் உப்பை பயன்படுத்தி வீடு துடைக்க வேண்டும்.

- Advertisement -

கெட்ட கனவுகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
பொதுவாக வாரத்தில் ஒரு முறையோ, இரண்டு முறையோ வீடுகளை துடைக்கும் வழக்கம் இருக்கிறது. அவ்வாறு வீடு துடைக்கும் பொழுது கல் உப்பை வீடு துடைக்கும் தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் துடைத்தோம் என்றால், நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நாம் ஒரு சிறு செயலை செய்தோம் என்றால் நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அகன்று விடும். அந்த செயல் என்னவென்றால், நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய மா இலை தான். ஆம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நம் வீட்டின் நிலை வாசலில் மா இலையை தோரணமாக கட்டினோம் என்றால், நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேறும். ஆதலால் தான் நம் தமிழர்கள் விசேஷ நாட்களிலும், விழா காலங்களிலும் தங்கள் வாசலில் மாவிலையை தோரணமாக கட்டுகின்றனர்.

- Advertisement -

அடுத்ததாக மிகவும் முக்கியமாக கருதப்படுவது கோமியம். பொதுவாக கோமியத்தை நாம் வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது உபயோகப்படுத்துவோம். கோமியத்தை ஒரு செம்பில் வாங்கி வைத்து, அதில் மாவிலையை போட்டு ஹோமம் செய்ய வரும் ஐயர் அதை வீடு முழுவதும் தெளிப்பார்கள். அதற்கு காரணம் வீடு கட்டும்போது இருக்கும் கெட்ட சக்திகள் வீட்டை விட்டு வெளியேறுவதற்காகவே அந்த செயலை செய்கிறார்கள்.

அதே போல் தான் நாம் நம் வீட்டில் ஏதேனும் கெட்ட சக்திகள் இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது கெட்ட கனவுகள் வந்தாலோ இந்த கோமியத்தை வாங்கி வந்து வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். அவ்வாறு தெளிக்கும்போது நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேறும். கடைசியாக நாம் படுத்து உறங்கும் திசை, அதாவது நாம் தலை வைத்து படுக்கும் திசை வடக்கு திசையாக இருக்கவே கூடாது.

இதையும் படிக்கலாமே: தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் வெறும் 6 நாட்களில் நீங்க, முருகப்பெருமானை வீட்டிலேயே இப்படி வழிபட்டால் போதும்.

அறிவியல் பூர்வமாகவும் இதை நம் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். வடக்கு திசையில் தலை வைத்து படுத்தோம் என்றால் நமக்கு ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் இருக்காது. அதே சமயம் கெட்ட கனவுகளும் ஏற்படும். ஆதலால் வடக்கு திசையில் தலை வைத்து படுப்பதை தவிர்த்துவிட்டு, கிழக்கு திசையிலோ அல்லது மேற்கு திசையிலோ தலை வைத்து படுத்து உறங்கும் போது கெட்ட கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேற்கொண்ட இவ்வனைத்தையும் நாம் செய்தோமே ஆனால் நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கி கெட்ட கனவுகள் எதுவும் ஏற்படாமல் நிம்மதியாக உறங்கலாம்.

சற்று முன்