- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்த தூபம் போடும் வீட்டில் மகாலட்சுமி தாயாரை அழைக்க வேண்டிய அவசியமே இல்லை, தாயாரே தேடி...

இந்த தூபம் போடும் வீட்டில் மகாலட்சுமி தாயாரை அழைக்க வேண்டிய அவசியமே இல்லை, தாயாரே தேடி வந்து சகல விதமான ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவார்.

- Advertisement -

ஒரு வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருளானது கிடைத்து விட்டால் போதும். அந்த வீட்டில் எந்தவித குறையும் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காகத் தான் வீட்டில் விளக்கு ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு வாசனை மலர்களை வைத்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இவையெல்லாம் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியவை. ஆனால் நாம் போடும் ஒரு தூபத்தினால் தாயாரே நம்மை தேடி வந்து அருள் புரிவார் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தூபம் எப்படி போட வேண்டும் என்பதையெல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமி தாயாரை வசியம் செய்ய
இந்த தூபம் போடுவதற்கு முதலில் ஒரு மண்சட்டி வாங்கி கொள்ளுங்கள். இத்துடன் நாட்டு மருந்து கடையில் சமத்துக் கட்டு அல்லது நவதானிய கட்டு என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் வெண்கடுகு, அகில், சந்தன குச்சி, வெண்குங்கிலியம், தேவார கட்டை, சாம்பிராணி என அனைத்தையும் வாங்கி வந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த தூபம் போடுவதற்கு வீட்டில் பூஜை அறை அல்லது வரவேற்பு அறையில் மண்சட்டியை அடுப்பின் மீது வைப்பது போல் மூன்று செங்கல் வைத்து அதன் மேல் வைத்து விடுங்கள். அதில் கொஞ்சம் பச்சை கற்பூரம் வைத்து அதன் மேல் இந்த சமத்து கட்டி அடுக்கி வைத்து விடுங்கள். அதன் பிறகு கற்பூரத்தை பற்ற வைத்தால் இந்த கட்டை நன்றாக எரிந்து புகை வர ஆரம்பிக்கும். அப்பொழுது நீங்கள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் ஒரு பேப்பரில் ஒன்றாக கொட்டி கலந்து கொள்ளுங்கள். இதை மொத்தமாக ஒரே நாளில் போட வேண்டிய அவசியம் இல்லை கொஞ்சம் கொஞ்சமாக கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது புகை வரும் மண்சட்டியை சுற்றி உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் கையிலும் கலந்த இந்த பொருட்களை கொஞ்சமாக எடுத்து வைத்துக் கொண்டு அந்த தீயில் ஓம் என்ற வார்த்தையை உச்சரித்த பிறகு கையில் இருப்பதை கொஞ்சமாக போட்டால் போதும்.

- Advertisement -

இந்த நெருப்பில் போடும் இந்த பொருட்களின் மூலம் வரும் புகை நம் வீட்டை சுற்றி வரும் போது லட்சுமி கடாட்சம் நம் வீட்டை தேடி வரும் என்றும், தாயாரே தேடி வந்து சகல சௌபாக்கியங்களும் வாரி வழங்குவார் என்பது தான் இந்த தூபத்தின் பொருள்.

இந்த தூபத்தை வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் போடலாம். இதை காலை மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போடலாம். ஆனால் மதியம், இரவு நேரத்தில் போடக் கூடாது. காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் இப்படி தூபம் போட்டு பூஜை செய்தால் மிக மிக அற்புதமான பலன்களை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: ஒரு பிடி கொள்ளு இருந்தால் போதும், 16 நாட்களில் நம்முடைய கடன் முழுவதையும் அடைப்பதற்கான வழி தானாக பிறக்கும்.

மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தோடு நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள்,கண் திருஷ்டி,கெட்ட சக்திகள், அனைத்தும் நீங்கி நல்ல பண வரவு பெற்று ஐஸ்வர்யங்களுடன் வாழ இந்த ஒரு தூபத்தை வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தொடர்ந்து போட்டு வரலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது. இந்த தூப முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் தாராளமாக உங்கள் இல்லங்களில் செய்து பார்க்கலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்