- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பழுப்பு நிறமாகி போன வெள்ளை துணிகள் கூட பத்தே நிமிடத்தில் பளிச்சுன்னு மாற துணி துவைக்கும்...

பழுப்பு நிறமாகி போன வெள்ளை துணிகள் கூட பத்தே நிமிடத்தில் பளிச்சுன்னு மாற துணி துவைக்கும் தண்ணீரில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக்கோங்க. இனி கை வலிக்க பிரஷ் போட்டு தேய்க்க வேண்டிய அவசியமே கிடையாது.

- Advertisement -

என்ன தான் வாஷிங் மெஷின் வைத்து நாம் துணிகளை துவைத்தாலும் கூட சில துணிகளை நாம் கையால் தான் துவைக்க வேண்டி இருக்கும். அதிலும் வெள்ளை துணிகள், காலர்களில் அதிக கறைப் பிடித்த துணிகள், குழந்தைகளின் யூனிபார்ம் போன்றவை எல்லாம் நிச்சயம் நாம் கை வலிக்க துவைத்தால் தான் அது பளிச்சென்று மாறும். இனி அந்த கவலையே உங்களுக்கு தேவையில்லை. துணி துவைக்கும் தண்ணீரில் இந்த பொருளை மட்டும் சேர்த்து துவைத்து பாருங்கள். எல்லா துணிகளும் பளிச்சென்று மாறி விடும். அது என்னவென்று இந்த வீட்டுக்குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கை வலிக்காமல் துணிகளை சுலபமாக துவைக்க
முதலில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் வைத்திருக்கும் துணிகளை ஊற வைக்கும் அளவிற்கு வெது வெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நிச்சயமாக வெதுவெதுப்பான நீரை தான் எடுக்க வேண்டும். குளிர்ந்த தண்ணீரில் ஊற வைத்தால் அழுக்கு நீங்காது.

- Advertisement -

அடுத்ததாக நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரில் துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பு பவுடர் அல்லது லிக்விட் எதுவாக இருந்தாலும் ஒரே ஒரு ஸ்பூன் மட்டும் சேர்த்தால் போதும். இத்துடன் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டையும் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு துணிகளை எல்லாம் இந்த தண்ணீரில் ஒரு பத்து நிமிடம் வரை ஊற வைத்து விடுங்கள்.

பத்து நிமிடம் கழித்து இந்த துணிகளில் இருக்கும் தண்ணீரை பிழிந்து வாஷிங் மிஷினில் போட்டு கொடுங்கள். அதன் பிறகு துணி துவைக்க பயன்படுத்தும் லிக்விடை சேர்த்த பின்பு ஒரே ஒரு ஸ்பூன் ஷாம்பூவை மட்டும் சேர்த்து எப்போதும் போல துவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். துணிகளில் இருக்கும் கறைகள் எல்லாம் நீங்கி துணி பளிச் சென்று மாறி விடும்.

- Advertisement -

நாம் ஊற வைக்கும் தண்ணீரில் சேர்த்து இருக்கும் பேஸ்ட் ஆனது துணிகளில் இருக்கும் கறை, அழுக்கு போன்றவற்றை எல்லாம் முழுவதுமாக நீக்கி விடும். அதே போல் துவைக்கும் பொழுது சேர்க்கும் ஷாம்புவானது துணிகளில் இருக்கும் தன்மையை கொஞ்சம் கூட மாற்றாமல் அழுக்குகளை மட்டும் நீக்கி துணிகளை எப்போதும் புதிது போல வைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: செம்பு பாத்திரம், பித்தளை பாத்திரம் இவைகளை ஸ்க்ரப்பர் கூட போட்டு தேய்க்காமல் பளபளப்பாக மாற்ற இந்த டெக்னிக் சூப்பரா இருக்கே! புது ஐடியாங்க இது.

கைகளில் துவைக்கும் பொழுதும் இந்த முறையே பயன்படுத்தலாம். துவைக்கும் முன்பு ஊற வைத்து அதன் பிறகு லேசாக சோப்பு போட்டாலே போதும். அழுத்தி தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது. இனி  இந்த முறையில் துவைத்து பாருங்கள்  வெள்ளை துணி, அழுக்கான துணி என தனித்தனியாக எதையும் துவைக்காமல் மொத்தமாக ஒரே சமயத்தில் துவைத்து சுலபமாக வேலையை முடித்து விடலாம்.

சற்று முன்