செம்பு பாத்திரம், பித்தளை பாத்திரம் இவைகளை ஸ்க்ரப்பர் கூட போட்டு தேய்க்காமல் பளபளப்பாக மாற்ற இந்த டெக்னிக் சூப்பரா இருக்கே! புது ஐடியாங்க இது.

sembu-pithalai-vessels
- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகப்பெரிய சவாலான ஒரு விஷயம். எவ்வளவு தான் லிக்விட் ஊற்றி ஸ்டீல் நார், போட்டு தேய்த்து தேய்த்து கழுவினாலும் அதில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு கறைகள் இவைகள் போகவே போகாது. வாங்கிய புதுசில் இருந்த பொலிவை மீண்டும் கொண்டு வரவே முடியாது. ஆனால், இன்று சொல்லக்கூடிய இந்த எளிமையான குறிப்பை பின்பற்றி பார்த்தால், உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரம், செம்பு பாத்திரம் அப்படி ஜொலி ஜொலிக்கும். பூஜை பாத்திரங்கள், விளக்கு, பஞ்சபாத்திரம், இப்படி செம்பு பித்தளையில் இருக்கக்கூடிய அண்டா என்று எந்த பொருளுக்கு வேண்டும் என்றாலும் இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றலாம். பல பேருக்கு இந்த குறிப்பு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு இந்த குறிப்பு தெரியாது. தெரியாதவர்கள் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

பித்தளை செம்பு பாத்திரங்களை ஜொலி ஜொலிக்க வைக்க புது டெக்னிக்:
இதற்கு நாம் எந்த பொருளை பயன்படுத்த போகிறோம் தெரியுமா. செம்மண். செங்கலை நன்றாக தூள் செய்து சலித்து எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது காவி பொடி, சிவப்பு நிறத்தில் இருக்குது அல்லவா கோலம் போடுவோமே அதை சலித்து எடுத்துக் கொண்டாலும் சரி, அந்த செம்மண் நமக்கு தேவை. அந்த செம்மண்ணில் கொஞ்சமாக எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை கருத்து போன பித்தளை செம்பு பாத்திரத்தில் போட்டு, உங்கள் கையை கொண்டு லேசாக தேய்த்துக் கொடுத்தாலே, அதில் இருக்கும் உப்பு கறை அனைத்தும் முழுசாக நீங்கிவிடும். காமாட்சி அம்மன் விளக்கு போன்ற டிசைன் உள்ள பித்தளை பாத்திரங்களை ஒரு புது பல் தேய்க்கும் பிரஷை வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். அப்போது இடுக்குகளில் உள்ள அழுக்கெல்லாம் கூட சுலபமாக நீங்கிவிடும்.

இப்படி செம்மண் எலுமிச்சம்பழமும் போட்டு தேய்த்து, உப்பு தண்ணீரில் கழுவினால் கூட பரவாயில்லை. பாத்திரங்களை கழுவிய உடனே ஒரு காட்டன் துணியை போட்டு துடைத்து எடுத்து விட்டால் இந்த பாத்திரங்கள் மீண்டும் கருத்து போகவே போகாது. சில பேர் சால்ட் உப்போடு, எலுமிச்சம்பழம் சேர்த்து பித்தளை பாத்திரங்களை தேய்ப்பார்கள். உப்பு சேர்த்து பித்தளை செம்பு பாத்திரங்களை தேய்த்தாலும், அது புத்தம் புதுசு போல மாறும்.

- Advertisement -

ஆனால், உப்பு சேர்ப்பதால் அந்த பாத்திரங்கள் மீண்டும் சீக்கிரமாக கருத்துப் போகின்றது. ஆகவே உப்பு சேர்க்காமல் செம்மண் உடன் எலுமிச்சம் பழத்தை சேர்த்து, இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்களேன். நிஜமாகவே உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்கள் புதுசு போலவே மாறிவிடும். வேறு எந்த பொருளுமே தேவை கிடையாது.

இதையும் படிக்கலாமே: இட்லி நல்லா புசுபுசுன்னு மல்லிப்பூ மாதிரி வர இதை சேர்த்து தான் அரைக்கணும். அட இத கூடவா இட்லி மாவில் சேர்ப்பாங்க அப்படின்னு யோசிக்கிற மாதிரி ஒரு சூப்பர் சீக்ரெட் டிப்ஸ் இருக்கு.

இதே செம்மண் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தி, உங்கள் வீட்டில் கதவில் இருக்கும் பித்தளை தாழ்ப்பாள், கைப்பிடியை கூட எளிதில் சுத்தம் செய்து விடலாம். உங்களுக்கு காவி, செங்கல் தூள், எதுவுமே கிடைக்கவில்லை என்றால், வீட்டில் உடைந்த அகல் இருந்தால் அதை நன்றாக நசுக்கி விட்டுக் கூட எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் போல மாற்றி அதை வைத்து இந்த கிளீனிங் ஐடியாவை ட்ரை பண்ணி பார்க்கலாம். இது ஒரு எளிமையான வீட்டு குறிப்பு தாங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா கட்டாயம் ட்ரை பண்ணி பாக்கணும்.

- Advertisement -