- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்ரொம்ப ரொம்ப கருத்து போன வெள்ளி விளக்கைக் கூட வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து...

ரொம்ப ரொம்ப கருத்து போன வெள்ளி விளக்கைக் கூட வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து விடலாம். உங்க பூஜை அறையில் இருக்கும் இந்த ஒரு பொருளை வைத்து.

- Advertisement -

பெரும்பாலும் இப்போது எல்லோருடைய வீட்டிலும் பூஜை அறையில் வெள்ளி காமாட்சியம்மன் விளக்கு, அல்லது குத்துவிளக்கு வைத்து ஏற்றக்கூடிய வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இப்படி பூஜை அறையில் வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கை வைத்து ஏற்றுவது ரொம்ப ரொம்ப நல்லதுங்க. ஆனா அதே சமயம் அந்த வெள்ளி விளக்கு ரொம்பவும் கருத்து போய் இருக்கக் கூடாது. அது பார்ப்பதற்கும் அவ்வளவு அழகாக இருக்காது. கருப்பான விளக்கை ஏற்றுவதும் குடும்பத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. உங்கள் வீட்டில் கருத்துப் போன காமாட்சி அம்மன் வெள்ளி விளக்கை ஒரு முறை இப்படி சுத்தம் செய்து பாருங்கள். இது ரொம்ப ரொம்ப எளிமையான முறை. அதேசமயம் உங்கள் வீட்டு வெள்ளி தேய்ந்து போகாமலும் அப்படியே இருக்கும்.

வெள்ளி விளக்கை சுத்தம் செய்யும் விபூதி:
இன்றைக்கு நாம் வெள்ளி விளக்கை சுத்தம் செய்ய எடுத்துக்கொள்ளப் போகும் பொருள் விபூதி. நாம் எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் இந்த விபூதி கிடைக்கும். விலை மலிவானது. இந்த ஒரு பொருளை வைத்து வெள்ளி விளக்கு எப்படி பளிச் பளிச்சென மாற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் கருப்பான வெள்ளி விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் எண்ணெயை துணியை வைத்து துடைத்து எடுத்து விடுங்கள். மஞ்சள் குங்குமத்தையும் துடைத்து எடுத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இன்னொரு சிறிய கிண்ணத்தில் விபூதி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கையை மட்டும் தண்ணீரில் நனைத்துக்கொண்டு விபூதியை தொட்டு தொட்டு, கருத்துப் போன வெள்ளி விளக்கின் மேல் விபூதி பூசி விட வேண்டும்.

இப்படி உங்கள் கையால் எடுத்து விளக்கின் மேல் விபூதியை பூசும்போது விளக்கில் இருக்கும் கருப்பு எல்லாம் நீங்கும். வெள்ளி விளக்கில் இருக்கும் விபூதியை 10 நிமிடம் அப்படியே காய விட்டு விடுங்கள். பிறகு பல் தேக்கும் ஒரு புது பிரஷ் எடுத்து வெள்ளி விளக்கை தேய்த்துக் கொடுத்தால் அதில் இருக்கும் கருப்பு அத்தனையும் நீங்கிவிடும். பிறகு நல்ல தண்ணீரை வைத்து கழுவி விடுங்கள். ஒரு காட்டன் துணியை வைத்து வெள்ளி விளக்கை சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு காய்ந்த வெள்ளி விளக்கில், காய்ந்த விபூதியை தூவி உங்கள் கையாலேயே லேசாக தேய்த்துக் கொடுத்தால் வெள்ளி விளக்கு கடையில் கொடுத்து பாலிஷ் போட்டது போல பள பளப்பாக மின்னும். நம்ப முடியவில்லையா. தேவைப்பட்டால் ஒரு முறை இந்த குறிப்பை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: வருமானம் இரட்டிப்பாக வேண்டுமா? அடிக்கடி இந்த பூவை வாங்கிக் கொண்டே இருந்தால், அமோகமான பண வரவு இருக்கும்.

வெள்ளி விளக்கை எப்படி சுத்தம் செய்தீர்களோ, அதே போல தான் வெள்ளி கொலுசு, வெள்ளி செயின், வெள்ளி குங்குமசிமிழ் கூட இந்த முறையில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். மிக மிக எளிமையான முறை இது. அதுமட்டுமல்லாமல் இப்படி வெள்ளி பொருட்களை விபூதி போட்டு சுத்தம் செய்தால் அது நீண்ட நாட்களுக்கு கருத்துப் போகாமல் இருக்கும். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்