- Advertisement -
Homeஆன்மீக குறிப்புகள்திருமண தாமத பரிகாரம்

திருமண தாமத பரிகாரம்

- Advertisement -

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் அமைய வேண்டிய ஒரு இனிய நிகழ்வாகும். ஆனால் ஒரு சிலருக்கோ திருமண வயதை கடந்தும் இல்லற வாழ்க்கை அமையாமல் போய்விடுகிறது. இதனால் திருமண அமையாமல் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களும் மிகவும் மன வருத்தம் அடைகின்றனர். இப்படி திருமண தாமதத்தால் வருந்துபவர்களும் மிக விரைவில் திருமண வாழ்க்கை கிடைக்கப்பெற செய்ய வேண்டிய திருமண தாமத பரிகாரங்கள் (Pariharam for delayed marriage in Tamil) குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

திருமண தாமதம் நீங்க பரிகாரம்

ஜாதக ரீதியிலான தோஷங்களினால் திருமணம் தாமதமாகி கொண்டே செல்கின்ற பெண்கள் தங்கள் மனதிற்கினிய மண வாழ்க்கை கிடைக்கப்பெற, திங்கட்கிழமை தோறும் “சோமவார விரதம்” அனுஷ்டிக்க வேண்டும். திங்கட்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, உணவு ஏதும் அருந்தாமல் அருகில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு அப்பெண்கள், தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து வீட்டிற்கு வர வேண்டும். இப்படி தொடர்ந்து 16 திங்கட்கிழமைகளில் இந்த சோமவாரம் விரதம் மேற்கொள்பவர்களுக்கு கூடிய பெண்களுக்கு விரைவிலேயே அவர்கள் விரும்பிய வகையில் நல்ல வாழ்க்கைத் துணை அமையப் பெறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

ஒரு சிலரின் ஜாதகத்தில் ராகு – கேது ஆகிய இரு கிரகங்களில் ராகு கிரகம் பாதகமான நிலைகளில் இருந்தால் அவர்களுக்கு திருமண வாழ்க்கை அமைவதில் தாமதம் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் செவ்வாய் கிழமைகள் தோறும் வருகின்ற ராகு கால வேளையில் அருகில் உள்ள அம்பாள் கோயிலுக்கு சென்று, துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தை அரிந்து, அதை அகலாக மாற்றி, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, அதில் பசுநெய் ஊற்றி, தீபமேற்றி தூபங்கள் கொளுத்தி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபடுபவர்களுக்கு விரைவிலேயே நல்ல மணவாழ்க்கை அமையும்.

- Advertisement -

திருமண தாமதத்தால் தவிக்கின்ற ஆண் பெண் யாராக இருந்தாலும் தினந்தோறும் காலையில் குளிக்கின்ற பொழுது குளிக்கின்ற தண்ணீரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளை போட்டு, நன்கு கலந்து குளிக்க வேண்டும், குளித்து முடித்ததும் தங்களின் நெற்றியில் செந்தூர பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும். கஸ்தூரி மஞ்சள் பொடியையும் திலகமாக இட்டுக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு திருமண தாமத தோஷங்கள் நீங்கி விரைவிலேயே திருமண வரன் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை பாக்கியம் பரிகாரம்

திருமணம் தாமதம் ஆகும் ஆண்கள் தங்களுக்கு விரைவிலேயே திருமணம் நடைபெற, ஏழ்மை நிலையில் இருக்கின்ற ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தங்களால் இயன்ற உதவிகளை செய்வதால், அந்த ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற திருமண தோஷம் நீங்கி, விரைவிலேயே நல்ல முறையில் திருமணம் (Pariharam for delayed marriage in Tamil) நடைபெறும் என ஆன்மீக பரிகாரங்களில் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்