- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நல்ல எடுப்பான தோற்றத்துடன் ஆரோக்கியமாக வாழ ராஜாக்கள் பயன்படுத்திய கருப்பு கவுனி அரிசியை வாரம் இரு...

நல்ல எடுப்பான தோற்றத்துடன் ஆரோக்கியமாக வாழ ராஜாக்கள் பயன்படுத்திய கருப்பு கவுனி அரிசியை வாரம் இரு முறை இப்படி சாப்பிட்டால் 60 வயதிலும் 20 வயது போல இளமையாக இருப்பீர்கள்.

- Advertisement -

நம்முடைய உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதில் உணவிற்கு மிக மிக முக்கியமான பங்கு உள்ளது. எந்த வகையில் நாம் சரியாக எடுத்துக் கொள்கிறோமோ அந்தளவிற்கு உடல் அழகு ஆரோக்கியம் என அனைத்தும் சீராக இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி உடலை அழகுடனும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் கூடிய ஒரு பாரம்பரிய உணவான கருப்பு கவனி அரிசியில் புட்டு எப்படி செய்வது என்பதை பற்றிய தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த அரிசி அந்த காலத்தில் ராஜாக்கள் உண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அரிசியை நான் உணவில் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் உடல் எடை குறைந்து எளிமையான தோற்றத்தையும் பெறலாம். இப்போது இந்த அரிசியை வைத்து ஒரு எளிமையான புட்டு ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

செய்முறை

இந்த புட்டு செய்வதற்கு ஒரு கப் கருப்பு கவுனி அரிசியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு நிழலில் இதை நன்றாக ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆற வைத்த இந்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்திற்கு பொடித்து ஒரு பவுலின் மாற்றிய பிறகு ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு நன்றாக கொதிக்கும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூன் வைத்து ஊற்றி கலந்து விடுங்கள். தண்ணீர் அதிகமாகி விட்டால் புட்டு வராது.

- Advertisement -

இப்போது கலந்த இந்த புட்டு மாவை அடுப்பில் இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடம் வரை இதை நன்றாக வேக விட்டு எடுத்த பிறகு இதை வேறு ஒரு தட்டிற்கு மாற்றி பின் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இனிப்பிற்கு நாட்டு சர்க்கரை வெல்லம் அல்லது சர்க்கரை உங்களுக்கு விருப்பமானவற்றை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: சூப்பரான மொறு மொறு வெண்டைக்காய் பக்கோடா இப்படி செய்ஞ்சு பாருங்களேன். சுடசுட செய்தவுடன் தட்டு காலியா ஆகிவிடும். அவ்வளவு மொறுமொறுப்பு அவ்வளவு ருசி.

இந்த புட்டு நல்ல சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இன்றைய கால வளரும் தலைமுறைக்கு இது போல ஆரோக்கியமான உணவை கொடுப்பதன் மூலம் அவர்கள் வருங்காலம் நோய் நொடியற்ற வாழ்க்கை வாழ முடியும் என்பதை கருத்தில் கொண்டு இது போன்ற பாரம்பரிய உணவுகளுக்கு நாம் சிறிது முக்கியத்துவம் கொடுக்கலாம்.

சற்று முன்