- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெள்ளிக்கிழமை மட்டும் இதை வாங்கி உங்கள் வீட்டில் சமைத்தால், உங்கள் பக்திக்கு அந்த மகாலட்சுமி தாயே...

வெள்ளிக்கிழமை மட்டும் இதை வாங்கி உங்கள் வீட்டில் சமைத்தால், உங்கள் பக்திக்கு அந்த மகாலட்சுமி தாயே அடிமையாகி விடுவாள்.

- Advertisement -

பக்திக்கும் பாசத்திற்கும் அடிமை ஆவதில் ஒரு சுகம் இருக்கிறது. அது மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தான். உங்களுடைய பக்திக்கும் பாசத்திற்கும் அந்த மகாலட்சுமியை வசியம் செய்து நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா. உங்களுக்காக எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த வழிபாட்டை செய்து வந்தால் வறுமை நீங்கும். கெட்ட எண்ணங்கள் எல்லாம் தூர சென்று விடும். குடும்பம் செல்வ செழிப்பில் மேலும் மேலும் தழைத்து ஓங்கும். சகல விதமான சௌபாக்கியங்களையும் பெறப்போகும் எளிமையான அருமையான இந்த வழிபாட்டை தெரிஞ்சுக்க யாரும் தவற விடாதீங்க.

மகாலட்சுமியை வசியம் செய்ய வெள்ளிக்கிழமை சமையல்:
வெள்ளிக்கிழமை கடைக்கு சென்று வெறும் பத்து ரூபாய் கொடுத்து நெல்லிக்காய்கள் வாங்கினால் கூட போதும். உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலையாக இருக்கும். வெள்ளிக்கிழமை என்றால் பருப்பு சாம்பார் வைப்பது உங்களுடைய வீட்டில் வழக்கமாக இருக்கும். ஆனால் இனிமேல் வெள்ளிக்கிழமை சாம்பார் உடன் சேர்த்து கொஞ்சம் நெல்லிக்காய்களை நன்றாக துருவி, கொஞ்சமாக கலவை சாதம், நெல்லிக்காய் சாதம் செய்யுங்கள். இது குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த சாதத்தை அப்படியே மகாலட்சுமிக்கு நிவேதனமாக படைத்து வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடலாம். உங்களுடைய குழந்தைகளுக்கும் சாப்பிட கொடுக்கலாம்.

- Advertisement -

அப்படியே முடிந்தால் அந்த சாதத்தை இல்லாதவர்களுக்கு வீதியில் யாசகம் கேட்பவர்களுக்கு இரண்டு பேருக்கு உங்கள் கைகளால் அன்னதானம் செய்யுங்கள். நெல்லிக்காயை வெள்ளிக்கிழமை அன்று சமைத்து அன்னதானம் கொடுப்பது ரொம்ப ரொம்ப புண்ணியத்தை தேடி தரும். இந்த நல்ல காரியத்தில் நீங்கள் மகாலட்சுமியின் அருள் ஆசியை பெறுவீர்கள்.

வெள்ளிக்கிழமை உங்களால் முடிந்த நெல்லிக்காய்களை வாங்கி கோவிலுக்கு கொண்டு போய் அர்ச்சனை செய்து, அங்கு வரக்கூடிய குழந்தைகளுக்கும் பக்தர்களுக்கும் நெல்லிக்காயை தானமாக கொடுக்கலாம். உங்கள் வீட்டின் அருகில் எந்த கோவில் இருந்தாலும் சரி, பெருமாள் கோவில் சிவன் கோவில், எந்த கோவிலில் இருந்தாலும் அங்கு அம்பாள் சன்னிதானம் இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் நெல்லிக்காய்களை கொண்டு போய் வைத்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அர்ச்சனை செய்த நெல்லிக்காய்களை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானம் கொடுப்பது சிறப்பு. 9 நெல்லிக்காய், 18 நெல்லிக்காய், 27 நெல்லிக்காய் என்ற கணக்கை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் எப்போதும் நெல்லிக்காய்கள் இருக்கட்டும். அதுமட்டுமில்லாமல் நெல்லிக்காய் ஊறுகாய் இருக்கட்டும். நெல்லிக்காய் இருக்கும் வீட்டில் குபேரனின் அருள் ஆசியும் மகாலட்சுமியின் அருள் ஆசியும் நிச்சயம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் கனவு நினைவாக இந்த ஒரு பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். இதோடு சேர்த்து பணம் சம்பாதிப்பதற்கு என்னென்ன முயற்சிகள் தேவையோ அதையும் மேற்கொள்ள வேண்டும். முயற்சிகளில் வரும் தடைகளை முறியடிக்க மகாலட்சுமி துணை புரிவாள்.

இதையும் படிக்கலாமே: வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வாழ்க்கையில் ஜெயித்து நல்ல அந்தஸ்தில் வாழ ஐந்து நாள் மட்டும் தூங்கி எழுந்தவுடன் இதை மறக்காமல் செய்தால் போதும். நீங்கள் நினைத்துக் கூட பார்க்காத அளவு உங்கள் வாழ்க்கை மாறி விடும்.

வாழ்க்கையில் நீங்கள் மேலும் மேலும் முன்னேற அந்த மகாலட்சுமி உங்களுடனே துணையாக நிற்பாள். ஒவ்வொரு முறை நெல்லிக்கனிகளை வாங்கி சமைத்து அன்னதானம் செய்யும்போதும் அதற்காக பணத்தை நீங்கள் செலவு செய்வீர்கள் அல்லவா, அந்த மனம் பல மடங்காக மீண்டும் உங்கள் கைக்கு வரும் என்பது தான் நம்பிக்கை. மேல் சொன்ன பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதையெல்லாம் பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்