குழிப்பணியாரத்தில் பல வகைகள் உண்டு. நம்மூரை பொறுத்த வரையில் செட்டி நாட்டு கார பணியாரம் மிகவும் பிரபலமாக பேசப்படும். அது மட்டும் இன்றி இப்போதெல்லாம் விதவிதமான குழிப்பணியார வகைகள் வந்து விட்டது. அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் கேரளா ஸ்டைலில் சூப்பரான சிந்தாமணி குழிப்பணியாரம் சிம்பிளா எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
செய்முறை
இந்தக் குழிப்பணியாரம் செய்வதற்கு 1 டம்ளர் இட்லி அரிசி, 1 டம்ளர் பச்சரிசி, 1/4 டம்பளர் கடலைப் பருப்பு, 1/4 டம்ளர் பாசி பருப்பு, கால் டம்பளர் உளுத்தம் பருப்பு என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இரண்டு முறை அலசி தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் வரை அப்படியே ஊற விடுங்கள்.
நான்கு மணி நேரம் கழித்து ஊறிய இந்த அரிசி, பருப்பு வகைகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து பருப்பு ஊற வைத்த தண்ணீரைக் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்து ஒரு பவுலில் ஊற்றி உப்பு போட்டு கரைத்து எட்டு மணி நேரம் அப்படியே புளிக்க வைத்து விடுங்கள். இந்த குழிப்பணியாரம் செய்ய மாவை இவ்வளவு நேரம் புளிக்க வைக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
எட்டு மணி நேரம் கழித்து இந்த குழிப்பணியாரம் ஊற்றுவதற்கு முன்பாக இதற்கு ஒரு தாளிப்பை தயார் செய்து கொள்வோம். அதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு 1ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 வர மிளகாய், 1கொத்து கறிவேப்பிலை, இவை எல்லாம் சேர்த்து பொரிந்து டன் ஒரு பெரிய வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் இரண்டையும் சின்னதாக நறுக்கி சேர்த்துக் வதக்கி கொள்ளுங்கள்.
இவையெல்லாம் நன்றாக வதங்கி வரும் போது ஒரு கொத்து கருவேப்பிலை ஒரு கொத்து கொத்தமல்லி தழை இரண்டையும் பொடியாக நறுக்கி சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு இந்த தாளிப்பை நாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் பணியார சட்டியை வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கரைத்து வைத்த மாவில் இருந்து ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊற்றி இரண்டு புறமும் சிவந்த பிறகு எடுத்து இப்ப சுவையான கேரளா ஸ்டைல் சிந்தாமணி குழிப்பணியாரம் தயார்.
இதையும் படிக்கலாமே: அருமையான தட்டைப் பயறு குழம்பு சுவையாக வீட்டில் எப்படி எளிமையான முறையில் தயார் செய்வது? இப்படி செஞ்சா கறி குழம்பு கூட தோத்து போயிடும்!
இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு பெரிய வெங்காயத்தை மீடியம் சைஸ் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் நான்கு பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு புளி, 10 வர மிளகாய் கால் டீஸ்பூன் கல் உப்பு அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பைன் பேஸ்டாக அரைத்து ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள். காரசாரமான வெங்காய சட்னி தயார். இதை அப்படியே சுடச்சுட பணியாரத்துடன் வைத்து சாப்பிட்டு பாருங்கள் டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும்