- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெள்ளிக்கிழமையில் இதை மட்டும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் எரித்தால் போதும். இதுவரை வராத பணம்...

வெள்ளிக்கிழமையில் இதை மட்டும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் எரித்தால் போதும். இதுவரை வராத பணம் நகை எல்லாமே எப்படி வந்தென்று தெரியாமல் தானாகவே உங்களை தேடி வரும்.

- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையே மிகவும் மோசமானதாக தான் உள்ளது. யாரை நம்புவது நம்ப கூடாது என்பதில் எந்த கணிப்பையும் நம்மால் செய்ய முடிவதில்லை. இதனால் பலரும் தங்களுடைய பணம் பொருள் போன்றவற்றை நம்பி கொடுத்து ஏமாந்து போய் விடுகிறார்கள். பணம் நகை இதையெல்லாம் யாரும் முன் பின் தெரியாதவர்கள் வந்து கேட்டவுடன் நாமும் எடுத்துக் கொடுத்து விடுவதில்லை. நம்முடன் நெருங்கி பழகிய சொந்தங்கள் நண்பர்கள் தான் உதவி என கேட்டு வந்து நாம் செய்திருப்போம்.

நம்மிடம் பணம் நகை பெறுவதற்கு முன் இருந்த சூழ்நிலை அதன் பிறகு இருப்பதில்லை எல்லோரும் இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஒரு சிலரால் உண்மையிலே கொடுக்க முடியாத சூழ்நிலையில் கூட இருப்பார்கள். சிலர் வாங்கிய பிறகு தரக் கூடாது என்று இழுத்தடிப்பார்கள். இப்படி எந்த சூழ்நிலையில் உங்களிடம் இருந்து பணம் நகை சென்று வராமல் தடைப்பட்டு இருந்தாலும் அதை உங்களிடமே மறுபடியும் வர வைக்க இந்த ஒரு பரிகாரம் நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இழந்த பணம் நகை எல்லாம் திரும்ப பெற:
இந்த பரிகாரத்தை செய்வதற்கு வெள்ளிக்கிழமை தான் மிகவும் சிறந்த நாள். வெள்ளிக்கிழமையில் ராகு காலம் எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு இரண்டு புது அகல், கொஞ்சம் பச்சை கற்பூரம், ஒரு கைப்பிடி மல்லி விதை, ஒரு வெள்ளை தாள் இவையெல்லாம் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது யாரும் பார்க்கக் கூடாது. இதை செய்வதாக நீங்களும் யாரிடமும் சொல்லக் கூடாது. ஆகையால் இந்த பரிகாரத்தை பூஜை அறையில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தனியாக ஒரு அறையில் கதவை தாழிட்டுக் கொண்டு செய்து கொள்ளுங்கள்.

முதலில் ஒரு அகலில் இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு கொளுத்தி விட்டு இன்னொரு அகலை கொண்டு அதை அப்படியே மூடி விடுங்கள். அந்த அகலில் பச்சைக் கற்பூரம் எரிந்து அதன் புகை மொத்தமும் கருப்பாக படித்திருக்கும். அந்த கருப்படைந்த மையை எடுத்து இந்த வெள்ளை நிற தாளில் நீங்கள் யாருக்கு கடன் கொடுத்தீர்களோ அவருடைய பெயரை எழுத வேண்டும்.

- Advertisement -

இப்படி எழுதிய பிறகு அந்த பேப்பரை நான்காக மடித்து மறுபடியும் அந்த அகலிலே வைத்து மல்லி விதையை அந்த பேப்பரில் வைத்து இன்னும் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை வைத்து கொளுத்தி விடுங்கள். இந்த நெருப்பு எரியும் போது நீங்கள் கடன் வாங்கிய நபரின் பெயரை சொல்லி அவரின் உருவத்தை உங்கள் மனதில் நினைத்து அது திரும்ப வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் எரிக்கும் இந்த பொருள் முழுவதுமாக எரிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு இந்த எரித்த பொருட்களை எல்லாம் யாருக்கும் தெரியாமல், யாரும் கால் படாத இடத்தில் கொண்டு போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். அதற்குள்ளாகவே நீங்கள் இழந்த பொருள் பணம் உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: 17.6.2023 ஆனி அமாவாசை அன்று, மாலை இந்த 3 பொருட்களை ஒன்றாக பூஜை அறையில் வைத்தால், தண்ணீரில் கரைத்த உப்பு போல உங்கள் கடன் பிரச்சனை அனைத்தும் காணாமல் போகும்.

இந்த பரிகாரத்தில் முக்கியது யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும். அதே போல் நீங்கள் எரிக்கும் பொருள் எதுவும் மிச்சம் இல்லாமல் முழுவதுமாக எரித்து விட வேண்டும். இழந்த பணத்தையும் நகையும் பெறுவதற்கு இந்த முறை மிகவும் பலனளிக்கக் கூடியதாக சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நீங்கள் இழந்தவை எல்லாம் திரும்ப பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

சற்று முன்