- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நாளைக்கு லஞ்சுக்கு வெண்டைக்காய் சாதம் இப்படி செஞ்சி கொடுத்து பாருங்க. இந்த டேஸ்ட்ல இதுவரைக்கும் வெண்டைக்காய்...

நாளைக்கு லஞ்சுக்கு வெண்டைக்காய் சாதம் இப்படி செஞ்சி கொடுத்து பாருங்க. இந்த டேஸ்ட்ல இதுவரைக்கும் வெண்டைக்காய் சாதம் யாருமே சாப்பிட்டிருக்க மாட்டீங்க.

- Advertisement -

பெரும்பாலும் வெண்டைக்காயை பொரியல் போல செய்து அதில் சாப்பாட்டை போட்டு கலந்து கொடுத்தால் வெண்டைக்காய் சாதம் தயார். அப்படி என்று தானே நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தவறு. வெண்டைக்காயை வைத்து சூப்பராக மணக்க மணக்க வெண்டைக்காய் சாதத்தை வித்தியாசமாக செய்யலாம். அது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ரெசிபி லஞ்ச் பாக்ஸ்க்கு சூப்பரான ரெசிபி. குழந்தைகளுக்கு இப்படி வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால், காய்கறிகளோடு அந்த சாதத்தை விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் இதை செய்து கொடுக்கலாம். காலை அவசர அவசர சமையலில் இது ஒரு சுலபமான ரெசிபி.

செய்முறை

முதலில் 1/4 கிலோ வெண்டைக்காய்களை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி ஒரு காட்டன் துணியில் தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு, காம்புகளை நறுக்கிவிட்டு பொரியலுக்கு நறுக்குவது போல மெல்லிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வரமிளகாய் 4, தோல் உரித்த பூண்டு பல் 6, போட்டு கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டி அதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து வடித்த சாதம் உதிரி உதிரியாக நமக்கு தேவை. பாசுமதி அரிசி, பச்சரிசி, சாப்பாட்டு அரிசி என்று உங்கள் விருப்பம் போல சாதத்தை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுந்து 1 ஸ்பூன், வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு 5, இந்த பொருட்களை எல்லாம் போட்டு வாசம் வரும் வரை வருக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 போட்டு, கண்ணாடி பதம் வரும் வரை வதக்குங்கள்.

- Advertisement -

பிறகு நறுக்கிய வெண்டைக்காய்களை போட்டு கொழகொழப்பு போகும் வரை வதக்க வேண்டும். கொழகொழப்போடு இருந்தால் வெண்டைக்காய் சாதம் நன்றாக இருக்காது. வெங்காயத்தோடு எண்ணெயிலேயே வெண்டைக்காய் நன்றாக வதங்கட்டும். எண்ணெய் கொஞ்சம் கூடுதலாகவே ஊற்றிக் கொள்ளுங்கள்.

வெண்டைக்காய் வெந்து வதங்கி வந்தவுடன், மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை இதில் போடவும். பிறகு மல்லிதூள் 1/2 ஸ்பூன், கரம் மசாலா 1/4 ஸ்பூன், சாதத்திற்கும் மசாலாவுக்கும் தேவையான அளவு உப்பு தூள், தூவி பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அடிக்கிற வெயிலுக்கு மாவை எப்படி அரைச்சாலும் புளிஞ்சு போயிடுதா? வாயில வைக்க முடியாத அளவுக்கு புளிச்ச மாவை கூட அரை மணி நேரத்தில் புளிப்பே தெரியாம ஈசியா மாத்திடலாம். எப்படிடா? அப்படின்னு யோசிக்கிறீங்களா வாங்க தெரிஞ்சுக்கலாம்.

இறுதியாக உதிரி உதிரியாக வடித்து வைத்திருக்கும் சாதத்தை இதில் போட்டு பக்குவமாக கிளறி,  கொத்தமல்லி தழைகளை தூவி, சுட சுட பரிமாறினாலும் சூப்பராக தான் இருக்கும். ஆற வைத்து லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுத்தாலும் சூப்பராக தான் இருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தாலே போதும். இந்த சாதம் நிறைவான லஞ்சாக எல்லோருக்கும் இருக்கும். உங்களுக்கு இந்த சிம்பிள் ரெசிபி பிடிச்சிருந்தா நாளைக்கு ஸ்கூலுக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்