அடிக்கிற வெயிலுக்கு மாவை எப்படி அரைச்சாலும் புளிஞ்சு போயிடுதா? வாயில வைக்க முடியாத அளவுக்கு புளிச்ச மாவை கூட அரை மணி நேரத்தில் புளிப்பே தெரியாம ஈசியா மாத்திடலாம். எப்படிடா? அப்படின்னு யோசிக்கிறீங்களா வாங்க தெரிஞ்சுக்கலாம்.

idly batter
- Advertisement -

வெயில் காலம் வந்தாலே எல்லோருக்கும் என்னென்னவோ கவலை என்றால் இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை சமைக்கும், செய்யும், பொருட்கள் எதுவும் வீணாகாமல் பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமே என்பது தான். அந்த வகையில் மாவை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த வெயிலுக்கு அரைத்து வைத்தால் அடுத்த நாளே புளித்து விடும். இதனால் மாவு அடிக்கடி அரைக்க வேண்டியதாக இருக்கும். அதுமட்டுமின்றி அரைத்த மாவும் வீணாக போய் விடும்.

இந்தப் பிரச்சினையை வீட்டில் இருப்பவர்கள் ஓரளவுக்கு சமாளித்து விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஊற வைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதால் வாரம் ஒரு முறை மாவை அரைத்து வைத்து பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. இப்படியானவர்கள் மாவு புளித்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் வரும். அதற்கான ஒரு சூப்பர் டிப்ஸை தான் இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவுல் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

மாவு நீண்ட நாள் புளிக்காமல் இருக்க:
முதலில் மாவை அரைத்து வைக்கும் போது புளித்து விடாமல் இருக்க என்ன செய்வது என்று தெரிந்து கொள்வோம். மாவை அரைத்தவுடன் அன்றைய தேவைக்கான மாவை மட்டும் கொஞ்சமாக வெளியில் வைத்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் மாவை உடனே ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இப்படி வைக்கும் மாவின் மேல் ஒரே ஒரு வெற்றிலை எடுத்து அதன் காம்பு மாவின் உள்ளே முழுகும்படி வைத்து இலையை மாவின் மேலே தெரியும் படி வைத்து விடுங்கள். இது மாவு பத்து நாட்கள் வரை புளிக்காமல் இருக்க உதவி செய்யும். வெற்றிலைக்கு பதிலாக கற்பூரவள்ளி இலைகளையும் இதற்காக பயன்படுத்தலாம். இந்த முறையை பயன்படுத்தும் போதும் மாவு சீக்கிரத்தில் புளிக்காது.

- Advertisement -

புளித்த மாவை வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி
இப்போது மாவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு புளித்து விட்டாலும் மறுபடியும் புளிப்பு சுவையே தெரியாத அளவிற்கு அந்த மாவை எப்படி மாற்றுவது என்பதை தெரிந்து கொள்வோம். புளித்த மாவின் மேல் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக தட்டு போட்டு மூடி மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதை செய்த பிறகு வெளியில் வைக்காதீர்கள் மீண்டும் புளித்து விடும்.

அரை மணி நேரம் கழித்து இந்த மாவை வெளியில் எடுத்தால் மேலே நுரை போல பொங்கி வந்திருக்கும். அதை எல்லாம் தனியாக எடுத்து தூர போட்டு விடுங்கள். அடியில் மாவு தங்கி இருக்கும் இந்த மாவை இப்போது கரைத்து தோசை ஊற்றினால் கொஞ்சம் கூட புளிப்பு சுவை தெரியாது. இந்த மாவை மறுபடியும் கூட இதே போல தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நேரத்திற்கும் சமைக்கலாம்.

இதையும் படிக்காலமே: தேங்காய் எண்ணெயை இப்படி செய்யுங்கள் போதும் ஒரு கொசு கூட உங்களை கடிக்கவே செய்யாது தெரியுமா? இப்படி செய்தால் பூச்சிக்கடி, கொசுக்கடியால் இனி குழந்தைகள் அழாது இருக்குமே!

ஒரு வேளை மாவு அதிக தண்ணீராக இருந்தால் நீங்கள் தண்ணீர் ஊற்றி வைத்த உடன் நுரை வராது அப்படியே தண்ணீராகவே மேலே வந்து நிற்கும். அந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு மீதம் இருக்கும் மாவை கரைத்து பயன்படுத்துங்கள். இந்த முறை கொஞ்சம் பழமையான முறை தான். இந்த முறையைப் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொண்டு இப்படி பயன்படுத்தி பாருங்கள். இனி நீங்கள் அரைத்து வைத்த மாவு ஒரு கரண்டி மாவு கூட வீணாகாது.

- Advertisement -