- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஅதிரடியான முடி வளர்ச்சியை தரும் அட்டகாசமான அரிசி ஹேர் பேக். அடுத்தவர்கள் கண்ணை பறிக்கும் அளவுக்கு...

அதிரடியான முடி வளர்ச்சியை தரும் அட்டகாசமான அரிசி ஹேர் பேக். அடுத்தவர்கள் கண்ணை பறிக்கும் அளவுக்கு கருகருமுடி காலத்துக்கும் கொட்டாமல் வளரும்.

- Advertisement -

தினம் தினம் தலை சீவும் போது நூற்றுக்கணக்கான முடிகள் கொட்டிக்கொண்டே இருந்தால் பிறகு தலைமுடி எப்படி அடர்த்தியாக இருக்கும். ஒரு சில நாட்களில் வழுக்கை விழத்தான் செய்யும். சரி, கொட்டிய இடத்தில் முடி மீண்டும் வளர்கிறதா. அதுவும் இல்லை. இதற்கு என்ன செய்வது. ஒரு அழகான அழகு குறிப்பு உள்ளது. இதை பின்பற்றி வந்தால் சளி பிடிக்காமல், தலைவலி வராமல், உங்களுடைய தலை முடியை வளர்க்கலாம். சைனஸ் பிரச்சனை உள்ளவர்களும் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். பயம் கிடையாது. இதில் நாம் குளிர்ச்சி நிறைந்த வெந்தயம் நல்லெண்ணெய் இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் சேர்க்கப் போவது கிடையாது. சரி, வாங்க தலைமுடியை அழகாக வளர்க்க, அந்த அழகான அழகு குறிப்பு என்ன என்று தெரிந்து கொள்வோம்.

அழகான முடி வளர்ச்சியை கொடுக்கும் அரிசி ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக்குக்கு நாம் பயன்படுத்த போகும் அரிசி, கருப்பு கவுனி அரிசி. பெரும்பாலும் இப்போது இந்த அரிசி எல்லா கடைகளிலும் விற்கின்றது. அதை வாங்கிக் கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே கருப்பு கவுனி அரிசியை தேவையான அளவு எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளவும். இரண்டு முறை கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வையுங்கள். இரவு முழுவதும் அந்த அரிசி தண்ணீரில் ஊறியதும், மறுநாள் காலை அந்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை அரைத்த இதை அப்படியே ஒரு காட்டன் துணியில் வடிகட்டி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது கருப்பு கவுனி அரிசி திப்பி தனியாக கொரகொரப்பாக நமக்கு இருக்கும். வடிகட்டிய அந்த லிக்விட் தனியாக இருக்கும் அல்லவா. அந்த லிக்விடை மீண்டும் ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் ஊற்றி, அதில் பழுத்த வாழைப்பழம் 1 போட்டு மீண்டும் அரைக்க வேண்டும். (1 கைப்பிடி கருப்பு கவுனி அரிசி எடுத்தால், ஒரு பழுத்த வாழைப்பழம் சரியாக இருக்கும். நீங்கள் எடுக்கும் அரிசிக்கு தகுந்தவாறு வாழைப்பழத்தை கூடுதலாக சேர்க்கவும்.) சூப்பரான மொழு மொழு ஹேர் பேக் கிடைத்திருக்கும். இந்த ஹேர் பேக்கில் பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன் இல்லை என்றால் ஆலிவ் ஆயில் 1 ஸ்பூன் ஊற்றி கலந்து உங்களுடைய தலையில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு எண்ணெயுமே உங்களுடைய வீட்டில் இல்லை என்றால் தேங்காய் எண்ணெயை ஊற்றி இந்த ஹேர் பேக்கை கலந்து நன்றாக வேர்க்கால்களில் படும்படி, இந்த ஹேர் பேக்கை போட்டு லேசாக விரல்களை கொண்டு மசாஜ் செய்யவும். பிறகு மீதமிருக்கும் ஹேர்பேக்கை நுனி முடிவரை போட்டு கொண்டைக்கட்டி தலையில் ஒரு கேப்(கவர்) போட்டுக்கோங்க. அப்போதுதான் ஹேர் பேக் டிரை ஆகாமல் இருக்கும்.

- Advertisement -

20 அல்லது 25 நிமிடங்கள் கழித்து மயில்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும். அவ்வளவு தான்‌. சூப்பரான ஊட்டச்சத்து உங்களுடைய முடிக்கு கிடைத்திருக்கும். வேர்க்கால்கள் வலுபெறும். முடி வளராத இடத்தில் கூட, முடி வளர்ச்சியை இந்த ஹேர் பேக் தூண்டிவிடும். சரி திப்பி திப்பியாக அரிசியை வடிகட்டி வைத்திருக்கிறோம் அல்லவா. அந்த குருணையை என்ன செய்வது. அதை தூக்கி குப்பையில் போடாதீங்க. அதுவும் நல்ல ஒரு அழகு குறிப்புக்கு பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: மூன்றே மாதத்தில், மூன்று மடங்கு முடி வளர்ச்சியை அதிகரிக்க முத்தான இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்.

உடம்பு முழுவதும் அந்த குருணையை ஸ்க்ரப்பராக பயன்படுத்தி தேய்த்து குளித்தால் உடம்பில் இருக்கும் டெட் செல் நீங்கும். நம்முடைய சருமத்திற்கும் ரொம்ப ரொம்ப நல்லது. இந்த அழகு குறிப்பை வாரத்தில் ஒரு முறை பின்பற்றி வந்தாலும் கூட கருகரு முடி கண்ணை பறிக்கும் அளவிற்கு வளரும். ரெமிடி பிடித்திருந்தால், விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

சற்று முன்