எப்பாடுபட்டாவது மூன்றே மாதத்தில் முடியை அடர்த்தியாக நீளமாக வளர்த்தியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த ஹேர் பேக்கையும் முயற்சி செய்து பார்க்கலாம். மிக மிக எளிமையான முறையில் இந்த ஹேர் பேக்கை இந்த வெயில் காலத்தில் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய முடி வளர்வதில் நல்ல வித்தியாசம் தெரியும். முடி உதிர்வதை கட்டுப்படுத்தி எளிமையான முறையில் தலை முடி பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும். சுலபமான எளிமையான, குறைவான செலவில் ஒரு ரெமெடி இதோ உங்களுக்காக.
முடி வளர்ச்சியை தூண்டும் ஹேர் பேக்:
இந்த பொருட்கள் எல்லாம் உங்களுடைய சமையலறையிலேயே கிடைக்கும். ஆக வெளியே தேடி திரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இன்று மதியம் அல்லது காலை சாதம் வடிக்கிறீர்கள். அந்த வடித்த கஞ்சி இருக்கும் அல்லவா. அதை அப்படியே மூடி போட்டு பத்திரப்படுத்தி வைத்து விடுங்கள். அந்த கஞ்சியில் இன்று இரவு இரண்டு டேபிள்ஸ்பூன் வெந்தயம், இரண்டு டேபிள் ஸ்பூன் பச்சைப்பயிறு, போட்டு ஊற வைக்க வேண்டும். (உங்களுடைய முடியின் அளவுக்கு ஏற்ப எவ்வளவு வெந்தயம், எவ்வளவு பச்சைப்பயிறு வேண்டுமோ கூட்டியோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். இந்த இரண்டு பொருட்களும் மூழ்கும் அளவிற்கு வடித்த கஞ்சி தண்ணீரை இதில் ஊற்றவும்.)
மறுநாள் காலை அந்த வடித்த கஞ்சி தண்ணீரில், வெந்தயமும் பச்சை பயிறும், நன்றாக ஊறி இருக்கும் அல்லவா. அதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு விழுது போல அரைத்து ஒரு காட்டன் துணியில் ஊற்றி பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். பிழிவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். கஷ்டப்பட்டு பிழிந்து எடுத்து விட்டால் கிரீமியான ஹேர் பேக் உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்த ஹேர் பேக்கை தான் தலையில் போட போகின்றோம்.
உங்களுடைய தலைமுடியில் முதலில் தேங்காய் எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து சிக்கு எடுத்துக் கொள்ளவும். பிறகு பாகம் பாகங்களாக முடிகளை பிரித்து வேர் கால்களில் இந்த ஹேர் பேக் படும் படி போடுங்கள். பிறகு நுனி முடி வரை இந்த ஹேர்பேக்கை போட்டு கொண்டை கட்டிக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ரொம்பவும் குளிர்ச்சி நிறைந்த உடம்பாக இருந்தால், சரியாக பத்து நிமிடங்கள் அல்லது 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம். இல்லை என்றால் ஒரு 20 நிமிடம் வரை தலையில் இந்த ஹேர் பேக்கை வைக்கலாம். தவறு கிடையாது. நல்ல வெயில் நேரத்தில் இந்த ஹேர் பேக்கை தலையில் போடும்போது சளி பிடிக்கும் என்ற பயமும் இருக்காது. அருமையான இந்த ரெமடியை வாரம் ஒரு முறை பின்பற்றி வந்தால் கூட முடி திக்காக போஷாக்குடன் வளர தொடங்கிவிடும்.
முடிக்கு தேவையான புரோட்டின் சத்தும் இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும். கூடவே பச்சை பயிரை வேகவைத்து சுண்டலாக சாப்பிடுங்கள். முளைகட்டிய பயிரை ஆவியில் வேகவைத்து சாப்பிடுங்கள். முடிந்தால் முளை கட்டிய பயிரை பச்சையாக சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கும் முடி வளர்ச்சிக்கும் ரொம்ப ரொம்ப நல்லது. மேல் சொன்ன இந்த அழகு குறிப்பு ஆர்வம் உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.