முகம் அழகாக இருக்க என்னென்னவோ செய்து மெனக்கெடுக்கிறோம். இதற்கென கெமிக்கல் கலந்த கிரீம்கள், பார்லர் என அதிக அளவில் செலவும் செய்து கொண்டிருக்கிறோம். இது எல்லாம் அந்த நேரத்தில் நம்முடைய முகத்தை பிரகாசமாக காட்டுவதற்காக மட்டுமே அன்றி முகம் எப்போதும் பிரகாசமாகவும் இளமையாகவும் இருப்பதற்காக அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சிலருக்கு இப்படி தேவையில்லாத கிரீம்களை எல்லாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது முகம் இளம் வயதிலேயே வயதான தோற்றமும் வந்து விடுகிறது. ஆகையால் முகத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக பயன்படுத்தும் எந்த ஒரு கிரீம் ஆக இருந்தாலும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். முகத்தின் நிறத்தை அதிகரிக்க முடிந்த அளவிற்கு இயற்கையான முறைகளை கையாளும் போது இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படாமல் தவிர்த்து விடலாம். இந்த அழகு குறிப்பு பதிவில் எந்த வித பக்க விளைவையும் எடுத்தாத இரண்டு வகையான ஃபேஸ் பேக்கை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
முகம் எப்போதும் இளமையாக இருக்க தக்காளி ஃபேஸ் பேக்
இந்த பேக்கை தயாரிக்க பாதி பழுத்த தக்காளி இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் இவை மட்டும் தான் தேவை. முதலில் தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு நல்ல பைன் பேஸ்டாக அரைத்து அதில் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பேக்கை போடுவதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். அடுத்து காய்ச்சாத பச்சை பால் இருந்தால் அதை ஒரு காட்டன் பஞ்சில் முக்கி எடுத்து முகம் முழுவதும் ஒற்றி எடுத்து ஒரு நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரால் முகத்தை அளந்து விடுங்கள். அதன் பிறகு முகத்தை ஈரம் இல்லாமல் துடைத்த பிறகு இந்த பேக்கை போட்டு 15 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் போல முகத்தை சுத்தம் செய்து விடுங்கள்.
இது உங்கள் முகத்தில் இருக்கும் கருந்திட்டுகள், கருமை நிறம் போன்றவற்றை நீக்குவதுடன் முகத்திற்கு நல்ல ஒரு பளபளப்பையும், நிறத்தையும் கூட்டிக் கொடுக்கும். அது மட்டும் இன்றி தேன் முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய செய்து முகம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க உதவி செய்யும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உங்கள் முகம் எப்போதுமே இளமையுடன் பிரகாசமாக ஜொலிக்கும்.
இதே போல பாதி தக்காளி பழம், ஒரு துண்டு பப்பாளி இரண்டையும் தனித்தனியாக அரைத்து பேஸ்ட்டாக மாற்றி இரண்டையும் சம அளவு எடுத்து குழைத்துக் கொள்ளுங்கள். இதையும் முகத்தில் தொடர்ந்து பார்க்க போட்டு வர உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு, முகப்பரு வந்த கரும் திட்டுகள், முகச்சுருக்கம் அனைத்தும் நீங்கி நாளடைவில் முகம் நல்ல பிரகாசமாக மாறுவதுடன் முகம் எப்பொழுதும் இளமையுடன் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: நரைமுடி வராமல் தடுக்க நல்லெண்ணெயில் இந்த 1 பொருளை சேர்த்து பாருங்க! கருகருன்னு உங்க முடியும் வயதான தோற்றத்தில் இருந்து விரைவில் மாறனுமா?
முகத்தின் நிறத்தை கூட்டி முகம் எப்போதும் இளமையாக இருக்க இந்த இரண்டு எளிய பேக்குகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது முகம் தொடர்பான உங்கள் பிரச்சனைகள் சரியாவதுடன், இதனால் எந்த வித பக்க விளைவும் ஏற்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.