வடித்த சாதம் செய்யும் காலம் மாறிப்போய் குக்கரில் பலரும் சாதம் செய்ய துவங்கி விட்டோம். இது உடலுக்கும், வீட்டிற்கும் நல்லது அல்ல! எப்பொழுதும் சாதத்தை வடித்து சாப்பிடுவது தான் நல்லது. இப்படி வடிக்கும் சாதத்தில் இருக்கக்கூடிய கஞ்சி தண்ணீரில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. அது மட்டும் அல்லாமல் நீங்கள் அரிசி கழுவும் தண்ணீரிலும் சத்துக்கள் அதிகம் உண்டு. இந்த சத்துக்களை வீணாக்குவதை விட தலைமுடியின் வளர்ச்சிக்காக செலவிடுவது ரொம்பவே நல்லது. எப்படி இந்த ரெண்டு பொருட்கள் தலைமுடியை பாதுகாக்கிறது? என்பதைத்தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
அரிசி களைந்த தண்ணீரை நன்கு புளிக்க விட்டு அதன் பிறகு தலைமுடிக்கு பயன்படுத்தினால் தலைமுடியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் பலவும் நீங்குவதாக கூறப்படுகிறது. அரிசி கழுவிய தண்ணீரில் அமினோ ஆசிட் விட்டமின் பி, விட்டமின் ஈ, மினரல்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. அரிசி கழுவிய தண்ணீருக்கு இணையாக அரிசி வடித்த கஞ்சி தண்ணீரிலும் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. மேலும் இது தலைமுடியை மிருதுவாகவும், நல்ல ஊட்டச்சத்து மிக்கதாகவும் மாற்றக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.
பெரும்பாலும் அரிசி களைந்த தண்ணீராக இருந்தாலும், வடித்த கஞ்சி தண்ணீராக இருந்தாலும் ஒன்று கீழே வீணாக சிங்கில் கொட்டி விடுகிறோம் அல்லது ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்கு வெளியில் வாலியில் ஊற்றி வைக்கிறோம். இந்த தண்ணீரில் இருக்கும் சத்துக்கள் எலி வால் போல இருக்கும் நம்முடைய தலைமுடியை நன்கு அடர்த்தியாக மாற்றக்கூடிய தன்மையை கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
முதலில் அரிசி கழுவிய தண்ணீரை எப்படி பயன்படுத்துவது? என்பதை தெரிந்து கொள்வோம். அரிசியை தண்ணீர் ஊற்றி முதல் முறை கழுவும் தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும். பின்பு இரண்டாவது முறை நீங்கள் கழுவும் போது அந்த தண்ணீரை எடுத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை இரண்டு நாட்களுக்கு அப்படியே நன்கு புளிக்க விடுங்கள். அதில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகரித்து இருக்கும். இதில் தான் ஏராளமான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி இருக்கும். இது தலைமுடியை வேரிலிருந்து நன்கு செல்களை தூண்டி விட்டு வளர செய்யக் கூடியது. இந்த தண்ணீருடன் நீங்கள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
தலைக்கு நீங்கள் எப்பொழுதும் போல ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி குளித்துக் கொள்ளுங்கள். தலையை நன்கு அலசிய பின்பு கடைசியாக நீங்கள் எடுத்து வைத்துள்ள இந்த தண்ணீரை தலை முழுவதும் தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் இது போல் தலை முழுவதும் மசாஜ் செய்த பின்பு மீதம் இருக்கும் தண்ணீரால் தலையை அலசி கொள்ளுங்கள். இந்த கஞ்சி தண்ணீர் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது நல்லது.
இதையும் படிக்கலாமே:
நமக்கு மட்டும் உதடு கருப்பா இருக்கேன் பீல் பண்றீங்களா? கவலையை விடுங்க ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க. உங்க உதடு கோவை போல செவசெவன்னு மாறிடும்.
நன்கு தலையை அலசிய பின்பு ஈர தலையை நன்கு துவட்டி காய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் கண்டிஷனர் போட்டது போல உங்களுடைய தலைமுடி அவ்வளவு நைசாக, சைனிங்காக, மிருதுவாக மாறி இருக்கும். இதில் எந்தவிதமான குளிர்ச்சி பொருளும் இல்லாததால் எல்லா வகையான தலைமுடியினரும், எல்லா வகையான உடல் அமைப்பை கொண்டவர்களும் தாராளமாக பயன்படுத்தலாம், சளி பிடிக்காது. இதை வாரம் ஒரு முறை மட்டும். பயன்படுத்தி வந்து பாருங்கள். 2 மாதத்தில் உங்களுடைய இழந்த முடி மீண்டும் நன்கு அடர்த்தியாக வளர்ச்சி அடைவதை நீங்கள் உணரலாம்.