- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கேரட் பீன்ஸ் பொரியலை கூட இவ்வளவு சுவையாக வாசமாக செய்ய முடியும் என்பது இப்போதுதான் தெரிகிறது....

கேரட் பீன்ஸ் பொரியலை கூட இவ்வளவு சுவையாக வாசமாக செய்ய முடியும் என்பது இப்போதுதான் தெரிகிறது. இப்படி எல்லாம் சமைத்துக் கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் காய்கறிகளை வேண்டாம் என்றே சொல்ல மாட்டாங்க.

- Advertisement -

கேரட் பீன்ஸ் பொரியல், எப்போதும் நம் வீட்டில் செய்யக்கூடிய பொறியல்தான். வீட்டில் இருப்பவர்கள் இந்த பொரியலை எப்ப செய்தாலும் சாப்பிட மாட்டாங்க. அப்படியே கடாயில் மிச்சம் இருக்கும். என்ன செய்வது. இதில் கொஞ்சம் வித்தியாசமான மசாலா பொருட்களை அரைத்து போட்டு ட்ரை பண்ணி பார்ப்போமே. இப்படி செய்து கொடுத்தால் நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்‌ வரை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க அந்த ஸ்பெஷல் கேரட் பீன்ஸ் பொரியலை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

கேரட்டும் பீன்ஸும் சேர்ந்தது போல 1/4 கிலோ வாங்கிக் கொள்ளுங்கள். அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதை பக்குவமாக வேக வைக்க வேண்டும். கடாயில் போட்டு வேக வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது குக்கரில் போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்துக் கொண்டாலும் சரி. இரண்டு காயும் பக்குவமாக தண்ணீர் இல்லாமல் வேக வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நறுக்கி வைத்திருக்கும் கேரட் பீன்ஸை போட்டு 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி, காய்க்கு தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன், மட்டும் போட்டு ஒரு மூடி போட்டு 5 லிருந்து 7 நிமிடம் இந்த காயை வேக வைத்துக் கொள்ளுங்கள். குக்கராக இருந்தால் அதில் காய்கறிகளை போட்டு அதேபோல உப்பு மிளகாய்த்தூள் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து ஒரு விசில் விட வேண்டும். வேக வைத்த காய் அப்படியே இருக்கட்டும்.

அடுத்து இந்த பொரியலுக்கு போட ஸ்பெஷல் மசாலா அரவையை அரைக்கலாம். மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன், பூண்டு 2 பல், மிளகு 10, வர மல்லி 1/2 ஸ்பூன், சீரகம் 1/4 ஸ்பூன், சோம்பு 1/4 ஸ்பூன், வர மிளகாய் 1, கருவேப்பிலை 1 கொத்து போட்டு தண்ணீர் ஊற்றாமல் இதை கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரியலை தாளித்து விடலாம். 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு 1/2 ஸ்பூன், நறுக்கிய பெரிய வெங்காயம் 1, கருவேப்பிலை 1 கொத்து, போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கி வந்த பிறகு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து நாம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அந்த விழுதை இந்த வெங்காயத்தில் கொட்டி பச்சை வாடை போக வதக்க வேண்டும்.

ஏனென்றால் அரவையில் நாம் எல்லா பொருட்களையும் பச்சையாக தான் சேர்த்து அரைத்து இருக்கின்றோம். அரவையின் பச்சை வாடை போனதும் வேக வைத்திருக்கும் காய்கறிகளை இதோடு கொட்டி தேவைப்பட்டால் உப்புத்தூள் தூவி, அடுப்பை சிம்மில் வைத்து இந்த பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து விட வேண்டும். காய்கறிகள் மசாலா அரவையோடு சேர்ந்து நல்ல ஒரு மனத்தோடு சுடச்சுட சூப்பரான பொறியல் தயாராகி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இட்லிக்கு தொட்டு சாப்பிட வழக்கமா செய்யும் சட்னி சாம்பாருக்கு ஒரு நாள் லீவு விட்டு, பீர்க்கங்காயில் இப்படி ஒரு சைடு டிஷ் செய்து வையுங்கள். 2 இட்லி சாப்பிடுறவங்க கூட, 4 இட்லி சாப்பிடுவாங்க.

இந்த கேரட் பீன்ஸ் சுவைக்கு நிச்சயம் வீட்டில் இருப்பவர்களின் நாக்கு அடிமையாகி விடும். விருப்பமாக இந்த வாசத்திற்காகவே அந்த கேரட் பொரியலை விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க பாருங்க.

சற்று முன்