- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெள்ளிக்கிழமை வீட்டில் இந்த திசையில் தீபத்தை ஏற்றினால், வாழ்க்கையில் நீங்க நம்பி ஏமாந்த பணம், பொருள்,...

வெள்ளிக்கிழமை வீட்டில் இந்த திசையில் தீபத்தை ஏற்றினால், வாழ்க்கையில் நீங்க நம்பி ஏமாந்த பணம், பொருள், சொத்து, வாழ்க்கை என இழந்த அனைத்தும் மீண்டும் உங்களை நிச்சயம் வந்தடையும்.

- Advertisement -

பணமோ பொருளோ நிலமோ யாரோ ஒருவரை நம்பி கொடுத்து ஏமாந்து விட்டேன் என்ற இந்த வார்த்தையை நம் வாழ்க்கையில் கேட்காமல் நகரவே முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் நிச்சயமாக யாரிடமுமோ ஏமாந்திருப்போம். அது பணம் பொருளாகவும் இருக்கலாம் அல்லது வாழ்க்கையாகவோமே கூட இருக்கலாம். இப்படி ஏமாந்து இழந்தது நமக்கு மிகப் பெரிய வருத்தத்தையே தரும். இதையெல்லாம் நம்மிடம் இருக்கும் பொருள் திருடு போய் விட்டதை காட்டிலும் பெருமளவு வலித்தரக் கூடியது.

இதற்கு காரணம் நாம் ஏமாந்து விட்டோம் என்று சாதாரணமாக கடந்து விட முடியாது. நமக்குத் தெரிந்தவர்கள் நமக்கு நெருக்கமானவர்களிடம் தான் இப்படி நாம் ஏமார்ந்து போயிருப்போம். அவர்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் அவசர தேவைக்கு என நம்மிடம் பணம் கேட்டிருப்பார்கள். நாமும் உதவி என்கிற பெயரில் அதை செய்திருப்போம். அது ஏதோ சிறிதளவாக இருந்தால் பரவாயில்லை. ஒரு சிலர் பெரிய அளவில் பணத்தை கொடுத்து விட்டு அல்லது வீட்டில் உள்ள பொருளையும், நிலத்தையோ வைத்ததோ ஏன் வாழ்க்கையும் கூட இழந்து நிற்பார்கள். அப்படியானவர்கள் எல்லாம் இழந்ததை திரும்ப கிடைக்க கூடிய அற்புதமான ஒரு பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இழந்த பொருள் பணம் வாழ்க்கை எல்லாம் திரும்ப கிடைக்க
இந்த பரிகாரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை என்பது சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கக் கூடிய நாள். இந்த நாளில் நம்முடைய இழந்த பொருளை மீட்டுவதற்கான பரிகாரத்தை செய்யும் போது அது பல மடங்கு பலனை கொடுக்கும். இந்தப் பரிகாரத்திற்கு நாம் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு நாம் ஏற்ற வேண்டியது தீபம் மட்டுமே அதைப் பற்றி மேலும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த தீபத்தை நாம் தெற்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும். பொதுவாக தெற்கு திசை என்றால் சரியாக வராது. தெற்கு திசை வீடு என்றால் சரியாக வராது என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் தெற்கு என்பது நமக்கு வருவாயை தரக் கூடியது. தெற்கு திசையானது செவ்வாய் கிரகத்திற்கு உரியது. செவ்வாய் வருவாயை ஈட்டி தரும் என்ற ஒரு பழமொழியே உண்டு. அத்தகைய திசையும் நமக்கு நிச்சயம் வருவாய் ஈட்டி தரும். ஆகையால் இந்த தீபத்தையும் நாம் தெற்கு திசையை நோக்கித் தான் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை காலை, மதியம், மாலை என உங்களுக்கு எந்த நேரம் வசதியாக உள்ளதோ அதில் ஏற்றி கொள்ளலாம். இதை ஏழு விளக்காக ஏற்ற வேண்டும். இதை கட்டாயம் தொடர்ந்து ஏழு வாரம் ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றி வரும் காலங்களில் உங்களிடம் இருந்து பறிப்போன பொருட்கள் எல்லாம் திரும்ப கிடைப்பதற்கான அறிகுறிகள் புலப்படும். அதன் பிறகும் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் 7 வாரம் என்பது அவசியமாக ஏற்ற வேண்டும் என்பதை குறிக்கும்.

இதையும் படிக்கலாமே: பிள்ளையாரை இப்படி வழிபட்டால் நம் வீட்டு குழந்தைகளின் மந்த புத்தியை அவர் நீக்கி, தெளிவான ஞானத்தை அருள்வார்.

எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்யும் போது அதற்கான பல நிச்சயம் கிடைக்கும். இத்துடன் நீங்கள் இழந்ததை பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள் கண்டிப்பாக அது கிடைக்கும். வாழ்க்கையில் எதை இழந்தாலும் நிச்சயமாக திரும்ப பெற முடியும் என்கிற நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்.

சற்று முன்