ஒரு துளி கெமிக்கல் கூட உங்கள் தலைமுடியை உதிரச் செய்யாது. இன்று இருக்கக்கூடிய ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் மத்தியில் எழக்கூடிய கேள்வி இது. எது கெமிக்கல் இல்லாத ஷாம்பூ. எந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி வளரும். கடையில் பாட்டிலில் ஸ்டொர் செய்த எந்த ஒரு ஷாம்புவாக இருந்தாலும் அது கெட்டுப் போகாமல் இருப்பதற்கு கொஞ்சம் கெமிக்கல் சேர்க்கத்தான் செய்வார்கள். ஆகவே அப்படி தேடினால் உங்களுக்கு விடை கிடைக்காது.
நீங்க வேணும்னா தலைக்கு குளிக்க ஷாம்பூவுக்கு பதில் இந்த பொடியை பயன்படுத்தி பாருங்கள். வீட்டிலேயே நீங்கள் இந்த பொடியை உங்கள் கையாலேயே செயற்கை பொருட்கள் சேர்க்காமல் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய தலைமுடிக்கு கெமிக்கலால் எந்த ஒரு பாதிப்பும் வராது. அது என்ன பொடி அதை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.
அரப்பு சீயக்காய் பொடி தயார் செய்யும் முறை:
இதை நாம் மறந்தே போய் விட்டோம். தலைக்கு குளிக்க அரப்பும் சீயக்காயும் இருப்பது உங்களுக்கு நினைவு இருக்குதா. கிடையவே கிடையாது. அரப்பு இலையாக கிடைத்தால் அதை வாங்கி நிழலிலேயே காய வைத்து அரப்பு பொடி தயார் செய்து கொள்ளுங்கள். சுத்தமான சீயக்காய் வாங்கி அரைத்துக் கொள்ளுங்கள். வெந்தயத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த மூன்று பவுடரும் நமக்கு தேவைப்படுகிறது. ஒரு பவுலில் அரப்பு பொடி 2 டேபிள் ஸ்பூன், வெந்தய பொடி 1 டேபிள் ஸ்பூன், சீயக்காய் தூள் 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு மூன்றையும் ஒன்றாக கலந்தால் சூப்பராக ஹேர் வாஷ் பவுடர் தயார். இதை எப்படி ஷாம்பு பதத்திற்கு மாற்றுவது.
தயார் செய்து கலந்து எடுத்து வைத்திருக்கும் பொடியில், முந்தைய நாள் இரவே தண்ணீரை ஊற்றி கலந்து ஊற வைக்கலாம். உங்களுடைய வீட்டில் அரிசி வடித்த கஞ்சி இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. அரிசி வடித்த கஞ்சியை இந்த பொடியோடு சேர்த்து கலந்து இரவே வைத்து விடுங்கள். மறுநாள் காலை இது ஷாம்பு போல தான் மொழு மொழுவென இருக்கும். இதை எடுத்து அப்படியே தலையில் போட்டு நன்றாக மசாஜ் செய்தபடி தலையை கசக்கி அலசி விட்டால் தலையில் இருக்கும் அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும். உங்களுக்கு ஒரு ரிலாக்ஸேசனும் கிடைக்கும்.
இப்போதெல்லாம் வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமே யாரிடமும் இல்லை. நீங்கள் பெண்களாக இருந்தால் வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து, நாம் தயார் செய்த பொடியை போட்டு தலைக்கு குளித்து பாருங்கள். வேற லெவல்ல ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீஃப் கிடைக்கும். நீங்க ஆண்களாக இருந்தால் இதே விஷயத்தை சனிக்கிழமை செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: முடி கொட்டிய இடத்தில், 30 நாட்களில் புது முடி வளர்வதை பார்க்க உங்களுக்கு ஆசையா இருக்குதா? புது புது முடிகளை சீக்கிரம் வளர வைக்கும் சூப்பரான பவர்ஃபுல்லான ஹேர் பேக் இதோ!
எளிமையான இந்த குறிப்பை மறந்தவர்கள் மீண்டும் நினைவு படுத்த வேண்டும் என்பதற்காக இந்த குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேவை என்பவர்கள் பயன்படுத்தி பலன் பெறலாம். ஒரு மாதம் வரை இந்த பொடி கெட்டுப் போகாது. ஹாஸ்டலில் தங்கி இருந்தால் கொஞ்சம் நிறைய அளவு அரப்பு பொடி, வெந்தய பொடி, சீகைக்காய் பொடியை கலந்து ஈரம் படாமல் பாட்டில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.