- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஎவ்வளவு ஆழமான பாத வெடிப்பாக இருந்தாலும் இந்த மூன்று பொருட்களை உபயோகித்தால் பட்டு போன்ற மென்மையான...

எவ்வளவு ஆழமான பாத வெடிப்பாக இருந்தாலும் இந்த மூன்று பொருட்களை உபயோகித்தால் பட்டு போன்ற மென்மையான பாதத்தை பெற முடியும்.

- Advertisement -

பாத வெடிப்பு அல்லது பித்த வெடிப்பு என்ற ஒன்று அனைவருக்கும் வரும். அதை நாம் ஆரம்பத்திலேயே சரி செய்து விட்டோம் என்றால் அதனால் நமக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இதை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருப்பதால் அந்த பாத வெடிப்பு மிகவும் ஆழமாக சென்று ரத்தம் வரும் அளவிற்கு கூட பாதிப்பை ஏற்படுத்தி விடும். எவ்வளவு மோசமான பாத வெடிப்பாக இருந்தாலும் எந்த பொருட்களை உபயோகித்தால் அவை சரியாகி மிருதுவான பாதம் கிடைக்கும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பாதம் சுத்தம் இல்லாமல் இருப்பதால் இந்த வெடிப்பு ஏற்படும். மேலும் ஈரத்தன்மை அதிகமாக இருந்தாலும் அல்லது ஈரத்தன்மையே இல்லாமல் இருந்தாலும் இந்த வெடிப்பு ஏற்படும். அதிக நேரம் நிற்பவர்கள் மற்றும் நடப்பவர்களுக்கு இந்த பாத வெடிப்பு ஏற்படும். உடல் நலனில் பாதிப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும், டீ, காபி போன்ற பானங்களை அதிகமாக அருந்துபவர்களுக்கும் இந்த பாத வெடிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பாத வெடிப்பை நீக்குவதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். அவை வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள். வேப்ப எண்ணையை நாம் உபயோகப்படுத்தினோம் என்றால் அதில் இருக்கும் கசப்புத் தன்மை ஆனது பாத வெடிப்பில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிப்பதற்கு உதவுகிறது. விளக்கெண்ணையை உபயோகப்படுத்துவதால் அதன் குளிர்ச்சி தன்மையால் வெடிப்புகள் மறைந்து மிருதுவாக மாறுவதற்கு உதவுகிறது. மஞ்சளில் இருக்கும் ஆன்டிபயாட்டிக் கிருமிகளை அழிக்க உதவுவதோடு வெடிப்பால் ஏற்பட்ட புண்களையும் ஆற வைக்க உதவுகிறது.

இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளுங்கள். அதே அரை ஸ்பூன் அளவு வேப்பெண்ணையையும் விளக்கெண்ணெயையும் எடுத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை நாம் இரவு படுக்கப் போவதற்கு முன்பாக உபயோகப்படுத்த வேண்டும். முதலில் பாதத்தை நன்றாக சுத்தமாக கழுவிய பிறகு இந்த பேஸ்டை உபயோகப்படுத்த வேண்டும். இந்த பேஸ்ட்டை வெடிப்பு இருக்கும் இடத்தில் நன்றாகவும் ஆழமாகவும் தடவ வேண்டும். தடவிய பிறகு காலுக்கு சாக்ஸ் அல்லது ஏதாவது ஒரு கவரை பயன்படுத்தி காலில் கட்டிக் கொண்டு பிறகு உறங்குவதன் மூலம் பாதத்தில் நாம் போட்டிருக்கும் இந்த பேஸ்ட் வேறு எங்கும் ஒட்டாமல் நம் பாதத்திலேயே இருக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: ஒரே மாதத்தில் நரைமுடி, இளநரை இரண்டும் இருந்த இடம் தெரியாமல் மறைய இதை விட சூப்பர் ரெமிடி கிடையாது. அப்புறம் பாருங்க நீங்களே தேடினாலும் ஒரு நரை முடி கூட கண்டுபிடிக்க முடியாது.

இவ்வாறு நாம் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தாலேயே ஒரு நல்ல மாற்றத்தை நம்மால் காண முடியும். வெடிப்பு அதிகமாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் இதை உபயோகப்படுத்தி நல்ல பலனை அடையலாம்.

சற்று முன்