- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பீட்ரூட் சாப்பிடவே மாட்டேன் என்று சொல்பவர்களுக்கு கூட இப்படி ஒரு முறை பீட்ரூட்டை செஞ்சு கொடுத்தால்...

பீட்ரூட் சாப்பிடவே மாட்டேன் என்று சொல்பவர்களுக்கு கூட இப்படி ஒரு முறை பீட்ரூட்டை செஞ்சு கொடுத்தால் விரும்பி சுவைத்து மீண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

உடலுக்கும், சருமத்திற்கும் நன்மை பயக்கக்கூடிய அற்புதமான ஒரு காய்கறி தான் பீட்ரூட். இந்த பீட்ரூட்டை நாம் எப்படி செய்து கொடுத்தாலும் அதை விரும்பி பலரும் சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பீட்ரூட்டால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். அந்த சத்துக்கள் கிடைக்க பீட்ரூட்டை எப்படி சமைத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை சீராகும். இதில் இருக்கும் பீட்டா சையனின் மற்றும் நார்ச்சத்து இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. மேலும் இதில் போலிக் அமிலம் அதிகமாக உள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. தினமும் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் வராது. இதில் சையனின் உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

- Advertisement -

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் கேசரி செய்வது எப்படி என்று பார்ப்போம்..
3/4 கப் அளவிற்கு ரவையை எடுத்து ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் அளவு துருவிய பீட்ரூட்டை எடுத்து அதனுடன் 3/4 கப் அளவிற்கு காய்ச்சிய பாலை சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பீட்ரூட் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பீட்ரூட் சாறு 2 கப் அளவிற்கு தேவைப்படும் என்பதால் அதற்கேற்றவாறு கூடுதலாக தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக காய்ந்ததும் நாம் எடுத்து வைத்திருக்கும் பீட்ரூட் சாறை அதில் ஊற்ற வேண்டும். சாறு நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அதில் ஒரு சிட்டிகை உப்பை சேர்க்க வேண்டும். சாரு நன்றாக கொதித்த பிறகு நாம் வறுத்து வைத்திருக்கும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாத அளவிற்கு கிண்ட வேண்டும்.

- Advertisement -

ரவை நன்றாக வெந்த பிறகு அதில் 1/2 கப் அளவிற்கு சர்க்கரையை சேர்க்க வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு அந்த கடாயை இறக்கி வைத்துவிட்டு வேறு ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்ற வேண்டும். நெய் நன்றாக உருகியதும் அதில் 12 முந்திரி பருப்பு, 12 பாதாம் பருப்பு போன்றவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

நெய்யில் வறுத்த இந்த பருப்புகளை கேசரியில் ஊற்ற வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவு தான் பீட்ரூட் கேசரி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் அவல் இருந்தா பத்தே நிமிஷத்துல நல்ல மொறு மொறுன்னு இந்த முறுக்கை சுட்டு எடுத்துடலாம். இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு ஸ்பெஷலான இந்த அவல் முறுக்கை செஞ்சி அசத்துங்க.

மிகவும் சத்துக்கள் மிகுந்த பீட்ரூட்டை இப்படி கேசரி செய்து கொடுப்பதன் மூலம் பீட்ரூட் சாப்பிடாதவர்களும் அதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சற்று முன்