- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஒரு கப் அவல் இருந்தா பத்தே நிமிஷத்துல நல்ல மொறு மொறுன்னு இந்த முறுக்கை சுட்டு...

ஒரு கப் அவல் இருந்தா பத்தே நிமிஷத்துல நல்ல மொறு மொறுன்னு இந்த முறுக்கை சுட்டு எடுத்துடலாம். இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு ஸ்பெஷலான இந்த அவல் முறுக்கை செஞ்சி அசத்துங்க.

- Advertisement -

வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் செய்யப்படும் பலகாரங்களில் இந்த முறுக்கு வகைகள் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் நாளை கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டிற்கு பலரும் இந்த முறுக்கு சுட்டு வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. எப்பொழுதும் நாம் செய்யும் முறுக்குக்கு அரிசி ஊற வைத்து அதை காய வைத்து அரைத்து என இத்தனை வேலைகள் செய்ய வேண்டியது இருக்கும். இந்த முறையில் முறுக்கு செய்யும் போது பத்து நிமிடத்தில் சுலபமாக செய்து விடலாம். வேலையும் மிச்சம் வாங்க அந்த அவல் முறுக்கு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

செய்முறை 

இந்த முறுக்கு செய்ய முதலில் ஒரு கப் வெள்ளை தட்டை அவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ரெண்டு கப் பொட்டுக்கடலை எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இதை அரைத்த பிறகு கொரகொரப்பாக இருப்பது போல் தோன்றினால் மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து விடுங்கள். மாவு நைசாக இருந்தால் தான் முறுக்கு வெடிக்காமல் வரும்.

- Advertisement -

அடுத்து அரைத்த இந்த மாவில் ஒரு பவுலில் சேர்த்து விடுங்கள். அதன் பிறகு இரண்டு கப் பச்சரிசி மாவு அல்லது இடியாப்ப மாவு என உங்களிடம் எந்த மாவு இருந்தாலும் அதை இதனுடன் சேர்த்து கலந்து விடுங்கள். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர், அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயம், இரண்டு டேபிள் ஸ்பூன் எள் இவை அனைத்தையும் சேர்த்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை லேசான தளர்வுடன் பிசைந்து கொள்ளுங்கள்.

மாவை அதிக கெட்டியாக பிசைந்து விட்டால் உங்களுக்கு முறுக்கு அச்சியில் போட்டு பிழியும் போது உடைந்து உடைந்து வரும். ஆகையால் கொஞ்சம் தளர்வாக இருந்தால் போட்டு பிழியும் போது உடையவும் செய்யாது, அதே நேரத்தில் பிரியவும் சுலபமாக இருக்கும். தயார் செய்து வைத்த மாவை ஒரு ஐந்து நிமிடம் வரை அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் அதிக சூடாக இருந்தாலும் போட்டவுடன் முறுக்கு நிறம் மாறி விடும் உள்ளே வெந்து வராது. இப்போது கலந்து வைத்த மாவை முறுக்கு அச்சில் போட்டு ஒவ்வொரு முறுக்காக சுட்டு போட்டு ஒரு புறம் சிவந்து பிறகு திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் நல்ல மொறு மொறுவென்று அவல் முறுக்கு தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: நாளை கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக பஞ்சு போல சாப்டான இந்த ரவை அப்பத்தை செஞ்சு பாருங்க. கிருஷ்ண ஜெயந்தி போலவே இந்த அப்பமும் ரொம்பவே ஸ்பெஷலா இருக்கும்.

இந்த முறையில் முறுக்கு செய்வது மிக மிக சுலபம் முறுக்கே சுடத் தெரியாதவர்கள் கூட இப்படி செய்யும் போது சுலபமாக செய்து விடுவார்கள். சுவையும் அட்டகாசமாக இருக்கும் இந்த கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ஆக இந்த முறுக்கு செஞ்சு பாருங்க.

சற்று முன்