பணம் பாதாளம் வரை போகும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த காலத்தில் பணம் எல்லா இடங்களுக்கும் போகும். பணம் இல்லை என்றால் நம்மால் எந்த இடங்களுக்கும் போகவே முடியாது என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட பணத்தை நாம் பல வழிகளில் சம்பாதித்தாலும் அந்த பணம் நம்மிடம் நிலைத்து இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே தான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நபருக்கும் பண தட்டுப்பாடு என்பது வரத்தான் செய்கிறது. அவ்வாறு பண தட்டுப்பாடு என்பது வராமல் பணவரவு என்றென்றைக்கும் நம் வீட்டில் இருக்க சமையலறையில் இருக்கும் எந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஒருவரிடம் எப்படி நேர்மறை ஆற்றல்களும் எதிர்மறை ஆற்றல்களும் நிறைந்திருக்கிறது அதேபோல்தான் நம் வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு இருக்கிறது. நேர்மறை ஆற்றலை அதிகமாக இருக்கும் பொருளை நாம் நம்முடன் வைத்திருந்தால் நமக்கு என்றுமே எதிர்மறையான விளைவுகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
ஒரு வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்த இடமாக பூஜை அறை இருக்கும் என்றாலும் மற்றொரு முக்கியமான இடமாக இருக்கக்கூடியது சமையலறை. சமையலறை என்றைக்கும் சுத்தமாக இருந்தால்தான் அந்த வீட்டில் அன்னலட்சுமி என்பவள் நிலையாக நிலைத்திருப்பாள். அவள் நிலையாக நிலைத்திருந்தால் தான் நம்மால் நிம்மதியாக வாழ முடியும். அப்படிப்பட்ட சமையலறையில் நாம் நேர்மறையான ஆற்றல்கள் நிறைந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து வைப்பதன் மூலம் நமக்கு பணவரவு என்பது இருந்து கொண்டே இருக்கும்.
பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் மகாலட்சுமியின் அம்சம் என்போம். அந்த வகையில் இன்று நாம் இந்த பரிகாரத்திற்கு வெள்ளை சர்க்கரையை உபயோகப்படுத்த போகிறோம். ஒரு கண்ணாடி பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பவுல் நிறைய வெள்ளை சர்க்கரையை போட வேண்டும். பிறகு அதில் இலவங்கப்பட்டையை குத்தி வைக்க வேண்டும். இதை நம் வீட்டின் சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும்.
லவங்கப்பட்ட என்பது அற்புதமான நேர்மறை ஆற்றல்கள் நிறைந்த பொருளாக கருதப்படுகிறது. இந்தப் பொருள் எந்த வீட்டில் அதிகமாக இருக்கிறதோ அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த லவங்கப்பட்டையை நாம் மகாலட்சுமியின் அம்சம் கொண்ட சர்க்கரையில் வைக்கும் பொழுது அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு என்பது இருக்கவே இருக்காது. பண வரவிற்காக நாம் எந்த முயற்சிகளை செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து பணம் நம் வீட்டிற்கு வந்து கொண்டே இருக்கும்.
இந்த பரிகாரத்தை நாம் என்று வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் செய்யக்கூடிய நேரமானது மதியம் 1.15லிருந்து 2.00 மணிக்குள் செய்ய வேண்டும். அந்த நேரத்தை தவற விட்டுவிட்டால் இரவு 8.15லிருந்து 9.00 மணிக்குள் செய்ய வேண்டும். இதை நாம் மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரை நிறம் மாறினால் மட்டுமே அதை நாம் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக மாற்றி வைக்கலாம்.
இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாருக்கு படைத்த தேனை இந்த இடத்தில் ஊற்றினாலே போதும். பணத்தடைகளை அனைத்தையும் தகர்த்தெறிந்து பண வரவை தாராளமாக அள்ளி அள்ளி கொடுப்பார்.
அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய அத்தியாவசியமான பொருட்களான இந்த இரண்டு பொருட்களையும் நாம் ஒன்றாக சேர்த்து வைத்தோம் என்றால் நம்முடைய பணவரவு என்றென்றைக்கும் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.