அனுமனின் பாதச்சுவடுகள் இன்றும் அழியாமல் உள்ள சில இடங்கள் பற்றி தெரியுமா ?

Hanuman Foot print
- Advertisement -

ராமாயணம் மகாபாரதம் என இருபெரும் காப்பியங்களிலும் அனுமன் இடம்பெறுகிறார். மிக சிறந்த ராம பக்தனாக அறியப்படும் அவர் ஒரு மிகப் பெரிய பலசாலி என்பது நாம் அறிந்ததே. அவர் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் அவருடைய பாத சுவடுகள் பட்ட இடங்கள் சில இன்று தெய்வீக தோற்றதோடு காட்சி அளிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

Hanuman Foot print

பெரிய பெரிய பாறைகள் மீது அனுமன் நடந்து செல்கையில் அவரின் பாத சுவடுகள் அந்த பாறைகள் மீது அப்படியே பதிந்துள்ளன. அந்த பாத சுவடுகள் இன்றும் அழியாமல் பல இடங்களில் உள்ளன. அதில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி என்னும் இடத்தில் உள்ளது. அதன் புகைப்படம் தான் மேலே உள்ளது. இராவணன் சீதையை கடத்தி சென்ற போது இந்த இடத்தில் “ஜெயது” என்னும் பறவை ராவணனை எதிர்த்து போராடியதாக ராமாயண காவியம் கூறுகிறது. அதில் இருந்து ராமாயண காலத்தில் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

- Advertisement -

அடுத்து தாய்லாந்திலும் அனுமனின் பாத சுவடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படம் தான் கீழே உள்ளது. தாய்லாந்தில் அனுமன் வாழ்ந்ததற்கான பல ஆதாரங்களும் உள்ளன. பழங்காலத்தில் தாய்லாந்தின் தலைநகருக்கு அயோத்தியா என்றே பெயரிடப்பட்டிருந்தது என்பதில் இருந்தே அங்கிருந்த மக்களுக்கு அனுமனும், ராமனும் நன்கு பரிட்சியமானவர்கள் என்பதை நாம் அறியலாம்.

Hanuman Foot print

அடுத்து இலங்கையில் உள்ள ஒரு பாறையில் அனுமனின் பாத சுவடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அனுமன் பல முறை இலங்கைக்கு சென்ற நிகழ்வை பற்றி நாம் அறிவோம். அவர் முதல் முறையாக இலங்கைக்கு சென்றபோது அதிவேகத்துடன் சென்று தனது பாதங்களை பாறை மீது வைத்ததால் அங்கு அவரின் பாதம் பாறையில் பதிந்ததாக நம்பப்படுகிறது. அதன் புகைப்படம் தான் கீழே உள்ளது.

- Advertisement -

Hanuman Foot print

இதையும் படிக்கலாமே:
40 வர்ணங்களை அருளும் அனுமன் சுலோகம்

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

English Overview:
Here we have described about some place where the Lord Hanuman foot printed is till there. Lord Hanuman is a hindu God who participated in Ramayana and Bahabaratha battle.

- Advertisement -