- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாசு மேலே காசு வந்து கொட்ட, இந்த ரிங்டோன் வச்சு பாருங்களேன். நிச்சயமா காசு மழை...

காசு மேலே காசு வந்து கொட்ட, இந்த ரிங்டோன் வச்சு பாருங்களேன். நிச்சயமா காசு மழை கொட்டும்.

- Advertisement -

செல்போனை கையில் வைத்துக் கொள்ளாத மனிதரே இந்த உலகத்தில் இல்லை என்று ஆகிவிட்டது. கையில் காசு வைத்திருக்கிறோமோ இல்லையோ கட்டாயம் எல்லோர் கையிலும் ஒவ்வொரு செல்போன் இருக்கிறது. ஜோதிடத்தின் அடிப்படையில் இந்த செல்போனில் எப்படிப்பட்ட ரிங்டோன் எல்லாம் வைத்தால் பணத்தை ஈர்க்க முடியும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பதிவு தான் இது. செல்போனுக்கும் ரிங்டோனுக்கும் என்ன சம்பந்தம். இப்படி ரிங் டோனை வைத்தால் பணம் கொட்டுமா என்ன? பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பணம் தரும் செல்போன் ரிங்டோன்கள்

முதலில் சோகமாக ரிங்டோன் வைப்பது, சோகமாக காலர் டியூன் வைப்பது போன்ற பழக்க வழக்கங்களை நீங்கள் நிறுத்தி விட வேண்டும். உங்களுடைய செல்போனிலும் நவகிரகங்களின் ஆதிக்கம் இருக்கிறது. ஜீரோ வில் இருந்து 9 வரை எண்கள் அடங்கி இருப்பதால், அது பதன் கிரகத்துக்கு உரியது.

- Advertisement -

காஸ்ட்லியான செல் போன், அழகாக உங்களை புகைப்படம் பிடித்து காட்டுகிறது, இது மகாலட்சுமிக்கும் சுக்கிர பகவானுக்கும் உரியது. ராகு கேது என்று இப்படி பல அம்சங்கள் நம் கைபேசியில் மறைந்து தான் இருக்கின்றார்கள். ஆகவே கைபேசியை அவ்வளவு சுலபமாக எடை போடாதீர்கள்.

இனிமேல் உங்கள் செல்போனில் சோகமான பாட்டு சோக ரிங்டோன், சோகமான காலர் டியூனும் இருக்கவே கூடாது. குறிப்பாக சோகமான ஸ்டேட்டஸ் வைக்கவே வைக்காதீங்க. பணமழை கொட்டுவது போல சினிமா பாடல்கள் உற்சாகத்தோடு எத்தனையோ இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்றை ரிங்டோனாக, காலர் டியூன் ஆக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த ரிங்டோன் அடிக்கும்போதே நமக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும். உதாரணத்திற்கு காசு பணம் துட்டு மணி மணி, காசு மேலே காசு வந்து கொட்ட போகிற நேரம் இது போன்ற பணம் சம்பந்தப்பட்ட பாடல்களை ரிங் டோனாக வைத்துக் கொள்ளுங்கள்.

அது மட்டும் இல்லாமல் ஒரே பாட்டில் பணக்காரராக கூடிய எத்தனையோ சினிமா பாடல்கள் உற்சாகத்தை தர இருக்கிறது. அந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் நாமும் இப்படி முன்னேறி விட மாட்டோமா என்ற ஒரு பாசிட்டிவ் எனர்ஜி நமக்குள் வரும். அப்படிப்பட்ட பாடல்களை ரிங் டோனாக வையுங்கள்.

- Advertisement -

சிலபேர் ‘போனால் போகட்டும் போடா’ என்று பாடல் வைப்பார்கள். ‘வாழ்க்கையே முடிந்து விட்டது’ என்றபடியான சோக கீதம் பாடலை வைப்பார்கள். இப்படிப்பட்ட பாடல்களை கேட்கும் உங்களுக்கும் தரித்திரம், இந்த பாடல்களை கேட்கும் அடுத்தவர்களும் தரித்திரம் தான் பிடிக்கும். இதெல்லாம் கூடவா ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று சிலருக்கு சந்தேகம் வரும்.

நாம் அன்றாடம் கேட்கும் விஷயங்கள், சொல்லும் விஷயங்கள் இவைகள் எல்லாம் தான் ஜோதிடம். இவைகள் எல்லாம் பாசிட்டிவாக நமக்கு மாறிவிட்டால், நாம் செய்யும் காரியமும் பாசிட்டிவ் தான். நமக்கு கிடைக்கக்கூடிய சக்சஸும் சீக்கிரம் கிடைக்க தொடங்கி விடும். சினிமாவில் காசு சம்பந்தப்பட்ட பாடல்களுக்கா பஞ்சம்.

ஒரே பாட்டில் பணக்காரர் ஆவதற்கு தமிழ் சினிமாவை விட்டால் வேறு எந்த மொழியிலும் சூப்பரான பாட்டு கிடையாது. அது நமக்கே நன்றாக தெரியும். அப்படி நல்ல ஊக்குவிக்கக் கூடிய பாடல்களை ரிங்டோனாக வைத்து தினமும் கேட்டுப்பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பணம் கொட்டோ கொட்டென கொட்டிக் கொண்டே தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை நாளை பெருமாளுக்கு இதை வைத்து வழிபட்டால் சகல செல்வத்தையும் தாராளமாக பெறலாம்.

இவ்வளவு சிம்பிளான ஐடியாவை யாராவது ட்ரை பண்ணி பார்க்காமல் இருப்பாங்களா. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ஒர்க் அவுட் ஆச்சுன்னா சந்தோஷமா இருங்க. இந்த சின்ன நல்ல விஷயத்தை உங்களுடைய நண்பர்களுக்கும் சொல்லுங்க. அவங்களும் சந்தோஷமாக இருக்கட்டும்.

சற்று முன்