மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் பண பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. நீண்ட நாள் தடைபட்டு வந்திருந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகள் எடுக்கும் போது தடுமாற்றம் இருக்கும். இறைவழிபாடு செய்யுங்கள். புது முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். அனாவசியமாக நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். உங்கள் திறமை சரியான நேரத்தில் வெளிப்படும். உங்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அசதி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்களுக்குடைய கேலி கிண்டலுக்கு, அமைதியாக சரியான பதிலடி கொடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மனநிறைவும் நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக பேசாதீங்க. புது மனிதர்களை முழுசாக நம்பாதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்ப விஷயங்களை வெளி ஆட்களோடு பகிர்ந்து கொள்ள கூடாது. கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களை பார்க்கும் போது உடன் இருப்பவர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல முன் உதாரணமாக திகழ்வீர்கள். நல்ல மனிதர் என்ற பெயரையும் இந்த பிரபஞ்சம் இன்று உங்களுக்கு வாங்கி கொடுக்க போகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்லது நடக்கும். உடன் இருப்பவர்களால் நிறைய ஆதாயங்கள் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம், மனதிற்கு நிறைவே கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். நீண்ட தூர பயணங்களால் மனநிறைவு ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ஆனால் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை இறைவன் கொடுத்து விடுவார், தக்க சமயத்தில், தக்க உதவி கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பொருட்களை முன்கூட்டியே எடுத்து உங்களுடைய பையில் வைத்துக் கொள்ளுங்கள். முன் கோபம் வேண்டாம். அவசரம் வேண்டாம் நிதானமாக இருந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். உறவினர்களின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த பாரத்தை கீழே இறக்கி வைப்பீர்கள். மன நிம்மதி கிடைக்கும் நாள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.