- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஒரு வாரத்தில் நரை முடியை எல்லாம் கருப்பாக மாற்றும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார்...

ஒரு வாரத்தில் நரை முடியை எல்லாம் கருப்பாக மாற்றும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்வது எப்படி?

- Advertisement -

நிறைய பேருக்கு சின்ன வயசிலேயே இந்த இளநரை பிரச்சினை இருக்கிறது. சில பேருக்கு 30 வயதை கடக்கும் போது இளநரை வந்துவிடும். உங்களுக்கு எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இந்த குறிப்பை பின்பற்றும்போது இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும்.

தலைமுடியும் அடர்த்தியாக ஆரோக்கியமாக வளரும். பல வகையான நற்பலன்களை கொடுக்கும் அந்த செம்பருத்தி இலை ஹேர் பேக்கை நம்முடைய வீட்டில் எப்படி தயார் செய்வது. அழகு குறிப்பை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை

இதற்கு ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலை தேவை. உங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக முடி இருந்தால் இந்த செம்பருத்தி இலையை கூடுதலாக எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஊற்றி கலந்து சூடு செய்ய டீ டிகாஷன் தேவை. 2 டம்ளர் அளவு தண்ணீரில், 3 ஸ்பூன் டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அது அப்படியே இருக்கட்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கழுவி சுத்தம் செய்த செம்பருத்தி பூ இலைகளை போடவும். அதில் இந்த டீ டிட்டிகாசனை ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். மீதம் டிகாசன் இருக்கும் அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து, அரைத்த செம்பருத்தி பூ விழுதை அதில் போட்டு அடுப்பை பற்ற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுப்பு சிம்மில் இருக்கட்டும். மீதம் இருக்கும் டிகாசனை, கொஞ்சம் கொஞ்சமாக கடாயில் இருக்கும் செம்பருத்திப்பூ விழுதில் ஊற்றி, கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த விழுது தண்ணீரை எல்லாம் இழுத்து சுண்டி அடர் பச்சை நிறத்திற்கு வந்திருக்கும். பார்ப்பதற்கு கரும் பச்சையாக தெரியும்.

அப்போது அடுப்பை அணைத்துவிட்டு இந்த பேக்கை அப்படியே மூடி வைத்து விடுங்கள். ஒருநாள் இரவு முழுவதும் அப்படியே இரும்பு கடாயில் இருக்கட்டும். மறுநாள் எழுந்து பார்த்தால் அந்த பேக் கருப்பு நிறமாக மாறி இருக்கும். ரொம்பவும் திக்காக அந்த பேக் இருக்கும். தலையில் அப்ளை செய்ய சிரமம் இருக்கும்.

- Advertisement -

இதில் கொஞ்சம் டீ டிகாஷனை ஊற்றி கலந்து தலையில் தடவும் பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தலையில் எண்ணெய் அழுக்கு எதுவுமே இருக்க கூடாது. சுத்தமாக தலைக்கு குளித்து காய வைத்த முடியின் மேல் இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்யுங்கள்.

வெள்ளை நிற முடி இருக்கும் இடத்தில் கவனம் எடுத்து அப்ளை செய்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரை ஊற்றி தலையை அலசி விட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் என்று, தொடர்ந்து இதை செய்து வந்தால் உங்கள் நரைமுடி எல்லாம் கருப்பாக மாறும்.

இதையும் படிக்கலாமே: ஒரே வாரத்தில் உங்க கலரை இரு மடங்கு அதிகரிக்க இந்த இரண்டு பொருள் இருந்தா போதும்.

புதிய முடிகள் கருப்பாக வளரும். முடி உதிர்வு நன்றாக குறையும். முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க மூன்று மாதத்தில் பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும். அழகு குறிப்பு தேவை என்பவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்