நாளை நவராத்திரியின் பத்தாவது நாள். அதாவது 9 நாட்கள் மட்டும்தான் நவராத்திரி என்று சொல்லுவோம். ஆனால் நவராத்திரி நிறைவடைய கூடிய இந்த பத்தாவது நாளை தான் விஜயதசமியாக கொண்டாடுகின்றோம். வெற்றி நாள். இந்த நாளில் புது விஷயங்களை எந்த நேரத்தில் தொடங்குவது.
பிள்ளைகளை எந்த நேரத்தில் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது, என்பதை பற்றிய ஆன்மீக சார்ந்த தகவலையும், நாளைய தினம் வீட்டின் நிலை வாசல் படியில் என்ன வார்த்தைகளை எழுதினால் வீட்டில் வெற்றி மேல் வெற்றி குவிய தொடங்கும் என்பதை பற்றியும் ஆன்மீகம் சார்ந்த சில விஷயங்களை இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நாளை புதிய தொடக்கத்திற்கு நல்ல நேரம்
நாளை காலை 6.00 மணியிலிருந்து 8.50 வரை நல்ல நேரம். பிறகு 10.40 இல் இருந்து 1.00 மணி வரை நமக்கு நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது. காலையில் இந்த நல்ல நேரத்தில் நீங்கள் புதுசாக தொடங்க நினைக்கும் விஷயத்தை தொடங்கலாம். அது எந்த விஷயமாக இருக்கட்டும் நாளை நீங்கள் அந்த நல்ல விஷயத்தை தொடங்கினால் உங்களுக்கு அதில் நிச்சயம் வெற்றி கிட்டும்.
மாலை வீட்டில் பூஜை செய்ய வேண்டும் அல்லது வாகனங்களுக்கு பூஜை செய்ய வேண்டும் என்றால், மாலையில் புது கணக்கு வழக்குகளை தொடங்க வேண்டும் என்றால் மாலையில் 6.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் உங்களுடைய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். தவறு கிடையாது.
விஜயதசமி அன்று நிலை வாசலில் எழுத வேண்டிய வார்த்தைகள்
நாளைய தினம் சரஸ்வதி தேவியை நினைத்துக்கொண்டு, உங்களுடைய நிலை வாசலில் ‘சுபம் லாபம்’ என்ற இரண்டு வார்த்தைகளை எழுத வேண்டும். மேலே சொன்ன நல்ல நேரத்திலேயே இந்த வார்த்தைகளை நிலை வாசலில் எழுதி விடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் மஞ்சள்தூள் போட்டுக்கோங்க.
அதில் பன்னீர் ஊற்றி வாசமாக கலந்து கொள்ளுங்கள். இந்த மஞ்சளை உங்களுடைய வலது கை மோதிர விரலால் தொட்டு, கதவில் சுபம் லாபம் என்ற வார்த்தைகளை எழுதி சுவஸ்திக் சின்னத்தை வரைந்து வைக்க வேண்டும். நாளைய தினம் இந்த வார்த்தைகள் உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்த்துக் கொடுக்கும்.
நீங்கள் தொடங்கக் கூடிய நல்ல விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு வெற்றி அளிக்க, லாபம் கொடுக்க இந்த வார்த்தையிலிருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் உதவியாக இருக்கும். இதே போல புதுசாக ஏதாவது கணக்கு தொடங்கப் போறீங்க, நோட்டுப் புத்தகத்தை வைத்து சரஸ்வதியின் பாதங்களில் வழிபாடு செய்திருக்கிறீர்கள் என்றால், அந்த நோட்டுப் புத்தகத்திலும் மஞ்சளால் சுவஸ்திக் சின்னம் வரைந்து சுபம் லாபம் என்று எழுதி புதுசாக கணக்கு தொடங்கினால் அந்த கணக்கு வழக்குகள் உங்களுக்கு லாபகரமாக அமையும்.
இதையும் படிக்கலாமே: நாளை ஆயுத பூஜை வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம் என்ன?
நாளைய தின விஜயதசமி அன்று சிறப்பான பலன்களைப் பெற மேல் சொன்ன வழிபாட்டு முறைகள் நிச்சயம் உங்களுக்கு பலன் உள்ளபடி அமையும் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.