- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇந்த ஒரு பேக் நம்முடைய தலைமுடியையும் முகத்தையும் ஆரோக்கியமாக பாதுகாக்கும்.

இந்த ஒரு பேக் நம்முடைய தலைமுடியையும் முகத்தையும் ஆரோக்கியமாக பாதுகாக்கும்.

- Advertisement -

ஒருவர் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும்போது முதலில் அவர்கள் முகத்திற்கும் தலைமுடிக்கும் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தலைமுடி ஆரோக்கியமாக கருமையாக இருக்க வேண்டும் என்றும் அதேசமயம் முகத்தில் எந்தவித கரும்புள்ளிகளும் முகப்பருக்களும் இல்லாமல் வெண்மையாக இருக்க வேண்டும் என்றும் தான் ஆசைப்படுவார்கள். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இவை இரண்டிற்கும் ஒரே பேக்கை எப்படி தயார் செய்து உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.

முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவற்றை நீக்குவதற்கும் முகத்தை மேலும் பிரகாசமாக்குவதற்கும் அடுத்ததாக தலைமுடி உதிர்தலை நிறுத்துவதற்கும் தலைமுடியை வேகமாக வளர வைப்பதற்கும் என்று ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு பேக்குகளை நாம் தயார் செய்து உபயோகப்படுத்துவோம். இந்த சிரமம் இனிமேல் வேண்டாம். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக விளங்கக்கூடிய ஒரு பேக்கை தான் இன்று பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இரண்டு ஸ்பூன் உளுந்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உளுந்து கருப்பு உளுந்தாக இருந்தால் அது மேலும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும். கிடைக்காதவர்கள் வெள்ளை உளுந்தை கூட பயன்படுத்தலாம். இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் குறைந்தது ஒரு 5 மணி நேரமாவது ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த இந்த உளுந்து வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த விழுதை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து இந்த பேக்கை எடுத்து தலைமுடியில் தடவி விட்டு அப்படியே முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். இந்த பேக்கை தலையில் தடவுவதற்கு முன்பாக தலையில் கண்டிப்பான முறையில் எண்ணெய் வைக்க வேண்டும். அதேபோல் முகத்திற்கு தடவுவதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு ஷாம்புவோ சோப்பு எதுவும் போடாமல் வெறும் சாதாரண தண்ணீரில் கழுவி கழுவ வேண்டும். இந்த பேக்கை நம்முடைய உடல் முழுவதுமே நாம் உபயோகப்படுத்தலாம். அவ்வாறு செய்யும்பொழுது தலை முதல் பாதம் வரை நம்முடைய உடலின் நிறம் என்பது சீராக இருக்கும். மேலும் தோல் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் நமக்கு ஏற்படாது.

உளுந்து மற்றும் வெந்தயத்தில் நம் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. மேலும் முகத்தில் இதை உபயோகப்படுத்தும் பொழுது பருக்களோ கரும்புள்ளிகளோ எதுவும் ஏற்படாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் முகத்திற்கு ஒருவித பிரகாசத்தை தரும். தலைமுடிக்கு பயன்படுத்தும் போது தலைமுடி உதிர்தல் என்ற பிரச்சனை முற்றிலும் நின்று முடி வளர்ச்சியை தூண்டுவிக்கும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் திட்டு திட்டாக இருக்கும் கருமை நீங்க ஃபேஸ் பேக்.

எளிமையான முறையில் சிரமம் இல்லாமல் தயாரிக்க கூடிய இந்த ஒரு பேக்கை நாம் பயன்படுத்தினால் நம் தலை முதல் பாதம் வரை இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.

சற்று முன்