முகம் கருப்பாக உள்ளவர்கள் முகத்தை நிறமாக மாற்ற எத்தனையோ வகை பேக்குகளை முயற்சி செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் எல்லா பேக்கும் எல்லோருக்கும் சரியாக பொருந்துமா என்றால் அது பொருந்தாது என்று தான் கூற வேண்டும். ஒரு சில ஃபேஸ் பேக் ஒரு சில சருமத்தினருக்கு ஒத்து வராது. ஆனால் இந்த முறையில் தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் எல்லா வகை சருமத்தினருக்கும் பொருந்தக் கூடிய ஒரு அருமையான ஃபேஸ் பேக்காக இருக்கும். இதை எப்படி தயாரிப்பது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்
கருந்திட்டுகள் முழுவதுமாக மறைந்து முகம் வெள்ளையாக்கும் இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க நமக்கு தேவையான முக்கியமான பொருள் ஸ்ட்ராபெர்ரி. நன்கு பழுத்த ஸ்ட்ராபெர்ரி பழங்களாக பார்த்து மூன்று எடுத்து அதை மசித்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இதற்கு தண்ணீர் சேர்க்கக் கூடாது.
உங்கள் முகத்தை நன்றாக துடைத்து சுத்தம் செய்த பிறகு இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள். இந்த பேக் போடும் போது முகத்தை மசாஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. முகம் முழுவதும் எண்ணெய் பசையாக இருப்பவர்கள் தேனிற்கு பதிலாக பால் கலந்து இதை பயன்படுத்தலாம்.
இதில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரி முகத்தில் ஆங்காங்கே இருக்கும் கருந்திட்டுகள் அனைத்தையும் நீக்கி முகம் முழுவதும் ஒரே சீராக வென்மையாக மாற்றும் தன்மை உடையது. தேன் முகத்தை ஈரப்பசை உடன் வைத்திருப்பதுடன், முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை வற்ற விடாமல் அதே நேரத்தில் முகம் முழுவதும் வழு வழுப்பாக இளமை தோற்றத்தில் வைத்து இருக்கும். கஸ்தூரி மஞ்சள் உடனடியாக நிறத்தை அதிகரிக்க கூடிய தன்மை உடையது.
அதே போல் இதில் தேனிற்கு பதிலாக பால் சேர்ப்பதும் முகத்தில் உள்ள அழுக்குகள் முழுவதுமாக நீங்கி முகம் முழுவதும் பளிச்சென்று மாற அதிகளவில் உதவி செய்யும். இதை அனைவரும் உபயோகப்படுத்தலாம். இதே பேக்கில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, கால் டீஸ்பூன் அரிசி மாவு கலந்து இதை ஒரு பேஸ்ட் பதத்திற்கு கொண்டுவந்து முகத்திற்கு பேக் போலவும் போட்டுக் கொள்ளலாம். இதுவும் முகத்தை நல்ல நிறம் மாக்கி கொடுக்கும்.
இந்த பேக்கை அனைவருமே பயன்படுத்தலாம். ஆண்கள் பயன்படுத்தும் போது கஸ்தூரி மஞ்சளை மட்டும் தவிர்த்து விட்டால் போதும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட பயன்படுத்தலாம். இதனால் எந்த விதமான ஒரு பக்க விளைவும் ஏற்படாது. உடனடியாக முகத்தை நிறமாக்கவும் அதே நேரத்தில் எந்த பக்க விளைவும் இல்லாமல் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: முகம் மற்றும் உடலின் நிறத்தை அதிகரிக்க உதவும் மாஸ்க்.
அதிக அழகை கொடுக்கக் கூடிய அருமையான இந்த பேக்கை நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.