- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஉடனடி பிரகாசத்தை தரக்கூடிய ஃபேஸ் பேக்.

உடனடி பிரகாசத்தை தரக்கூடிய ஃபேஸ் பேக்.

- Advertisement -

அழகை விரும்பாத நபர்கள் என்று யாராவது இருக்கிறார்களா? ஒவ்வொரு பெண்ணும், ஆணும் ஏதாவது ஒரு ரூபத்தில் அழகாக தான் இருப்பார்கள். அப்படி அழகிற்கு முக்கியத்துவம் என்பது நம்முடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகத்தின் அழகை மேம்படுத்தவும் அதேசமயம் சூரிய ஒளிகளால் ஏற்பட்ட கருமைகள் நீங்கவும் பொலிவுடன் திகழ்வதற்கும் எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக சிறுவயதில் அதிக நிறத்துடன் இருப்பவர்கள் வளர வளர தங்களின் நிறம் மங்கிப் போய் கருத்துப் போவார்கள். அதற்கு காரணம் சூரிய கதிர்களால் ஏற்படக்கூடிய கருமை. இவ்வாறு இருப்பவர்கள் தங்கள் இயற்கையான நிறத்தை பெறுவதற்கு கெமிக்கல் நிறைந்த ஃபேஸ் க்ரீமை விளம்பரங்களில் பார்த்து ஆசைப்பட்டு உபயோகப்படுத்தி அதனால் முகத்தின் இயற்கையான அழகை இழந்து விடுவார்கள். சரி இப்பொழுது அந்த சூரிய கதிர்களால் ஏற்பட்ட கருமைகளை நீக்கி மேலும் முகத்தை அழகாக்க கூடிய ஃபேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

இதற்கு நமக்கு பச்சை பயறு மாவு தேவைப்படும். கடைகளிலே இந்த மாவு கிடைத்தாலும் வீட்டில் தயாரிக்கும் பொழுது மிகவும் நைசாக அரைக்காமல் சிறிது நெரு நெருவென்று அரைத்துக் கொள்வது நல்லது. அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் சோப்பிற்கு பதிலாக இந்த பச்சை பயறை தான் பயன்படுத்தி குளித்தார்கள். உடலில் இருக்கக்கூடிய இறந்த செல்களையும் அழுக்குகளையும் நீக்குவதுடன் ஒருவிதப் பிரகாசத்தை தரக்கூடியதாக இந்த பச்சை பயிறு விளங்குகிறது.

அடுத்ததாக இந்த ஃபேஸ் பேக்கில் நாம் சேர்க்கப் போகும் பொருள்தான் ஆரஞ்சு பழ ஜூஸ். ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் அது நம்முடைய முகநிறத்தை மேம்படுத்த உதவுகிறது. அடுத்ததாக நாம் சேர்க்கக்கூடிய பொருள்தான் தேங்காய் எண்ணெய். பொதுவாக எந்த ஃபேஸ் பேக்கை நாம் பயன்படுத்தினாலும் அதில் மாய்சுரஸ் சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால் தான் இயற்கையிலேயே இருக்கக்கூடிய எண்ணெய் சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி எடுக்காமல் பாதுகாக்க முடியும்.

- Advertisement -

ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சைபயறு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சுளை ஆரஞ்சு பழத்தை எடுத்து அதில் பிழிந்து விடுங்கள். அடுத்ததாக கால் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இதை முகத்தில் நன்றாக தடவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை சிறிது ஸ்கிரப் செய்து கழுவி விட வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தினாலே போதும். படுக்க செல்வதற்கு முன் இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்தி முகத்தை சுத்தம் செய்த பிறகு உறங்குவது மேலும் பலனை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை முடியை கருப்பாக மாற்ற சூப்பர் டிப்ஸ்.

இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உடனடியான பிரகாசமும் பொலிவும் ஏற்படும். நம் கண்களை நம்மால் நம்ப முடியாத அளவிற்கு ஒரு வித பொலிவு ஏற்படும்.

சற்று முன்