வெள்ளை முடியை கருப்பாக மாற்ற சூப்பர் டிப்ஸ்.

hair3
- Advertisement -

வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. சில பேருக்கு ஆங்காங்கே ஒன்னு இண்டு வெள்ளை முடிகள் எட்டிப் பார்க்கும். அழகாக ஒரு விசேஷத்திற்கு கிளம்பி இருப்பார்கள். அந்த ஒன்னு ரெண்டு வெள்ளை முடி அவர்களுக்கு கூடுதல் அழகை மட்டும் தான் கொடுக்கும். ஆனால் கண்ணாடியை பார்க்கும்போது அதைத்தான் நாம் மறைக்க வேண்டும் என்று நினைப்போம்.

அதை மறைக்காதீங்க. உங்களுடைய வயத்திற்கு அழகு கொடுக்கக் கூடிய விஷயம் அது. அதெல்லாம் இல்லைங்க. அதை மறைத்து தான் ஆக வேண்டும். என்றால் நீங்கள் டை அடிக்கலாம், அல்லது வேறு ஏதாவது ஹேர் கலரிங் செய்து கொள்ளலாம். ஆனால் அது எல்லாமே கெமிக்கல் சேர்ந்த விஷயங்கள்.

- Advertisement -

மற்ற முடிகளையும் சேர்த்து நரைமுடியாக மாற்றக்கூடிய வேலைகளை தான் அந்த செயற்கையான பொருட்கள் செய்யும். சரி இப்படி எட்டிப் பார்க்கும் வெள்ளை நிற முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக ஏதாவது ஐடியா இருக்குதா. இருக்குதுங்க, அது என்ன என்பதைத்தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வெள்ளை முடியை இயற்கையாக கருப்பாக மாற்ற அழகு குறிப்பு

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் தேங்காய் நார். தேங்காயை உரிக்கும் போது நாம் எல்லோர் வீட்டிலும் இந்த நார் கிடைக்கும். அந்த நாரை தூக்கி குப்பையில் போடாதீங்க. அந்த நாரை லேசாக காய வச்சிருங்க. ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு நெருப்பு பற்ற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதில் வத்திக்குச்சியை கிழித்து போட்டால் போதும். அது தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆகிவிடும். குழந்தைகள் இல்லாத இடத்தில் பார்த்து பக்குவமாக இதை செய்யுங்கள். சாம்பலான பிறகு ஆரிய பிறகு, அந்த சாம்பலை சேகரித்து ஒரு சின்ன டப்பாவில் போட்டுக்கோங்க. தேவையான போது கொஞ்சமாக அந்த கருப்பு நிற சாம்பலை எடுத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி குழைத்தால் டை போலவே நமக்கு கிடைக்கும்.

அதை எடுத்து லேசாக வெள்ளை முடி இருக்கும் இடத்தில் தடவி விட்டால் போதும். அழகாக அந்த வெள்ளை முடி உடனடியாக கருப்பாக மாறும். தலையை சுற்றி ஆங்காங்கே வெள்ளை முடி இருக்கு என்ன பண்றது. இதை உள்ளங்கைகளில் வைத்து நன்றாக தேய்த்து அப்படியே தலை முழுவதும் தேங்காய் எண்ணெய் போல தடவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளை முடிகள் எல்லாம் கருப்பாக இரண்டே நிமிடத்தில் மாறிவிடும். சின்ன பிரஷ் இருந்தால் கூட அதில் தொட்டு இதை நீங்கள் வெள்ளை முடி மேலே தடவிக் கொள்ளலாம் தவறு கிடையாது. ஆண்களும் இதை பயன்படுத்தலாம். பெண்களும் இதை பயன்படுத்தலாம். ஆனால் பிறகு தலைக்கு குளிக்கும் போது இந்த கருமை நிறம் போய்விடும்.

மறுபடியும் வெள்ளை முடி தெரியத்தான் செய்யும். நரைமுடியை மறைக்க இது ஒரு பாதிப்பு இல்லாத அழகு குறிப்பு. அவ்வளவுதான். தேவை என்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த மையை அப்படியே சின்ன பிள்ளைகளுக்கு பொட்டு வைக்கவும் நாம் பயன்படுத்தலாம். கருப்பு மைக்கு பதிலாக இதை வைத்தால் குழந்தைகள் சருமத்திற்கு எந்த அலர்ஜியும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: முகச்சுருக்கத்தை நீக்கும் ஃபேஸ் பேக்.

வசம்பை சுட்டு தான் சில பேர் அதை குழந்தைகளுக்கு மையாக வைப்பார்கள் இருந்தாலும் இப்படியும் ஒரு ஐடியா இருக்கு. இந்த குறிப்புகளை பின்பற்றிய ஆக வேண்டும் என்று சொல்ல வரவில்லை. இப்படி ஒரு ஐடியா இருக்குதுன்னு தெரிஞ்சு வச்சுக்கோங்க அவ்வளவுதான்.

- Advertisement -